**கடகம் - தொட்டதெல்லாம் பொன்னாக போகிறது | Kadagam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/kadagam-tottadhellam-ponnaga-pogiradhu/

கடகம் ராசிக்காரர்களின் கடன் பிரச்சனைகள், வழிபாடு மற்றும் பரிகாரம் பற்றிய விரிவான விளக்கம்.

## Key Takeaways

- கடகம் ராசிக்காரர்கள் குடும்பத்திற்காக கடன் வாங்குவார்கள், தனக்காக அல்ல.
- ராகு மற்றும் கேது கிரகங்களின் தாக்கம் கடன் பிரச்சனைகளுக்கு காரணமாகும்.
- துர்கை தெய்வ வழிபாடு மற்றும் விரதம் கடன் சுமையை குறைக்கும் முக்கிய பரிகாரங்கள்.
- ஆளுமை வளர்த்தல் மற்றும் தெளிவான கோல் செட் செய்வது கடன் பிரச்சனைகளை சமாளிக்க உதவும்.
- ஆன்மீக வழிபாடுகள் மற்றும் பரிகாரங்கள் கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

## What the video covers

- கடகம் ராசிக்காரர்கள் தனக்காக கடன் வாங்காமல், மற்றவர்களுக்காக கடன் வாங்குவார்கள்.
- ராகு மற்றும் கேது கிரகங்களின் பாதிப்புகளால் கடன் பிரச்சனைகள் உருவாகும்.
- கடகம் ராசிக்காரர்களுக்கு பணம் சேமிப்பதில் சிரமம் மற்றும் செலவுகள் நீர் போல வீணாகும்.
- கடன் வாங்கும் சூழ்நிலைகள் மற்றும் அதிலிருந்து மீளும் வழிகள் பற்றி விளக்கம்.
- துர்கை தெய்வத்தை வழிபாடு செய்து கடன் சுமையை குறைப்பது முக்கியம்.
- விரதம், உணவு கட்டுப்பாடு மற்றும் துர்கை கோயிலுக்கு செல்லும் வழிபாடு பரிகாரமாக பரிந்துரைக்கப்படுகிறது.
- குடும்ப பாரம் மற்றும் செலவுகளை சமாளிப்பதில் கடகம் ராசிக்காரர்களுக்கு சிரமம் உள்ளது.
- கடன் பிரச்சனைகளை சமாளிக்க ஆளுமை வளர்த்தல், கோல் செட் செய்தல் அவசியம்.
- முருகர் வழிபாடு மற்றும் செவ்வாய் ஹோராவில் கடன் வாங்குதல் பரிகாரமாக கூறப்படுகிறது.
- பராசக்தி வழிபாடு மற்றும் நடைபயணம் போன்ற ஆன்மீக செயல்கள் கடன் சுமையை குறைக்க உதவும்.

Answers

## Questions about this video

கடக ராசிக்காரர்கள் பொதுவாக யாருக்காக கடன் வாங்குவார்கள்?

கடக ராசிக்காரர்கள் பொதுவாக தங்களுக்காக கடன் வாங்க மாட்டார்கள். அவர்கள் நண்பர்களுக்காகவோ அல்லது குடும்பத்திற்காகவோ கடன் வாங்குவார்கள். சிறு வயதிலிருந்தே நண்பர்களுக்காக கடன் வாங்கி கொடுக்கும் பழக்கம் இவர்களுக்கு உண்டு.

கடக ராசிக்காரர்களுக்கு பணம் எப்படி செலவாகும்?

கடக ராசிக்காரர்களுக்கு பணம் தண்ணீர் போல செலவாகும். ஏனெனில் அவர்கள் நீர் ராசி என்பதால், பணத்தை சேமிக்கும் மனப்பான்மை குறைவாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றால், பணம் மிக வேகமாக செலவாகிவிடும்.

கடக ராசிக்காரர்களிடம் கடன் கொடுத்தவர்கள் ஏன் சிரமப்படுவார்கள்?

கடக ராசிக்காரர்களிடம் கடன் கொடுத்தவர்கள் சிரமப்படுவார்கள், ஏனெனில் கடனைத் திருப்பிக் கேட்கும்போது அவர்கள் அலட்சியமாகவோ அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுவார்கள். இதனால் கடன் கொடுத்தவர்களுக்கே குற்ற உணர்வு ஏற்படும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:02

Speaker A

இவங்க தனக்காக கடன் வாங்கவே மாட்டாங்க.

00:05

Speaker A

மத்தவங்களுக்காக தான் கடன் வாங்குவாங்க.

00:08

Speaker A

ராகு வந்து அதீத ஆடம்பரத்துக்கும், கற்பனை, இமேஜினேஷன், இல்லூஷன் பாத்துக்கலாம் அப்படிங்கறது தருணத்துல ராகு கடன் வாங்க வச்சிரும்.

00:17

Speaker A

கேது வந்து வச்சு செஞ்சிரும்.

00:19

Speaker A

தண்ணி மாதிரி செலவாகும் கடக ராசிக்காரங்களுக்கு, தண்ணி பட்ட பாடு ஏன்னா அவங்க நீர் ராசி.

00:25

Speaker A

ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.

00:29

Speaker A

இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்ன அப்படின்னா, வாழ்க்கையில யாருக்கு தான் கடன் இல்லை.

