**கடகம் 👉 ஹிமாலய வெற்றி அடைய போகிறீர்கள் | Kadagam | New Year Rasi Palan 2026  | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/kadagam-himalaya-victory-2026-rasi-palan/

2026-ல் கடக ராசிக்காரர்களுக்கு புதிய வாழ்க்கை, தொழில், ஆரோக்கியம் மற்றும் நிதி முன்னேற்றம் வரும். கவனமாக இருக்க வேண்டிய காலம்.

## Key Takeaways

- 2026 கடக ராசிக்காரர்களுக்கு புதிய தொடக்கங்கள் மற்றும் முன்னேற்றம் தரும் வருடம்.
- கிரக நிலைகளின் தாக்கம் காரணமாக கவனமாக செயல்பட வேண்டும்.
- ஆரோக்யம் மற்றும் குடும்ப உறவுகளில் கவனம் அவசியம்.
- பரிகாரங்கள் மற்றும் வழிபாடு மூலம் சுப பலன்கள் பெறலாம்.
- முயற்சி, ஒழுக்கம் மற்றும் நிதானம் மூலம் வெற்றி பெற முடியும்.

## What the video covers

- 2026-ல் கடக ராசிக்காரர்களுக்கு அதிகாரம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும்.
- சனி, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்களின் தாக்கம் காரணமாக கவனமாக இருக்க வேண்டும்.
- பண, வேலை, தொழில் மற்றும் பயணங்களில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
- குடும்ப உறவுகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- கடன் வாங்கி வீடு கட்டுதல், வாகனங்கள் வாங்குதல் போன்ற நிதி நடவடிக்கைகள் சுப பலன்களை தரும்.
- ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் வழிபாடு மற்றும் பரிகாரங்கள் மூலம் நல்ல பலன்கள் பெறலாம்.
- மார்ச் மாதம் வரை தீவிரமான முயற்சி மற்றும் ஒழுக்கம் அவசியம்.
- முடி உதிர்தல், தோல் பிரச்சினைகள் போன்ற ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- கல்வி, வேலை மற்றும் ப்ரமோஷன் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
- கடந்த ஐந்து வருட அனுபவங்களை மனதில் வைத்து நிதானமான முடிவுகள் எடுக்க வேண்டும்.

Answers

## Questions about this video

2026 ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கும்?

2026 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக இருக்கும். அவர்கள் இத்தனை வருடங்களாகப் பட்ட கஷ்டங்களுக்குப் பதில் கிடைக்கும், மேலும் அவர்கள் போட்ட உழைப்பிற்கான 100% பலன் கிடைக்கும்.

கடக ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் எதில் கவனமாக இருக்க வேண்டும்?

சூரியன், சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் மீனத்தில் இருக்கும் காலத்தில் கடக ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பயணம், முதலீடு, தொழில் மற்றும் அரசு வேலைகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

2026 ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்குமா?

ஆம், 2026 ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்களுக்கு புதிய வாழ்க்கை, புதிய பயணம், புதிய தொழில் மற்றும் புதிய வேலை போன்ற பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இது அவர்களுக்கு ஒரு புதிய தொடக்கமாக அமையும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

DISCLAIMER

00:02

Speaker A

Retro ஆன்மீகம் வழங்கும் புத்தாண்டு பலன்கள் 2026

00:06

Speaker B

சூரியன், சனி, செவ்வாய் இவர்கள் எல்லாம் இருக்கும் காலத்துல மிக கவனமாக இருக்கணும்.

00:10

Speaker B

இனி நீங்க அதிகாரத்துல சிறக்கக்கூடிய காலம், மிக ஜாக்கிரதையாக இருக்கணும்.

00:15

Speaker C

நீங்க என்ன எஃபர்ட் போட்டீங்களோ அதுக்கான 100% ரிசல்ட் வரக்கூடிய அமைப்பு கடகத்துக்கு இருக்கு.

00:20

Speaker D

ரொம்ப நாளுக்கு அப்புறம் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நிம்மதியா இருக்கக்கூடிய வாய்ப்பு இந்த தடவை இத்தனை ராசிகளில் கடக ராசிக்காரங்களுக்கு தான் இருக்கப்போகுது இதுவரைக்கும் விட்ட கண்ணீருக்கு எல்லாம் ஒரு பதில் கிடைக்கப்போகுது.

