**கன்னி - எதையும் சாதித்து காட்டக் கூடியவர்கள் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/kanni-achievers-jeevitha-sureshkumar-retro-aanmeegam/

கன்னி ராசி மற்றும் பிளட் குரூப்புகளின் குணாதிசயங்கள், வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் கல்யாண பொருத்தங்கள் பற்றி விரிவான விளக்கம்.

## Key Takeaways

- கன்னி ராசி மக்களுக்கு திட்டமிடல் மற்றும் பிராக்டிக்கல் அணுகுமுறை மிக முக்கியம்.
- பிளட் குரூப்புகள் மனித குணாதிசயங்களை புரிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாகும்.
- ஏ பிளட் குரூப்பில் பிறந்த கன்னி ராசி மக்கள் மிகுந்த டிசிப்ளின் மற்றும் ஸ்ட்ராட்டஜி திறன்கள் கொண்டவர்கள்.
- கன்னி ராசி மக்களின் வாழ்க்கை முறைகள் லாஜிக் மற்றும் கிரியேட்டிவிட்டி ஆகியவற்றின் சமநிலையை கொண்டவை.
- பிளட் குரூப்புகள் மற்றும் ராசி அமைப்புகள் கல்யாண பொருத்தங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

## What the video covers

- கன்னி ராசி மற்றும் அதன் பிளட் குரூப்புகளின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் மனநிலைகள் பற்றி விவாதம்.
- ஒவ்வொரு பிளட் குரூப்புக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை நடைமுறைகள் உள்ளன.
- ஏ, பி, ஏபி, ஓ போன்ற பிளட் குரூப்புகளின் தனித்துவமான பண்புகள் மற்றும் வாழ்க்கை நோக்கங்கள்.
- கன்னி ராசி மக்களின் திட்டமிடல் திறன், பிராக்டிக்கல் அணுகுமுறை மற்றும் சுயநலம் பற்றிய விளக்கம்.
- பிளட் குரூப்புகளின் அடிப்படையில் வாழ்க்கை மற்றும் கல்யாண பொருத்தங்கள் எப்படி இருக்கும் என்பதற்கான பார்வை.
- ராசி, லக்னம், நட்சத்திரம் ஆகியவற்றின் வாழ்க்கை பாதையில் தாக்கம் மற்றும் அவற்றின் தொடர்பு.
- கன்னி ராசி மக்களின் கிரியேட்டிவிட்டி, லாஜிக் மற்றும் சமூக உறவுகளில் காட்டும் தன்மை.
- பிளட் குரூப்புகளின் அடிப்படையில் மனித குணாதிசயங்களை புரிந்துகொள்ளும் முக்கியத்துவம்.
- சித்தர்கள் மற்றும் பாரம்பரிய ஜாதகக் கருத்துக்களின் பின்புலம் மற்றும் அவற்றின் உலகளாவிய தாக்கம்.
- கன்னி ராசி மக்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் அவர்களின் சமூக மற்றும் தொழில் வாழ்க்கை பற்றிய விரிவான விளக்கம்.

Answers

## Questions about this video

கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்ற ரத்த வகை எது?

கன்னி ராசிக்காரர்களுக்கு 'ஏ' ரத்த வகை மிகவும் பொருத்தமானது என்று இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஏ' ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு சிறந்த துணையாக இருப்பார்கள்.

ஓ ரத்த வகையின் முக்கிய குணாதிசயங்கள் என்ன?

ஓ ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் ஒரு போர்வீரர் குணம் கொண்டவர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனப்பான்மை கொண்டவர்கள். எந்த ஒரு செயலையும் முடிக்கும் வரை விடமாட்டார்கள்.

ராசி, லக்னம், நட்சத்திரம் ஆகியவை ஒருவரின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன?

லக்னம் ஒருவரின் வாழ்க்கையின் திசையைச் சொல்லும். ராசி அந்த திசைக்குள் ஒருவரின் மனநிலையை விவரிக்கும். நட்சத்திரம் ஒருவரின் வாழ்க்கையின் சூட்சுமங்களை வெளிப்படுத்தும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:02

Speaker A

பிளானிங்ஸ் இருக்கும். ஃபெயிலியர்ஸ் வந்தாலும் அக்செப்ட் பண்ணிக்கக்கூடிய ஒரு மைண்ட்செட் வந்து ஓல இருக்க கன்னிக்கும் இருக்கும். பெர்ஃபெக்ட் மேட்ச்ன்னு சொல்லிட்டேன். ஏ வந்து ஒரு கன்னிக்கு பெர்ஃபெக்ட்டான மேட்ச். ஒரு ஏவும் ஏவும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு வச்சுக்கோங்க.

00:14

Speaker B

இவங்களுக்கு ஏவும் ஏபியும் மட்டும்தான் செட் ஆவாங்க.