00:34

Speaker A

இல்லையா எல்லாத்துக்கும் பணம் சம்பாதிக்கணும் அட் தி சேம் டைம் எப்படி சம்பாதிக்கிறது இப்ப இருக்க காலகட்டங்கள்ல கடன் வாங்காம எதுவுமே எங்களால பண்ண முடியலையே அப்படிங்கிற கேள்வி அம்பானிக்கு கூட உண்டு எல்லாத்துக்குமே உண்டு இந்த கேள்வி.

00:46

Speaker A

அப்படி இருக்கும்போது இந்த 12 ராசிகளுக்கும் அவங்க கடந்து வரக்கூடிய அந்த வாழ்க்கை பாதைன்னு வரப்போ அட் எனி காஸ்ட் ஏதோ ஒரு சிச்சுவேஷன்ல கடன் வாங்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது வந்துரும்.

00:57

Speaker A

அப்படி பார்க்கிறப்போ நான் ஜோதிடம் பார்த்ததிலிருந்து என்னுடைய அனுபவத்துல ஒவ்வொரு ராசிக்காரங்க என்னென்ன மாதிரியான ஒரு விஷயத்துக்கு காரணமா அவங்க வந்து கடன் வாங்கினாங்க.

01:06

Speaker A

எப்படி அவங்க அதிலிருந்து மீண்டாங்க அப்படிங்கறத வச்சு நான் இந்த 12 ராசிகளுக்கு எப்படி அப்படிங்கறத உங்களுக்கு சொல்றேன்.

01:10

Speaker A

என்ன தெய்வத்தை வழிபாடு பண்ணனும் எப்படி அந்த கடன் கடன்ங்கிற விஷயத்திலிருந்து எப்படி வெளிய வரணும் அப்படிங்கறத பத்தி நம்ம இங்க பார்ப்போம்.

02:00

Speaker A

கடக ராசி அப்படின்னு பார்க்கிறப்போ ஜெனரலாவே கடக ராசியோட அமைப்பு என்ன.

02:05

Speaker A

ரொம்ப இலகின மனசு உடையவங்க.

02:07

Speaker A

இல்லையா இவங்க கிட்டயுமே கடக ராசிக்காரங்களுக்கும் அந்த சேவிங்ஸ் மனப்பான்மை பணத்தை சேமிச்சு வைக்கணும் அப்படிங்கிற ஒரு எண்ணம் கிடையாது.

02:13

Speaker A

இவங்க தனக்காக கடன் வாங்கவே மாட்டாங்க மத்தவங்களுக்காக தான் கடன் வாங்குவாங்க.

02:17

Speaker A

அதாவது பிரண்ட்ஸ்க்காக கடன் வாங்குறது இது சின்ன வயசுல இருந்தே இவங்களுக்கு ஸ்டார்ட் ஆயிடும் இந்த பிரண்ட்ஸ்க்காக வாங்கி கொடுக்கிறது.

02:25

Speaker A

அதுக்கப்புறம் இந்த கடனை போய் இவங்களே அடைக்கிறது அதுக்கப்புறம் குடும்ப பாரம் அப்படின்னு வரப்போ குடும்பத்துக்காக கடன் வாங்குறது.

02:30

Speaker A

எதுக்கு வாங்குறோம்னே தெரியாம சேமிப்பு அப்படிங்கறது வந்து இவங்க போக்கஸ் பண்ணனும்.

02:34

Speaker A

இல்லை அப்படின்னா தண்ணி மாதிரி செலவாகும் கடக ராசிக்காரங்களுக்கு தண்ணி பட்ட பாடு ஏன்னா அவங்க நீர் ராசி.

02:40

Speaker A

அப்படிங்கறப்போ அவங்களுக்கு ஒரு நிலைப்பாடு தன்மை அப்படிங்கறது இருக்காது பணம் வரப்போ வரட்டும் பார்த்துக்கலாம்.

02:47

Speaker A

கடன் கொடுத்தாங்க இல்லையா அவங்க கடக ராசிட்ட மாட்டிப்பாங்க.

02:50

Speaker A

ஏன்னா கடக ராசிக்காரங்க கிட்ட போய் கடன் கொடுத்துட்டு கடனை திருப்பி கொடுங்க அப்படின்னு கேட்கிறப்போ ரொம்ப அலட்சியமாவே இருப்பாங்க.

02:57

Speaker A

இல்லைன்னா ரொம்ப டிப்ரஷனுக்கு போயிடுவாங்க பயங்கர டிப்ரஷனுக்கு போயிட்டு கடன் கொடுத்தவருக்கே குற்ற உணர்வாயிடும்.

03:03

Speaker A

ஐயையோ நம்ம தப்பா கேட்டுட்டோமோ.

03:05

Speaker A

அந்த மாதிரி ஒரு ரொம்ப சென்சிடிவ் அப்படிங்கறது ஆயிடுவாங்க.

03:10

Speaker A

அப்போ பிளானிங் அப்படிங்கறது கடக ராசிக்காரங்களுக்கு ரொம்ப ரொம்ப அவசியம்.

03:13

Speaker A

நீங்க எல்லாம் வந்து துர்கை.

03:15

Speaker A

உக்கிர துர்கை உக்கிர தெய்வங்கள் துர்கையை ரொம்ப ஸ்ட்ராங்கா பிடிச்சுக்கணும்.