00:29

Speaker E

விபரீத ராஜயோகம் அப்படின்னு ஒரு சமாச்சாரம் இருக்கு.

00:32

Speaker E

பயங்கரமா கொட்டோ கொட்டு கொட்டும் அப்படிங்கக்கூடிய அர்த்தமும் இருக்கு கடகத்துக்கு பொதுவா 2026 அமேசிங்கா இருக்கும்.

00:38

Speaker F

Retro ஆன்மீகம் வழங்கும் புத்தாண்டு பலன்கள் 2026

00:42

Speaker F

வாழ்க்கையில ரொம்ப கஷ்டமா இருக்கு வருஷம் போகுது மாசம் போகுது நாளும் போகுது ஆனா கஷ்டம் மட்டும் போகவே இல்லை அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து பல ராசிக்காரர்கள் பேசிக்கிட்டே இருக்காங்க.

00:53

Speaker F

நீங்களும் இதெல்லாம் பண்ணுங்க இதெல்லாம் சொன்னீங்கன்னா உங்களோட வாழ்க்கை சரியாயிடும் அப்படின்னு 2025ல நிறைய சொல்லி இருந்தீங்க அதை கேட்டு நிறைய பேரோட வாழ்க்கையில நிறைய மாற்றங்களும் இருந்துச்சு.

01:06

Speaker F

அதேபோல இந்த 2026லயும் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கப்போகுது.

01:50

Speaker F

சார் கடக ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கும் சார்?

01:54

Speaker B

அவங்களுக்கு என்னங்க அவங்க காட்டுல அடை மழை கடந்த அஞ்சு வருஷமா படாத பாடுபட்டாங்க.

02:00

Speaker B

இப்ப கூட பாருங்களேன் நம்ம டிவியை வந்து என்னதான் சொல்ல போறீங்க பாதி பிரடிக்ஷன் அவங்களுக்கே தெரியும்.

02:10

Speaker B

ஏன்னா நொந்து நூலாயிட்டீங்க இல்லையா 10 லட்சம் ரூபாய் வந்துரும் சார் வரட்டும் சார் போனா போதும்.

02:14

Speaker B

மொத்தமா போயிடும் சார் போனா போதும் விடுங்க சார் இந்த ஃப்லோட்டிங் மைண்ட் வந்ததே உங்களுக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னாடி தான்.

02:19

Speaker B

ஆகவே இந்த காலகட்டம் எப்படி இருக்கும் புதிய வாழ்க்கை புதிய பயணம் புதிய தொழில் புதிய வேலை வாழ்க்கையே புதுசு சார்.

02:28

Speaker B

ஆனா இந்த சந்தேகத்தை விட்டுருங்க.

02:31

Speaker B

சனி சம்பந்தமான பிரச்சனைகள் உங்க ஜாதகத்துல நல்ல தெளிவா புரிஞ்சுக்கங்க.

02:37

Speaker B

பணம் வருது சார் அதை பெட்டியில எடுத்து வைங்க நான் சொல்லணுமா?

02:40

Speaker B

ஆனால் ஏழாம் இடத்துல உங்களுக்கு நான்கு கிரகங்கள் ஒண்ணா சேரப்போகுது இந்த வருஷம் பிறக்கும் பொழுதே.

02:46

Speaker B

எட்டாம் இடத்துல நான்கு கிரகங்கள் ஒன்பதாம் இடத்துல நான்கு கிரகங்கள்.

02:50

Speaker B

அதே மாதிரி சனியும் செவ்வாயும் சூரியன், சனி, செவ்வாய்.

02:54

Speaker B

இப்படி மீனத்துல இவர்கள் எல்லாம் இருக்கும் காலத்துல மிக கவனமாக இருக்கணும்.

02:58

Speaker B

மிக கவனமாக.

03:01

Speaker B

பயணத்துல மட்டுமா?

03:03

Speaker B

இன்வெஸ்ட்மென்ட் கூட.

03:05

Speaker B

செய்யும் தொழில்ல கூட ஊர் விட்டு ஊர் போனால் இடம் விட்டு இடம் மாறினால்.

03:11

Speaker B

அரசாங்க உத்தியோகத்தில் வேலை செய்யறவங்க அடுத்தவங்கள நான் நம்புனேன் சார்.