00:17

Speaker A

கன்னில இருக்கிற ஏபி வந்து ஹைலி ஜீனியஸ். இவங்களை மாதிரி ஒரு பிளான் பக்காவா யாராலுமே போட முடியாது.

00:24

Speaker C

ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்ச்சியில் நம்முடன் இருப்பவர் அஸ்ட்ராலஜர், ரைட்டர் திருமதி ஜீவிதா சுரேஷ் அவர்கள்.

00:31

Speaker A

வணக்கம்.

00:31

Speaker C

எப்படி இருக்கீங்க?

00:32

Speaker A

நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?

00:33

Speaker C

ரொம்ப நல்லா இருக்கேன்.

00:35

Speaker C

இப்போ ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்குல்ல. அதே மாதிரி ஒவ்வொரு பிளட் குரூப்புக்கும் ஒரு குணாதிசயம் இருக்கு அப்படிங்கிற ஒரு விஷயத்தை நீங்க சொல்லிருந்தீங்கல்ல.

00:43

Speaker C

சோ அது மாதிரி அவங்கனா இப்ப ஒரு ஓ பாசிட்டிவ் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம்னா அவங்களோட குணாதிசயம் எப்படி இருக்கும்? அவங்களோட கேரக்டர் எப்படிப்பட்டது அப்படிங்கிற மாதிரி எல்லா பிளட் குரூப்புக்கும் நீங்க கொஞ்சம் டீடைலா சொல்லுங்க. அதுக்கப்புறம் நம்ம ராசிக்குள்ள போலாம்.

00:52

Speaker A

பொதுவா நம்ம வந்து ராசி, லக்னம், நட்சத்திரம் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்ம பார்ப்போம். லக்னம் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம் அப்படின்னா நம்மளுடைய வாழ்க்கையோட திசையை லக்னம் சொல்லும். ராசி அப்படிங்கிறது அந்த திசைக்குள்ள நம்முடைய மனநிலைமை என்ன அப்படிங்கறது சொல்லும்.

01:05

Speaker A

நட்சத்திரம் என்ன அப்படிங்கறது நம்ம வாழ்க்கையோட சூட்சுமங்களை அப்படிங்கிற ஒரு விஷயத்தை சொல்லும். இது எல்லாமே ஒன்னோட ஒன்னு கனெக்டட் அப்படிங்கிறப்போ நம்மளுடைய ரத்தமும் இதுல சம்பந்தப்பட்டது.

01:13

Speaker A

எந்த டிஎன்ஏக்குள்ள நம்ம பிறந்து வரோம். இந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பிளட் குரூப் நம்ம கேரி ஆன் பண்ணிட்டு வந்துட்டு இருக்கணும்னு ஒரு விஷயம் இருக்கு. அப்போ இந்த பிளட்ங்கிற விஷயம் என்ன பண்ணும் அப்படின்னா

01:23

Speaker A

இந்த ராசிகளுக்குன்னு சில தத்துவங்கள் அப்படிங்கறது ஒன்னு உண்டு இல்லையா? இந்த வாழ்க்கை அமைப்புன்னு ஒன்னு இருக்கு. அப்போ ஒரு பர்டிகுலர் பிளட் குரூப்

01:32

Speaker A

இந்த ஒரு ராசி அமைப்பினருக்கு வரப்போ இது எப்படி ரியாக்ட் பண்ணப்போகுது, ரெஸ்பான்ட் பண்ணப்போகுது.

01:40

Speaker A

இது எப்படி ரியாக்ட் பண்ணப்போகுது அப்படிங்கறதுதான் நம்ம பார்க்கப்போறோம்.

01:43

Speaker A

இப்போ ஓ அப்படின்னு எடுத்துக்குறோம் அப்படின்னா ஓக்கு வந்து ஒரு வாரியர் குணம் அப்படிங்கறது ஒன்னு உண்டு.

01:48

Speaker A

என்ன எதுனே கேட்காம எந்த எக்ஸ்பெக்டேஷனுமே இல்லாம ஹெல்ப் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது ஓக்கு இருக்கும். எப்படி இருந்தாலும் அதை முடிச்சிருவாங்க அப்படிங்கறது ஒன்னு ஒரு ஓக்கு அந்த கேரக்டர் உண்டு.

01:57

Speaker A

இப்போ ஏ எடுத்துக்குறோம் அப்படின்னு வச்சுக்கோங்களேன். ஏ கிட்ட வந்து ஒரு டிசிப்ளின் அப்படிங்கிற ஒரு விஷயத்தை வந்து ஏ ஃபாலோ பண்ணும்.