03:19

Speaker A

கடக ராசிக்காரங்களுக்கு ஆசீர்வாதமே துர்கை தான்.

03:22

Speaker A

அதுவும் இந்த கோயில்ல நம்ம சுத்தி வரப்போ இந்த சைடுல இருக்காங்கல்ல துர்கை.

03:28

Speaker A

துர்கையை சின்னதா வச்சிருப்பாங்க அவங்கதான் கேட்ட உடனே ஆசீர்வாதம் கொடுக்கக்கூடியவங்க.

03:31

Speaker A

அவங்களைத்தான் மெயினா நம்ம ராகுகாலங்கள்ல வழிபாடு பண்ணக்கூடிய தெய்வமும் அந்த சைடுல இருக்கக்கூடிய துர்கை தான்.

03:35

Speaker A

நீங்க எல்லாம் எப்படி வழிபாடு பண்ணனும் அப்படின்னா ஒரு திங்கட்கிழமை.

03:39

Speaker A

வெள்ளிக்கிழமை.

03:40

Speaker A

விரதம் இருக்கணும்.

03:42

Speaker A

ஏன்னா உணவு கட்டுப்பாடு அப்படிங்கறது உங்களுக்கு அவசியம்.

03:45

Speaker A

அந்த உணவு கட்டுப்பாடுங்கறது காலையில ஒரு லைட்டான ஒரு ஃபுட்டோ இல்ல ஒரு நீர் ஆகாரமோ ஏதாவது ஒன்னு எடுத்துட்டு நீங்க வந்து இல்ல முடிஞ்ச அளவுக்கு விரதம்.

03:52

Speaker A

ஒரு சின்ன வயசா இருக்கீங்கன்னா நீங்க விரதம் தாராளமா இருக்கலாம்.

03:55

Speaker A

மெடிசின்ஸ் எடுத்துட்டு இருக்கவங்க ஒரு சாதாரண ஒரு நீர் ஆகாரம் எடுத்துட்டு நீங்க ஒரு ஆண் ஆகட்டும் ஒரு பெண் ஆகட்டும் உங்க ரெண்டு பேத்துக்குமே இது பொருந்தும்.

04:03

Speaker A

துர்கைக்கு அதாவது ராகுகாலம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே கோயிலுக்கு போயிட்டு ராகுகாலத்துல துர்கைக்கு விளக்கு போட்டு.

04:11

Speaker A

எனக்கு இருக்கக்கூடிய கடன் தீர வேண்டும் அதே மாதிரி என்னுடைய குடும்ப சுமை என்னுடைய குடும்ப பாரம் அப்படிங்கறது வந்து தாங்கிக்க கூடிய அளவுக்கு அதை கட்டுப்பாடுல கொண்டு போகக்கூடிய அளவுக்கு எனக்கு ஒரு அமைப்பை செஞ்சு கொடுங்க அப்படின்னு சொல்லிட்டு நீங்க வழிபாடு பண்ணனும்.

04:21

Speaker A

அப்படி துர்கைக்கு வழிபாடு பண்ணிட்டு வரப்ப முடிஞ்ச அளவுக்கு அந்த கோயில்ல இருந்து வர டைம்லயே நீங்க வந்து.

04:27

Speaker A

ஒரு சின்ன தொகை கையில என்ன தொகை இருக்கோ அந்த தொகையை கொடுத்து கடன் அடைக்கிறீங்க அப்படின்னா.

04:33

Speaker A

சீக்கிரம் வந்து கடன் அப்படிங்கறது உங்களுக்கு அடைய ஆரம்பிக்கும்.

04:37

Speaker A

இப்ப கடக ராசிக்காரங்க சரி எப்படி நாங்க எல்லாம் எப்படி நாங்க போய் இந்த கடன்ல போய் விழுகிறோம் அப்படிங்கறப்போ.

04:41

Speaker A

நான் சொன்னேன் இல்லையா நீங்க வந்து குடும்பத்துக்காக நீங்க கடன் வாங்குறீங்க அப்படின்னு.

04:44

Speaker A

ஏன் குடும்பத்துக்காக நீங்க கடன் வாங்குறீங்கன்னு பார்க்கிறப்போ நல்லா சிந்திச்சு பார்த்தீங்கன்னா தெரியும்.

04:49

Speaker A

லைஃப்ல போக்கஸ்ங்கறது உங்களுக்கு ரொம்ப சிதறும்.

04:52

Speaker A

அதாவது.

04:54

Speaker A

படிச்ச படிப்பு ஒன்னா இருக்கும்.

04:56

Speaker A

செய்யற தொழில் ஒன்னா இருக்கும்.

04:58

Speaker A

அதாவது நான் இந்தியாவிலேயே இருக்கட்டுமா.

05:00

Speaker A

நான் அப்ராட் போகட்டுமா.

05:02

Speaker A

சரி எதுக்கு அப்ராட் போறீங்க எதுக்கு இந்தியா போறீங்க நான் இங்கேயே ஒரு பிசினஸ் ஆரம்பிக்கட்டுமா அப்படின்னுட்டு.

05:06

Speaker A

அந்த பிசினஸ் உடைய நாலேட்ஜே இல்லாம இறங்குறது.