02:04

Speaker A

ஒரு ரெஸ்பான்சிபிலிட்டின்னு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டாங்க ஏ அப்படின்னா முடிக்காம விடமாட்டாங்க அப்படிங்கறதுனால அந்த ஏவை வந்து கொஞ்சம் ஃபர்ஸ்ட் ஆபீசர் லெவல் அப்படிங்கிற மாதிரி வச்சாங்க.

02:12

Speaker A

நெக்ஸ்ட் பார்க்குறப்போ பி. பிக்கு ஒரு குணாதிசயம் என்னன்னா கிரியேட்டிவிட்டி அதிகம்.

02:18

Speaker A

சுயநலமும் அதிகம். ஃபர்ஸ்ட் தனக்கு என்ன அப்படிங்கிற ஒரு விஷயத்தை இந்த பி பார்க்கும்.

02:22

Speaker A

இந்த ஏ பி தான் வந்து உள்ளதுலயே வந்து ஸ்மார்ட்டான ஒரு பிளட் குரூப் அப்படின்னு சொல்லலாம். ஏன் அப்படின்னா இவங்க பயங்கரமான ஒரு ஸ்ட்ராட்டஜிஸ்ட்.

02:30

Speaker A

சமயம் பிளான் போடக்கூடியவங்க.

02:32

Speaker A

ஈஸியா போரும் இவங்களுக்கு அடிச்சிரும். அந்த ஏவுடைய கேரக்டரும் பியோட கேரக்டரும் சேர்ந்ததுதான் இந்த ஏபி அப்படிங்கறது.

02:40

Speaker A

ஏபி எல்லாம் எப்படி இருந்தாங்கன்னா ரொம்ப இந்த ஹை லெவல் இந்த கிட்டத்தட்ட நம்ம சகுனி ரேஞ்சுக்கே சொல்லலாம். அந்த அளவுக்கு பிளான் போடக்கூடியவங்க. பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் ரெண்டு விஷயத்துக்குமே வந்து இந்த ஏபி அப்படிங்கறவங்க யூஸ் ஆனாங்க.

02:51

Speaker A

அந்த டைம்ல எல்லாம் வந்து ஃபர்ஸ்ட் ஜாப்பனீஸ் தான் கண்டுபிடிச்சாங்க அப்படின்னுலாம் சொன்னது உண்டு. ஆனா கண்டுபிடிச்சது யாருன்னா நம்மளுடைய சித்தர்கள். போகர் வந்து

03:01

Speaker A

நிறைய உலகம் சுத்துனார். ஜப்பான் போனார், சைனா போனார் இப்படி எல்லாம் போனப்போ அவருடைய ஓலைச்சுவடுகள்ல இருந்த ஒரு விஷயம் தான் இது. ரத்தம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். வாதம், பித்தம் இதெல்லாம் சேர்ந்து வச்சு இந்த இந்த ரத்த அமைப்புல இருக்கவங்க இப்படித்தான் இருப்பாங்க அப்படின்ன உடனே

03:14

Speaker A

அந்த டைம்ல வாருக்கு சூஸ் பண்ணாங்க இல்லையா? வாருக்கு சூஸ் பண்ணப்போ இந்த கேட்டகிரி பேசிஸ்ல தான் சூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. இந்த ராசி எல்லாம் அமைப்பையும் தாண்டி ஒரு பிளட் குரூப்பை வச்சே ஒரு மனிதருடைய கேரக்டர் இதுதான் ரொம்ப ஈஸியா வந்து நம்மளால கண்டுபிடிக்க முடியும்.

03:24

Speaker C

இப்ப நான் அதே மாதிரி இப்ப ஒவ்வொரு பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் இதுதான் அப்படிதான் இருக்கப்போகுது அப்படிங்கிற மாதிரி சொல்லிட்டீங்க. இப்ப இந்த ராசியில ஒவ்வொரு ராசிக்கும் அதுல இருக்கிற பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் எப்படி இருக்கும்?

03:31

Speaker C

இந்த ராசியில இருக்க பிளட் குரூப்போட வேற எந்த ராசியோட ராசியில இருக்க பிளட் குரூப் வந்து சேர்ந்துச்சுன்னா அவங்களுக்கு நல்லா இருக்கும் வாழ்க்கை. இந்த திருமணம் வந்து நடக்குறதுக்கு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த பிளட் குரூப்புக்கு நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லுங்க.

03:40

Speaker C

அடுத்து நம்ம பார்க்கப்போற ராசி கன்னி.

03:43

Speaker C

இந்த கன்னி ராசியில இருக்க பிளட் குரூப் ஓவா இருக்கட்டும், ஏ, பி, ஏபி இவங்களோட அந்த குணாதிசயங்கள் எல்லாம் எப்படி இருக்கும்?

03:50

Speaker A

இப்ப கன்னி ஓ இருக்காங்க அப்படின்னா இவங்க ஹைலி பிராக்டிகல். ரொம்ப ஜாலியா இருக்கக்கூடிய ஒரு டைப் அப்படின்னே சொல்லலாம்.

03:55

Speaker A

டோன்ட் கேர் அப்படிங்கிற மாதிரி இருக்கும். கோ வித் தி ஃப்ளோ அப்படிங்கிற மாதிரிதான் இவங்க இருப்பாங்க.

04:00

Speaker A

பிளானிங்ஸ் இருக்கும். ஃபெயிலியர்ஸ் வந்தாலும் அக்செப்ட் பண்ணிக்கக்கூடிய ஒரு மைண்ட்செட் வந்து ஓல இருக்க கன்னிக்கும் இருக்கும்.

04:10

Speaker A

ஏ அப்படின்னு வருது இல்லையா?

04:12

Speaker A

கன்னிக்கு சரியான பெர்ஃபெக்ட்டா ஒன்னு இருக்குன்னா அது ஏ தான்.

04:17

Speaker A

ஒரு கன்னி ஏ பிளட் குரூப்ல பிறந்துருச்சுன்னா தன்னுடைய ராசிக்கு ஏ தான் கரெக்ட். ஏன்னா கன்னி வந்து எல்லாமே பெர்ஃபெக்ஷனிசம் பார்க்கக்கூடியது.

04:25

Speaker A

டிசிப்ளின் பார்க்கக்கூடியது.

04:28

Speaker A

ஏ டிசிப்ளின் தான் பார்க்கும்.

04:30

Speaker A

சோ இந்த டிசிப்ளினுக்கு இவங்க செட் ஆயிடுவாங்க.

04:33

Speaker A

இதே இது வந்து பி அப்படின்னா

04:36

Speaker A

இவங்களுக்கு வந்து லாஜிக்கல் மைண்டும் வேலை பார்க்கும். கிரியேட்டிவிட்டியும் வேலை பார்க்கும்.

04:41

Speaker A

இவங்க மல்டி டாஸ்கிங் பண்ணக்கூடியவங்களா இருப்பாங்க.

04:43

Speaker A

ஒரு ஒரு விஷயத்தை படிக்கிறாங்கன்னு வச்சுக்கோங்களேன். ஃபார் எக்ஸாம்பிள் இவங்க வந்து

04:51

Speaker A

ஒரு லாயருக்கு படிக்கிறாங்க அப்படின்னு வச்சுக்கிட்டா

04:53

Speaker A

இந்த லால இன்னும் டவுட்ஸ் என்ன இருக்கு? அத்தனையும் இந்த மைண்ட் கிரியேட்டிவா யோசிக்கும்.

05:00

Speaker A

பஞ்சாயத்துக்கு போய் நிக்கிறதுனாலும் பஞ்சாயத்துக்கு நிக்கும்.

05:03

Speaker A

போய் அந்த கேஸை முடிக்கணும்னாலும் அந்த கேஸை முடிப்பாங்க.

05:05

Speaker A

புரோடெக்ட் பண்ணனும்னாலும் புரோடெக்ட் பண்ணுவாங்க. எல்லாமே இருந்து பண்ணக்கூடிய ஒரு அமைப்பு.

05:10

Speaker A

ஒரு போலீஸ் ஸ்டேஷன் கண்ட்ரோல் எடுக்கணுமா? எடுக்கும்.

05:12

Speaker A

அந்த அளவுக்கு மைண்ட் கிரியேட்டிவா யோசிக்கும்.

05:14

Speaker A

ரவுடி கூடயும் இருக்கும். இந்த இவங்க நல்லவங்க கூடயும் இருக்கும்.

05:18

Speaker A

ரெண்டு பேத்து கூடயும் இருக்கக்கூடிய ஒரு அமைப்புன்னே சொல்லலாம்.

05:20

Speaker A

சோ இந்த கிரியேட்டிவிட்டி வந்து இவங்க இதுல இருக்கவங்கதான் வந்து இந்த ஸ்டாக் மார்க்கெட்ஸ்ல போறது.

05:25

Speaker A

எல்லாமே பிளான் பண்ணி பண்றது.

05:27

Speaker A

என்ன ஒரு டிராபேக் அப்படின்னு இவங்களுக்கு பார்க்குறப்ப சுயநலம் கொஞ்சம் அதிகமாவே இருக்கும்.

05:32

Speaker A

கன்னிக்கு ஜெனரலாவே ஒரு சுயநலம் அப்படிங்கறது வந்து அவங்களுக்கு இயற்கையாவே அது வந்துரும்.

05:38

Speaker A

ஃபர்ஸ்ட் என்ன பாத்துக்கணும் அப்படிங்கற ஒரு தாட்டுக்கு போவாங்க.