05:10

Speaker A

நாலேட்ஜ் கேதரிங் அப்படிங்கறது வந்து கடக ராசிக்காரங்களுக்கு ரொம்ப முக்கியம்.

05:14

Speaker A

நான் என்ன செய்ய போறேன் அப்படிங்கறது ரொம்ப முக்கியம்.

05:16

Speaker A

ஏன்னா நான் ஜெனரலாவே ஒரு வீடியோல எல்லாம் சொல்லி இருப்பேன்.

05:20

Speaker A

கடக ராசிக்காரங்க வந்து உங்களுடைய அந்த சின்ன குழந்தை இருக்கு இல்லையா அந்த சின்ன குழந்தையோட ஆத்மா தான் அந்த கடக ராசியில பிறக்கிறாங்க அப்படின்னு நான் சொல்றேன்.

05:26

Speaker A

அப்போ அந்த துருதுருங்கிற ஒரு எண்ணம் அப்படிங்கறது இருக்கும்.

05:30

Speaker A

அந்த மெச்சூரிட்டி அப்படிங்கறது கடக ராசிக்கு பெரும்பாலானவருக்கு.

05:34

Speaker A

அதாவது வாழ்க்கையில எல்லாமே எல்லா விஷயங்களும் நீங்க பார்த்திருப்பீங்க லைஃப்ல.

05:40

Speaker A

அதாவது சின்ன வயசுலயே என்னெல்லாம் கத்துக்க கூடாதோ அதெல்லாம் கத்துக்குவீங்க.

05:44

Speaker A

ஆனா சூட்சமமா எப்படி மெச்சூடா குடும்பத்தை ஹேண்டில் பண்ணனும் சுத்தி இருக்கிறவங்களை எப்படி ஹேண்டில் பண்ணனும் அப்படின்னா உங்களுக்கு தெரியாது.

05:50

Speaker A

லைஃப் பார்ட்னர் இருக்காங்கன்னா லைஃப் பார்ட்னர் போய் எக்ஸஸ்ஸா செலவு பண்ணிடுறது.

05:54

Speaker A

இல்லை அப்படின்னா வந்து படிச்ச படிப்பு பெருசா இன்ட்ரஸ்ட் காட்டாம நீங்களா போய் ஏதாவது ஒரு வேலையில சேர்றது.

06:00

Speaker A

அதுக்கப்புறம் தகுதிக்கு மீறி செலவு பண்றது.

06:03

Speaker A

இந்த மாதிரி ஒரு அமைப்புல இந்த குடும்பத்தை சரி பண்றதுக்குன்னு கடன் மேல கடன் வாங்கிக்கிட்டே இருக்குது.

06:09

Speaker A

சிம்பதி கிரியேட் பண்ற வேலையே கடக ராசிக்காரங்களுக்கு பெரும்பாலும் இருக்கும்.

06:12

Speaker A

நான் இந்த மாதிரி இப்படி சிச்சுவேஷன்ல இருக்கேன்.

06:14

Speaker A

லோன் வாங்கினா கூட அந்த லோன் வாங்க போற இடத்துல கூட ரொம்ப சிம்பதி கிரியேட் பண்றது.

06:20

Speaker A

அப்போ நீங்க எல்லாம் என்ன பண்ணனும் உங்களுக்குள்ள ஒரு ஆளுமையை ஃபர்ஸ்ட் நீங்க டெவலப் பண்ணி.

06:25

Speaker A

விஷன் உங்களுக்குன்னு ஒரு ஆம்பிஷன் நீங்க உங்களுக்கு ஒரு கோல் அப்படிங்கறது செட் பண்ணனும்.

06:29

Speaker A

என்னடா பரிகாரம் சொல்ல வந்துட்டு அட்வைஸ் பண்றீங்க அப்படின்னா.

06:32

Speaker A

வெறும் பரிகாரம் மட்டுமே பண்ணிட்டு வந்தா எல்லாம் சரியாயிடாது.

06:37

Speaker A

அதுக்கான வேலைகளையும் நம்ம செய்யணும்.

06:40

Speaker A

பைரவருக்கு விளக்கு போட்டுட்டு வந்த உடனேயே எனக்கு வந்து கடன் அடைஞ்சிருமா அப்படின்னா கிடையாது.

06:43

Speaker A

அங்கிருந்து நீங்க என்ன ஸ்டெப்ஸ் எடுத்தீங்க அப்படிங்கற ஒரு விஷயம் இருக்குது.

06:46

Speaker A

அந்தந்த நாள்கிழமைல நான் எப்படி கடன் அடைக்கிறேன் அப்படிங்கறது இருக்கு.

06:49

Speaker A

முடிஞ்சா செவ்வாய்க்கிழமை கடன் அடைக்க முடியாட்டாலும் செவ்வாய் ஹோரை வரக்கூடிய ஒரு நேரத்துல.

06:55

Speaker A

செவ்வாய் ஹோரையில போய் ஒரு சின்ன அமௌன்ட் அப்படிங்கறது நீங்க கடன் அடைக்கணும்.

07:00

Speaker A

அதேபோல முருகருக்கு சிகப்பு மலர்கள் வாங்கி கொடுத்து வேண்டுகோள் அப்படிங்கறது நீங்க வச்சுக்கணும்.