05:40

Speaker A

இந்த தாட் வந்து கொஞ்சம் அதிகமாவே இருக்கும் அப்படின்னே சொல்லலாம்.

05:44

Speaker A

ஆனா அது லாஜிக்கலாதான் இருக்கும்.

05:45

Speaker A

இவங்க எமோஷனலா கனெக்ட் ஆகவே மாட்டாங்க.

05:47

Speaker A

இவங்க என்ன பேசினாலுமே மத்தவங்களை வேலை வாங்குறதாகட்டும் எல்லாமே ஆகட்டும்.

05:54

Speaker A

இப்ப ஒருத்தவங்க கிட்ட போய் இவங்க பழகுறாங்க நல்லபடியா பழகுறாங்கன்னா கூட உயிரை கொடுத்து பழகுற மாதிரி தெரிஞ்சா கூட அதுல ஒரு லாஜிக் இருக்கும்.

06:01

Speaker A

அது வேண்டாம்னா அப்ரப்டா கட் பண்ணிட்டு இவங்களால வர முடியும்.

06:04

Speaker A

சீக்கிரம் மறந்துருவாங்க.

06:05

Speaker A

கடந்து போறதுன்னு ஒன்னு இருக்கு இல்லையா? எந்த விஷயமா இருந்தாலும் நல்லது கெட்டது ரெண்டையுமே கடந்து போயிடுவாங்கன்னு வச்சுக்கோங்களேன்.

06:12

Speaker A

குரோத் நோக்கி போவாங்க.

06:13

Speaker A

கிரியேட்டிவிட்டி இவங்க எல்லாம் மீடியா ஃபீல்ட்ல ஸ்ட்ராங்கா இருப்பாங்க.

06:16

Speaker A

அடுத்தடுத்து டெவலப்மென்ட் அப்படிங்கறது வந்து இவங்களுக்கு இருக்கும்.

06:19

Speaker A

இதே இது ஏபி இருக்காங்கன்னு வச்சுக்கோங்க.

06:21

Speaker A

இவங்கதான் ஜீனியஸ்.

06:22

Speaker C

கன்னில இருக்க.

06:23

Speaker A

கன்னில இருக்க ஏபி வந்து ஹைலி ஜீனியஸ்.

06:25

Speaker A

இவங்களை மாதிரி ஒரு பிளான் பக்காவா யாராலுமே போட முடியாது.

06:30

Speaker A

இவங்க வந்து இந்த டாப் ரெஸ்டாரண்ட்ஸ் ரன் பண்றது இந்த என்ன டாப் நாச்சா இருக்குதோ எல்லாமே பெஸ்ட்.

06:38

Speaker A

ஹை லெவலாதான் இவங்க யோசிப்பாங்க.

06:40

Speaker A

லோ கேட்டகிரியா யோசிக்கவே மாட்டாங்க.

06:41

Speaker A

எல்லாமே பிராண்ட்.

06:42

Speaker A

குவாலிட்டி.

06:43

Speaker A

அந்த அளவுக்கு லைஃப வளர்த்திருவாங்க.

06:46

Speaker A

பழக்கவழக்கங்களே அப்படித்தான் பழகுவாங்க.

06:48

Speaker A

இவங்க டிக்னிட்டிங்கறது பயங்கரமா பார்ப்பாங்க. இவங்களுடைய லைஃபே வந்து சொபிஸ்டிகேட்டட் லைஃப் அப்படிங்கிற மாதிரிதான் இருக்கும்.

06:54

Speaker A

இந்த ஏபி காம்பினேஷன்ஸ் எப்படி இருப்பாங்கன்னா

06:56

Speaker A

இவங்களுடைய இவங்களுடைய வீடே ஒன்னு அமைக்குறாங்கன்னு வச்சுக்கோங்களேன்.

07:01

Speaker A

ஒரு ஹோட்டல் எப்படி இருக்கும்?

07:03

Speaker A

எப்படி ஒரு ஆர்கனைஸ்டா இருக்கும்? அந்த மாதிரி ஒரு ஆர்கனைஸ்டாதான் இவங்க பார்ப்பாங்க.

07:06

Speaker A

ஒரு தூசி வந்துரக்கூடாது.

07:08

Speaker A

கிளீனா இருக்கணும்.

07:09

Speaker A

அந்த கமாண்டிங்ங்கறது இவங்ககிட்ட இருந்துகிட்டே இருக்கும். எல்லாம் கலந்தவங்கதான் அவ்வளவு நல்ல விஷயங்களையும் கலந்தவங்க.

07:15

Speaker A

செல்வ செழிப்பு அப்படிங்கறது கன்னில இருக்க ஏபிக்கு வந்து உண்டு.

07:20

Speaker A

இவங்களுக்குதான் கோல்டு சேரும்.