07:04

Speaker A

உங்களுடைய செலவு வந்து சுபவிரைய செலவாக ஆக உங்களுடைய கடன் அப்படிங்கறது இங்க குறைய ஆரம்பிக்கும்.

07:09

Speaker A

ஏன் அப்படின்னா உங்களுக்கு வந்து ஒரு கோல் செட் பண்ணிட்டோம்னா நீங்க அந்த கோல் நோக்கி போகக்கூடியவங்களா இருப்பீங்க.

07:14

Speaker A

சோ அந்த கோல் செட் பண்றது அப்படிங்கறது எப்படின்னா தெய்வ வழிபாட்டிலயும் நீங்க கோல் செட் பண்ணலாம்.

07:19

Speaker A

பராசக்தி வழிபாடு அப்படின்னு எல்லாம் பார்க்கிறப்ப.

07:22

Speaker A

பராசக்திக்கு இத்தனை நாள் நான் விரதம் இருக்கேன் இத்தனை நாள் நான் மாலை போடுறேன் அப்படிங்கறது எல்லாம் இருக்கு இல்லையா.

07:30

Speaker A

பராசக்தி கோயிலுக்கு நான் நடந்தே வரேன் அப்படிங்கற மாதிரிலாம்.

07:34

Speaker A

உங்களுடைய உடலை கொஞ்சம் நீங்க வருத்தணும்.

07:38

Speaker A

உங்களுடைய உடலை வருத்தி நீங்க வந்து வேண்டுகோள் பண்றப்போ நடைபயணம்.

07:44

Speaker A

நடந்து பாதயாத்திரை வரக்கூடிய வேண்டுகோள்கள் அந்த மாதிரிலாம் நீங்க வச்சு பண்றப்ப.

07:50

Speaker A

உங்களுக்கு கடன் சுமை அப்படிங்கறது கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிக்கும்.

07:54

Speaker A

இப்ப கடக ராசிக்காரங்க எல்லாம் நாங்க எந்த மாதிரி வழிபாடு பண்ணனும் அப்படின்னா.

07:59

Speaker A

துர்கை வழிபாடு பண்ண சொல்லி இருக்கேன் இல்லையா.

08:01

Speaker A

துர்கை ஸ்தலங்களுக்கு போயிட்டு ராகுகாலத்துல அங்க நின்னுட்டு ஓம் தும் துர்காய நமஹ அப்படின்னு நீங்க.

08:07

Speaker A

ஸ்தலங்கள்ல வழிபாடு பண்ணிட்டு வீட்ல கூட வீட்ல ராகுகாலத்துல வழிபாடு பண்ணக்கூடாது.

08:10

Speaker A

வீட்ல நார்மல் டைம்ல தான் வந்து ஒரு வெள்ளிக்கிழமை அந்த மாதிரி நீங்க வழிபாடு பண்றப்போ.

08:14

Speaker A

துர்கையை வச்சு வழிபாடு பண்ணுங்க.

08:16

Speaker A

அதாவது அந்த துர்கை சாந்த துர்கையா இருப்பாங்க.

08:20

Speaker A

அந்த புலி மேல உட்கார்ந்து இருக்க ஒரு துர்கை இருப்பாங்க தெரியுமா சிரித்த முகத்தோட.

08:24

Speaker A

அந்த மாதிரி ஒரு துர்கையை வச்சு ஓம் தும் துர்காய நமஹ அப்படின்னு நீங்க வழிபாடு பண்ண பண்ண அந்த மந்திரங்கள் உச்சரிக்க உச்சரிக்க செழிப்பு அப்படிங்கறது உங்களுடைய குடும்பத்துல அதிகரிக்க ஆரம்பிக்கும்.

08:31

Speaker A

சோ கடன் அப்படிங்கறது முக்கியமா இந்த சனி கேது.

08:35

Speaker A

சில டைம் ராகு.

08:36

Speaker A

கடன் வாங்க நம்மளுக்கு வைக்கும்.

08:37

Speaker A

ராகு இப்ப ஒவ்வொரு கிரகங்கள் இருக்கு இல்லையா.

08:40

Speaker A

ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு காரணத்துக்காக நம்மள கடன் வாங்க வைக்கிறப்போ ராகு வந்து.

08:45

Speaker A

அதித ஆடம்பரத்துக்கும் கற்பனை இமேஜினேஷன் இல்லூஷன் பார்த்துக்கலாம் அப்படிங்கறது தருணத்துல ராகு கடன் வாங்க வச்சிரும்.

08:52

Speaker A

கேது வந்து வச்சு செஞ்சிரும்.

08:54

Speaker A

கேது காலங்கள்ல எப்படி கடன் வாங்க வைக்கும் அப்படின்னா எல்லாமே என்கிட்ட இருந்து போய்க்கிட்டே இருக்கு.

09:00

Speaker A

எப்படியாவது நான் தக்க வச்சுக்கணும் அப்படின்னா அது எப்படின்னா.

09:05

Speaker A

ஒரு ஓட்டை வழியா எல்லாமே ஒழுகி போயிட்டே இருக்கிற மாதிரிதான் கேது காலங்கள்ல கடன் படுறதும்.