07:21

Speaker A

இவங்கதான் நிறைய ஆர்னமெண்ட்ஸ் அந்த மாதிரிலாம் சேர்ப்பாங்க.

07:23

Speaker A

ஹைலி ஆஸ்பிசியஸ்.

07:24

Speaker A

இவங்க வந்து ஏபி.

07:25

Speaker C

லைஃப் வந்து ரிச்சாவே இருக்கும் அப்படித்தானே?

07:26

Speaker A

ஆமா.

07:27

Speaker A

இவங்க எல்லாமே ஜீனியஸாவேதான் பார்ப்பாங்க.

07:30

Speaker A

அறிவுக்கு ரொம்ப இம்பார்டன்ஸ் கொடுப்பாங்க.

07:32

Speaker A

யாரெல்லாம் ரொம்ப இன்டெலிஜென்ட்டா பேசுறாங்களோ இன்டெலிஜென்ட்டா இருக்கவங்களைதான் கூடவே வச்சுப்பாங்க.

07:38

Speaker A

படிச்சவங்களுக்கு ரொம்ப இம்பார்டன்ஸ் கொடுக்கிறதாகட்டும்.

07:41

Speaker A

நாலேட்ஜ் பேஸ்டான விஷயங்களை தேடுறதாகட்டும்.

07:44

Speaker A

அவ்வளவு சீக்கிரம் இவங்க வந்து கிளியரா தெரிஞ்சுக்காம நம்ப மாட்டாங்க.

07:48

Speaker A

அவங்களுக்கு எல்லாமே ப்ரூவன் ஃபேக்ட்டா இருக்கணும்.

07:50

Speaker A

அப்பதான் அவங்க வந்து நம்புவாங்க.

07:51

Speaker A

கண்ணால பார்க்கணும். அவங்க கேட்கணும்.

07:54

Speaker A

அந்த மாதிரி அவ்வளவு இன்டெலிஜென்ஸ்.

07:56

Speaker A

இவங்க ஒரு ஐடியாஸ் கொடுக்குறாங்க. இப்ப ஸ்டாக் மார்க்கெட்ஸ்ல எல்லாம் இருக்காங்க அப்படின்னா

08:00

Speaker A

இவங்க வந்து அவ்வளவு ஜீனியஸா ஒரு ஐடியா கொடுக்கிற ஒரு ஒரு இடத்துலதான் இருப்பாங்க.

08:05

Speaker A

இவங்களுக்கு தெரியும் எப்படி சம்பாதிக்கணும் அப்படின்னு.

08:06

Speaker A

சும்மாவே உட்கார்ந்தாலும் அக்கவுண்ட்ல பணம் வரும் அப்படின்னா அந்த அளவுக்கு இவங்க மைண்ட் வேலை பார்க்கும்னா அது கன்னில ஏபி அப்படி செய்வாங்க.

08:12

Speaker C

கண்டிப்பா சூப்பர்.

08:12

Speaker C

இப்ப இந்த கன்னி ராசியில இருக்க பிளட் குரூப்புக்கு எந்த பிளட் குரூப் வந்து சேருமா? ஐ மீன் மேரேஜா இருக்கட்டும், பிரெண்ட்ஷிப்பா இருக்கட்டும், பிசினஸ் பார்ட்னர்ஸா இருக்கட்டும் யார் சேருவாங்க?

08:20

Speaker A

இவங்களுக்கு ஏவும் ஏபியும் மட்டும்தான் செட் ஆவாங்க.

08:22

Speaker C

ஏவும் ஏபியும் மட்டும்தான்.

08:23

Speaker A

ஏபி மட்டும்தான் இவங்களுக்கு செட் ஆவாங்க.

08:24

Speaker A

ஏன்னா இவங்களுக்கு தேவை இவங்களுடைய தாட் ப்ராசஸ்லயே இருக்கிறவங்கதான்.

08:28

Speaker A

இவங்களுக்கு வந்து இந்த எமோஷனலா பேசிட்டு அதெல்லாம் இவங்களுக்கு செட் ஆகாது.

08:31

Speaker A

பிளான் பண்ணி பிளான் பண்ணி போட்டுட்டு அடுத்தடுத்த வேலையை பார்த்துட்டு போயிட்டே இருக்கணும்.

08:36

Speaker A

ஒரு குரோத் நோக்கி போயிட்டே இருக்கணும் அப்படிங்கறதுதான்.

08:38

Speaker A

இவங்களுக்கு வந்து அந்த லீஷர் லைஃப்க்கு டைம் ஸ்பென்ட் பண்ணனும்ங்கறதெல்லாம் இருக்காது.

08:40

Speaker A

அப்படியே அவங்க அப்படி போறாங்கன்னா அங்கேயும் ஒரு பிசினஸ் ஒன்னு இருக்கும்.