09:09

Speaker A

கேது காலங்கள்ல கடன் அடைக்க முடியாம சிரமப்படுறதும் நம்ம யார்ட்டயாவது போய் கடன் அடைக்கிறதுக்கு இன்னொருத்தவங்க கிட்ட போய் கடன் கேட்க போற நேரத்துல கூட ஒரு அவமானம் அசிங்கமோ.

09:15

Speaker A

இல்ல கடன் கிடைக்க முடியாத ஒரு சூழ்நிலையோ கேது இந்த மாதிரி உருவாக்கிடும்.

09:20

Speaker A

அதனாலதான் நான் வந்து விநாயகர் வழிபாடு பண்ணுங்க.

09:23

Speaker A

ஏன்னா இந்த கடன் அப்படின்னாலே.

09:26

Speaker A

இந்த சனி ராகு கேது பெரிய ரோல் பிளே பண்ணுவாங்க.

09:30

Speaker A

புதன் கெட்டு போயிருச்சு.

09:33

Speaker A

அந்த நேரத்துல உங்களால டிசிஷன் எடுக்க முடியல அப்படின்னா.

09:37

Speaker A

புதன் ஸ்தலங்களுக்கு போயிட்டு வரது உங்களுடைய புத்தியை ஷார்ப் ஆக்கிக்கிறது.

09:42

Speaker A

புத்தி மூலமா எப்படி சம்பாதிக்கணும் அப்படிங்கறதுதான் நீங்க வந்து ஃபாலோ பண்ணனும்.

09:47

Speaker A

இப்ப குரு வழிபாடு அப்படின்னு எல்லாம் பண்றப்போ.

09:51

Speaker A

குரு வழிபாடு பண்ண பண்ண இந்த கடன் தொல்லைகளால அவமானப்படாம அசிங்கப்படாம தப்பிக்க முடியும்.

09:57

Speaker A

செவ்வாய் வழிபாடு அப்படின்னு பண்றப்போ.

09:59

Speaker A

செவ்வாய்ங்கறது முருகன்.

10:01

Speaker A

முருகர் வழிபாடுன்னு பண்றப்போ பெரும் பிரச்சனைல போய் விடாது.

10:05

Speaker A

அதாவது சில பேத்துக்கெல்லாம் வந்து இப்ப பேங்கே வந்து எல்லாமே ஜப்தி பண்ணிட்டு போறாங்க.

10:12

Speaker A

இல்ல ஒரு அடிதடி மாதிரி ஆயிடுது.

10:14

Speaker A

இல்ல ஒரு பஞ்சாயத்து மாதிரி ஆயிடுது.

10:15

Speaker A

அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்லாம் வந்து இந்த செவ்வாய் ஹோரையில கடன் வாங்கக்கூடிய சிச்சுவேஷன் வரப்போ இந்த மாதிரிலாம் அமைஞ்சிரும்.

10:22

Speaker A

அதனால எந்த ஹோரை ஹோரைங்கறது முக்கியம் கடன் கொடுக்கிறதும் கடன் வாங்குறதும்.

10:27

Speaker A

அந்த ஹோரை பார்த்து செய்யறது நல்லது.

10:30

Speaker A

சப்போஸ் சனிக்கிழமை நீங்க கடன் வாங்கிடுறீங்கன்னு வச்சுக்கோங்க.

10:33

Speaker A

சனி பெருக்கிட்டே தான் போகும்.

10:35

Speaker A

சனிக்கிழமை கடன் வாங்குறீங்கன்னா அது நோய்க்கா இருக்கட்டும்.

10:40

Speaker A

நோய்க்கு கடன் வாங்குறீங்க அப்படின்னா.

10:42

Speaker A

அது ஓரளவுக்கு நம்மளால அடைச்சிட முடியும்.

10:45

Speaker A

ஏன்னா சனியே வந்து அன்னைக்கு மருத்துவத்துக்கு நீங்க செலவு பண்ணலாம்.

10:49

Speaker A

அது வந்து எதுவும் பண்ணாது.

10:50

Speaker A

சுபகாரியங்களுக்கு சனிக்கிழமைல வந்து கடன் வாங்கிற வேலை வேண்டவே வேண்டாம்.

10:56

Speaker A

அது வந்து இன்னும் கஷ்டத்திலேயே போய் விட்டும்.

10:59

Speaker A

அதனால கடன் வாங்குறதுக்கும் வெள்ளிக்கிழமை யாரும் கடன் கொடுக்கவும் மாட்டாங்க.

11:03

Speaker A

வாங்கவும் மாட்டாங்க.

11:05

Speaker A

ஆனா செவ்வாய்க்கிழமை நீங்க கடன் அடைக்கலாம்.

11:09

Speaker A

புதன்கிழமை கடன் கேட்கிறதுக்கு டிஸ்கஷன்ஸ் வச்சுக்கலாம்.

11:12

Speaker A

ஒரு வியாழக்கிழமையா கடன் யாருக்காவது நீங்க கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா குரு வழிபாடு பண்ணிட்டு வியாழக்கிழமை கடன் கொடுங்க.

11:18

Speaker A

அடைக்கிறவங்க செவ்வாய்க்கிழமை அடைங்க.

11:20

Speaker A

இந்த மாதிரி நேரம் காலம் நாள் கிழமை உங்களுக்கு சந்திராஷ்டமமா இல்லையா இந்த மாதிரி எல்லாம் பார்த்துட்டு.