08:43

Speaker A

அங்கேயும் ஒரு வேலைன்னு ஒரு விஷயம் அவங்களுக்கு டச் பண்ணாம அந்த விஷயத்தை வந்து கன்னி கையில எடுக்காது.

08:48

Speaker A

ஏன்னா கன்னி தேவையில்லாம எந்த வேலையும் பார்க்க மாட்டாங்க.

08:51

Speaker A

அந்த என்ஜாய்மென்ட்ல கூட ஒரு காரண காரியம் காரியவாதிகள் கன்னி.

08:55

Speaker A

சோ கரெக்டா இந்த ஏவும் ஏபியும் வரப்போ அந்த காரண காரியத்துக்காகவேதான் அவங்க பழகுற மாதிரியேதான் இருக்கும்.

09:00

Speaker A

கூட ஏ இருந்துருச்சு அப்படின்னா ரொம்ப லக்கு கன்னி.

09:04

Speaker A

ஏபி தேவையில்லை.

09:05

Speaker A

ஏ இருந்தாலே போதும்.

09:06

Speaker A

ஏன்னா சொல்றது இன்ஸ்ட்ரக்ஷன்ஸ சொல்லி கேட்டு கேட்டு போனாலே இவங்க குரோ ஆயிடுவாங்க.

09:09

Speaker A

அப்போ இந்த ஏ வந்து மாத்திக்கும்னு வச்சுக்கோங்களேன். ஏன்னா பெர்ஃபெக்ட் மேட்ச்ன்னு சொல்லிட்டேன்.

09:14

Speaker A

ஏ வந்து ஒரு கன்னிக்கு பெர்ஃபெக்ட்டான மேட்ச்.

09:16

Speaker A

ஒரு ஏவும் ஏவும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு வச்சுக்கோங்க.

09:20

Speaker A

அவங்களை எல்லாம் பிரிக்கவே முடியாது.

09:22

Speaker A

அவங்க மேட் ஃபார் ஈச் அதர் அவங்கதான்.

09:23

Speaker A

ஒருத்தர் ஒருத்தர் டிசிப்ளினாவே இருக்கிறது.

09:26

Speaker A

குறை எல்லாம் பேசிக்க மாட்டாங்க ரெண்டு பேருமே.

09:27

Speaker A

ஏன்னா அவங்க ரெண்டு பேத்துக்குமே அதுதான் செட்.

09:28

Speaker C

இந்த ராசியில வேணாலும் இருக்கலாம் பட் ஏ டூ ஏ.

09:30

Speaker A

ஏ டூ ஏ அவங்களுக்கு கரெக்ட்டா செட் ஆகும்.

09:32

Speaker A

அவங்கதான் பெர்ஃபெக்ட். டூ த பெர்ஃபெக்ட் டூ த கோர் இவங்களுக்காகவே இவங்க பிறந்தாங்கங்கற மாதிரிதான் அந்த மேட்ச்.

09:37

Speaker A

இவங்களுக்கு ஏ வராங்க அப்படின்னா.

09:38

Speaker C

இவங்களுக்கு செட்டே ஆக மாட்டாங்கன்னா எந்த பிளட் குரூப்?

09:40

Speaker A

ஓ.

09:40

Speaker A

ஓவுக்கும் இவங்க ஓ பயங்கர டாமினேட் பண்ணிரும்.

09:43

Speaker A

கன்னியை.

09:44

Speaker A

செம்மையா டாமினேட் பண்ணும்.

09:45

Speaker C

கன்னிலயே ஓ இருக்காங்க.

09:47

Speaker A

கன்னிலயே ஓ இருக்காங்க. அது பிராக்டிகல்.

09:49

Speaker C

ரெண்டு ஓ சேர்றாங்க.

09:50

Speaker A

சேராது.

09:50

Speaker A

ஏன்னா கன்னில இருக்க ஓ எப்படின்னா டோன்ட் கேர் பார்ட்டி.

09:54

Speaker A

தான் பாட்டுக்கு ஜாலியா இருக்கும்.

09:56

Speaker A

யாரும் கண்ட்ரோல் எல்லாம் பண்ண முடியாது.

09:57

Speaker A

ஹாப்பியா இருக்கக்கூடிய ஒரு டைப்.

09:59

Speaker A

அது வேற ஒரு ஓ வராங்க அப்படின்னா டாமினேட் பண்ணுவாங்க இவங்களை.

10:03

Speaker A

கன்னிக்கு வந்து யார் டாமினேட் பண்ணாலும் பிடிக்காது.

10:05

Speaker C

இப்ப கன்னிலயே இருக்க. இப்ப கன்னி ஓ இருக்காங்க.