11:25

Speaker A

என்னங்க ஆத்திர அவசரம் எங்களுக்கு ஒரு ஹாஸ்பிடல் எக்ஸ்பென்ஸ்.

11:28

Speaker A

இந்த டைம்ல போய் நாங்க நேரம் காலம் பார்த்துட்டு இருக்க முடியுமா அப்படின்னா.

11:31

Speaker A

ஆத்திர அவசரத்துக்கு நம்ம நேரம் காலம் பார்க்க முடியாது.

11:33

Speaker A

அது வந்து உதவி.

11:35

Speaker A

அது வந்து நம்ம உதவி கேட்கிறோம்.

11:37

Speaker A

அது எமர்ஜென்சிக்கு உதவி கேட்கிறோம்.

11:39

Speaker A

முறையா கடன் கேட்கிற ஒரு அமைப்புன்னு இருக்கு இல்லையா.

11:43

Speaker A

இப்ப நீங்க வந்து பினான்சியல் கிட்ட எல்லாம் போய் பணம் கேட்கிறீங்கன்னா.

11:46

Speaker A

அதுக்கெல்லாம் ஒரு நேரம் காலம் ஒரு பேங்க்ல போய் நகையை அடமானம் வைக்க போறீங்க.

11:51

Speaker A

இல்ல அடைக்க போறீங்க.

11:52

Speaker A

இதுக்கெல்லாம் நீங்க நேரம் காலம் பார்த்து செய்யறப்போ உங்களுக்கு இழந்த செல்வம் திருப்பி கிடைக்கணும்.

11:57

Speaker A

அப்படிங்கறதுதான் வந்து கடன் அடைத்தல் அப்படிங்கறதே பேரு.

12:00

Speaker A

ஒரு கடன் எதுக்கு நம்ம வாங்குறோம்.

12:02

Speaker A

ஒரு கடன் நம்ம வாங்குறோம்னா தெளிவா இருக்கணும்.

12:07

Speaker A

அந்த கடன் எப்படி உபயோகப்பட்டுச்சுன்னு ஒன்னு இருக்கு.

12:10

Speaker A

ஊதாரித்தனமா செலவு பண்ணிட்டு காத்துல போன மாதிரி இருந்திருக்க கூடாது கடன்.

12:14

Speaker A

ஒரு பொருள் உள்ள வரணும் ஒரு கடன் நம்ம வாங்குறோம்னா அந்த பொருளுக்கான ஒரு அடையாளம் அப்படிங்கறது வீட்ல இருந்து.

12:19

Speaker A

அது ஒரு செழிப்பை கொடுக்கிற மாதிரி இருக்கணும்.

12:21

Speaker A

இல்லைன்னா நிறைய கடன் வாங்கினவங்க வீட்டை போய் பாருங்க வீட்ல ஒண்ணுமே இருக்காது.

12:24

Speaker A

அப்ப எதுக்கு கடன் வாங்கினீங்க அப்படின்னா எதுக்கு வாங்கணும்னே தெரியாது.

12:27

Speaker A

எதையோ வித்து வித்து இந்த கடனுக்காகவே சம்பாதிக்கிறேன் இந்த கடன் அடைக்கிறதுக்காகவே நான் வாழ்றேன் அப்படிங்கிற மாதிரி போயிடும்.

12:33

Speaker A

அதனால பிளானிங் அப்படிங்கறது ரொம்ப முக்கியம்.

12:35

Speaker A

அகலக்கால் எப்பவுமே ஆபத்தானது.

12:38

Speaker A

சிறு சேமிப்பு கூட உங்களுக்கு ஹெல்ப் பண்ணும்.

12:40

Speaker A

அந்த சேமிப்புக்கெல்லாம் வந்து சாமிகிட்டயே வந்து நீங்க வந்து பணம் சேமிச்சு வைக்கிறது.

12:46

Speaker A

அந்த சேமிச்சு வச்ச பணத்துல வந்து ஆலய தரிசனங்களுக்கு செலவு பண்றது ஆலய வழிபாடு பண்றது.

12:52

Speaker A

இந்த மாதிரி பில்கிரிமேஜ் ட்ரிப் போறது இந்த மாதிரி தெய்வ வழிபாட்டுக்கான ட்ரிப் எல்லாம் வந்து.

12:56

Speaker A

நீங்க சேர்த்து வச்ச பணத்துல போயிட்டு வர வர செழிப்புங்கறது அதிகரிக்கும்.

13:00

Speaker A

பொதுவாவே எல்லா ராசிக்காரங்களுக்கும் சொல்ற விஷயம் என்ன அப்படின்னா.

13:05

Speaker A

யார் கடன் வாங்கிருந்தாலும் சரி என்ன ராசிக்காரங்க கடன் வாங்கிருந்தாலும் சரி விநாயகரை போய் பிடிச்சுக்கணும்.

13:09

Speaker A

ஏன்னா அவர்தான் ஆதி கடவுள் இல்லையா.

13:11

Speaker A

விநாயகரை வழிபாடு பண்ணி அவரையே சொல்யூஷன் கொடுக்க வைக்கணும் நீங்கதான் எனக்கு சரணாகதி அப்படின்னுட்டு.

13:17

Speaker A

விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைச்சு வழிபாடு பண்றது.

13:20

Speaker A

இந்த மாதிரி வழிபாடு முறைகள் எல்லாம் பண்ணி விநாயகரை வழிபட்டா மட்டும் இங்க கடன் அடைஞ்சிருமா அப்படிங்கறது இல்லை.

13:24

Speaker A

அவருடைய அந்த பிளஸ்ஸிங்ஸ் அப்படிங்கறது நீங்க எடுத்துக்கணும்.

13:27

Speaker A

அதுபோக முக்கியமா சந்திராஷ்டமம்.

13:31

Speaker A

வரக்கூடிய நாட்கள்ல உங்களுக்கு என்னைக்கு சந்திராஷ்டமம்.

13:34

Speaker A

எல்லா ராசிக்கார எல்லா நட்சத்திரக்காரங்களுக்குமே வந்து.

13:38

Speaker A

ஒரு ரெண்டரை நாள் சந்திராஷ்டமம் அப்படிங்கறது இருக்கும்.

13:41

Speaker A

உங்களுடைய சந்திராஷ்ட காலங்கள்ல எதுவுமே பண்ணாம.

13:46

Speaker A

அதாவது எதுவும் பண்ணாமங்கறது முடிவுகள் எடுக்காம.

13:50

Speaker A

கடன் வாங்கணும்ங்கற எண்ணம் இல்லாம.

13:53

Speaker A

சந்திராஷ்டம் அன்னைக்கு கடனை அடைக்கவும் வேணாம்.

13:58

Speaker A

கடனை கொடுக்கவும் வேணாம்.

14:00

Speaker A

வாங்க போகவும் வேணாம்.

14:01

Speaker A

அந்த நேரத்துல முடிவும் எடுக்க வேண்டாம்.

14:03

Speaker A

சந்திராஷ்டம காலங்கள்ல கடன் வாங்கினாலோ கடன் கொடுத்தாலோ.

14:09

Speaker A

கடன் அடைப்பது மிகவும் கடினம் ரொம்ப கஷ்டத்துல போய் விடுவீங்க.

14:12

Speaker A

சந்திராஷ்டம்.

14:13

Speaker A

தெரியாம நாங்க சந்திராஷ்டமத்துல கடன் வாங்கிட்டோம்.

14:16

Speaker A

எங்களுக்கு தெரியலையே.

14:18

Speaker A

அன்னைக்கு எங்க நட்சத்திரம்.

14:19

Speaker A

விதி அப்படித்தான் பண்ணும்.

14:21

Speaker A

அன்னைக்கு நீங்க கடன் வாங்க போற நேரத்துல சப்போஸ் ஒரு லோன் அப்ளை பண்ணி இருக்கீங்க.

14:25

Speaker A

எனக்கு அன்னைக்கு போய் நான் பேங்குக்கு போகணும்.

14:27

Speaker A

அன்னைக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம் போகாதீங்க.

14:29

Speaker A

அலைச்சல் ஜாஸ்தியா இருக்கும்.

14:30

Speaker A

அந்த கடனை அடைக்கவே முடியாது.

14:32

Speaker A

சரி இன்னைக்கு நான் லோன் அடைக்க போற நாள்.

14:33

Speaker A

இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம் போகாதீங்க.

14:35

Speaker A

திரும்பவும் அங்கேயும் ஏதாவது ஒரு அலைச்சலோ இல்ல ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டோ இல்ல கட்ட முடியாம போற சூழ்நிலையோ இல்ல மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையோ ஏதோ ஒன்னு.

14:43

Speaker A

சந்திராஷ்டமம் நம்மளுக்கு பண்ணி விட்டும்.

14:45

Speaker A

அதனால முடிஞ்ச அளவுக்கு சந்திராஷ்டம காலங்கள்ல அமைதியா இருந்துக்கிறது நல்லது.

14:49

Speaker A

தெய்வ வழிபாட்டோட இருந்துக்கிறது நல்லது.

14:51

Speaker A

எதற்காக கடன் வாங்குறோம்.

14:53

Speaker A

வீண் ஆடம்பரத்துக்கு வாங்குறோமா கால்குலேட்டிவா இருந்து.

14:57

Speaker A

சிக்கனமா இருக்க பழகிக்கிட்டீங்க அப்படின்னாலே யாருமே கடன் படணும் அப்படிங்கறது கிடையாது.

15:01

Speaker A

கடவுள் நம்மளுக்கு எல்லாத்துக்குமே யார் யாருக்கு எப்படி எப்படி படி அளந்து கொடுக்கணுமோ அப்படி கொடுத்துக்கிட்டே தான் இருப்பார்.

15:07

Speaker A

ஆசைப்பட பட தான் கடனுக்குள்ள போய் நம்ம விழுவோம்.

15:10

Speaker A

ஆசை ஆபத்து அப்படின்னு சொல்லி நான் இந்த வீடியோவை முடிச்சுக்கிறேன்.

Topics: கடகம் ராசி கடன் பிரச்சனை ராகு கேது பாதிப்பு துர்கை வழிபாடு விரதம் ஆன்மீக பரிகாரம் குடும்ப சுமை ஜோதிடம் பராசக்தி வழிபாடு முருகர் வழிபாடு


---
This is the markdown twin of https://sozai.app/transcript/kadagam-tottadhellam-ponnaga-pogiradhu/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