10:07

Speaker C

இப்ப மேரேஜ் பண்ணிக்கிறவங்களும் கன்னியா இருக்காங்க.

10:09

Speaker C

அவங்களும் ஓ.

10:10

Speaker A

சேராது.

10:10

Speaker A

கன்னிக்கு ஜெனரலாவே ஓ செட் ஆகாது.

10:12

Speaker A

ஏன்னா கன்னியை ஓ டாமினேட் பண்ணும்.

10:14

Speaker A

டாமினேட் ஏன்னா ஓ கொஞ்சம் எமோஷனல் டைப்.

10:18

Speaker A

கன்னிக்கு சுத்தமா எமோஷன்ஸ் வரவே வராது.

10:20

Speaker A

ஓ போராடும் எமோஷன்ஸ காட்டுறதுக்கு.

10:23

Speaker A

தலைகீழ நின்னாலும் கன்னிக்கு எமோஷன்ஸ் புரியாது.

10:25

Speaker A

சோ இப்படி இருக்கப்பதான் இவங்க வந்து ப்ராப்ளம் ஆகுறது.

10:28

Speaker A

ஏன்னா கன்னி வந்து ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட்.

10:31

Speaker A

எல்லாமே அனலைஸ் பண்ணி அனலைஸ் பண்ணி செய்யக்கூடியவங்க.

10:33

Speaker A

ஓ வந்து பெர்ஃபெக்ஷனிஸ்ட்ன்னுலாம் சொல்ல முடியாது.

10:35

Speaker A

அவங்க வந்து நியாய, தர்மம் அந்த மாதிரி போகக்கூடியவங்களா இருப்பாங்க.

10:38

Speaker A

கன்னி அதெல்லாம் பார்க்காது.

10:39

Speaker A

நியாயமாது, தர்மமாது.

10:40

Speaker A

இது இந்த நேரத்துல இது தேவையா? அதை நம்ம செஞ்சுட்டு போவோம்.

10:43

Speaker A

சண்டைக்காரன் கால்ல விழுவோமா? சாட்சிக்காரன் கால்ல விழுவோமா? யார் கால்ல விழணுமோ போய் விழுவோம் கன்னி.

10:48

Speaker A

தேவைனா அந்த வேலையை செய்யும்.

10:49

Speaker A

ஆனா ஓ செய்யாது.

10:50

Speaker A

மத்த ஓ இருக்கவங்க இல்ல அப்படின்னு அந்த எமோஷன்ஸ்க்கு ரெஸ்பெக்ட் கொடுத்து ஓ பேசாம போறது.

10:54

Speaker A

கிரட்ஜ் வச்சுக்கிறதெல்லாம் ஓ வச்சுக்கும்.

10:56

Speaker A

கன்னிக்கு வச்சுக்க தெரியாது.

10:57

Speaker A

கன்னில இருக்க ஓ வந்து எந்த கிரட்ஜுமே வச்சுக்காது.

11:01

Speaker A

கன்னில இருக்க ஓ டோட்டலி வேற.

11:02

Speaker A

அது எப்படி சொல்றது? அது ஒரு குட்டி மன்மதன் மன்மதி மாதிரிதான் அது.

11:07

Speaker A

அது பாட்டுக்கு ஜாலியா இருக்கிற ஒரு டைப்தான் வந்து கன்னில இருக்கிற ஓ.

11:09

Speaker C

அதே மாதிரி உங்களோட பிசினஸ் பார்ட்னர்ஸ் இல்ல நல்லா இருக்காங்க அப்படின்னா இவங்களுக்கு எந்த பிளட் குரூப் வந்து செட் ஆகும்?

11:15

Speaker A

ஏ.

11:15

Speaker C

ஏ.

11:16

Speaker A

ஏ தான் பெர்ஃபெக்ட்.

11:17

Speaker A

ஏ இருந்துட்டா 100% பெர்ஃபெக்ட் இவங்களுக்கு.

11:19

Speaker C

கன்னி ராசிக்காரங்க வந்து எந்தெந்த பிளட் குரூப்ன்னு சொல்லிட்டு அவங்களே செல்ஃபா தெரிஞ்சுப்பாங்க.

11:24

Speaker C

அவங்களோட கேரக்டரை தெரிஞ்சிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

11:26

Speaker C

அவங்களோட என்ன பிளட் குரூப் அப்படிங்கறத கமெண்ட்ல சொல்லட்டும்.

Topics: கன்னி ராசி பிளட் குரூப்புகள் ஜாதகம் குணாதிசயங்கள் கல்யாண பொருத்தம் ஆஸ்திராலஜி தமிழ் ஜாதகம் ராசி பலன் திட்டமிடல் சுயநலம்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11342)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11342)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/kanni-achievers-jeevitha-sureshkumar-retro-aanmeegam/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