03:18

Speaker B

ரொம்ப நல்லவர் மனுஷன் சார் அப்படின்னா நம்பாதீங்க.

03:21

Speaker B

உங்க வேலை என்னவோ அதை பாருங்க.

03:23

Speaker B

அன்புக்கு அடிமையா இருந்த காலம் போதும்.

03:26

Speaker B

இனி நீங்க அதிகாரத்துல சிறக்கக்கூடிய காலம்.

03:30

Speaker B

மிக ஜாக்கிரதையாக இருக்கணும் தகப்பனுடைய உறவுல ஜாக்கிரதையாக இருக்கணும்.

03:35

Speaker B

அதே மாதிரி அவருடைய உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.

03:39

Speaker B

என்ன சார்?

03:40

Speaker B

வெறும் நெகட்டிவாவே சொல்லிட்டு போறீங்களே.

03:43

Speaker B

நான் என்னென்னமோ இந்த சனி வரும்போது நல்லா இருக்கும்.

03:48

Speaker B

குரு வரும்போது நல்லா இருக்கும்னு நினைச்சேனே அப்படின்னா.

03:51

Speaker B

12 ஆம் இடத்துல இந்த வருஷம் பிறக்கும் பொழுது குரு இருக்கார்.

03:57

Speaker B

அது ஐந்து ஏழு பார்வைக்கு ஒரு விதமான லாபத்தையும்.

04:02

Speaker B

அதுவே 12 ஆண்டுகள் பொறுத்து உச்சம் பெறப்போகிறார்.

04:07

Speaker B

ஐந்து ஏழு ஒன்பதுக்கு வருகிறார்.

04:10

Speaker B

அப்படி இருக்கும் காலத்துல அது ஒரு விதமான பலனும்.

04:14

Speaker B

ஆனால் இரண்டுமே சுப பலனை கொடுக்கும்.

04:19

Speaker B

தெளிவான பலனை கொடுக்கும்.

04:22

Speaker B

மிக அற்புதமான பலன் கிடைக்கணும்.

04:26

Speaker B

என்னங்க கல்யாணத்தை பத்தி பேசல குடும்பத்தை பத்தி பேசல.

04:32

Speaker B

மனைவியை பத்தி பேசல.

04:35

Speaker B

பிள்ளைகள் படிப்பை பத்தி பேசல.

04:37

Speaker B

தானே.

04:38

Speaker B

எல்லாமே நல்லா இருக்கும்.

04:40

Speaker B

பிள்ளைகளுக்காக செலவு செஞ்சு வெளிநாடு வெளி மாநிலம் வெளி ஊருக்கு கடன் வாங்கி அனுப்பலாம்.

04:46

Speaker B

கடன் வாங்கி வீடு கட்டலாம்.

04:48

Speaker B

நீங்க வெளிநாடோ வெளி மாநிலமோ போலாம்.

04:52

Speaker B

ஏன்?

04:53

Speaker B

நீங்க வெளிநாட்டுல இருக்கிறவரா இருந்தா உங்க மனைவி குழந்தைகளையும் கூட்டிட்டு போய் அவங்களோட சேர்ந்து வாழலாம்.

05:00

Speaker B

சின்ன ஒரு பிளாட் வச்சுக்கிட்டு இருக்கீங்க.

05:02

Speaker B

பெரிய வீடு கட்டலாம்.

05:04

Speaker B

வாகனங்கள் மாற்றலாம்.

05:06

Speaker B

பழைய வாகனம் ஒன்னு வச்சிருக்கேன் சார் இல்ல ஸ்கூட்டர் வச்சிருக்கேன்.

05:10

Speaker B

இப்ப நான் கார் வாங்கட்டுமா?

05:12

Speaker B

வாங்கலாம்.

05:13

Speaker B

ஷேர் மார்க்கெட்ல இருக்கிறவங்களுக்கு அற்புதமான காலம்.

05:17

Speaker B

அடுத்தவங்களுக்கு கை காமிச்சேன் சார்.

05:20

Speaker B

அவன் ஒரு ஷேர் வாங்கி நல்லா இருக்கான்.

05:23

Speaker B

ஆனா இப்ப நான் வாங்கட்டுமா?

05:25

Speaker B

கடன் வாங்கி தான் சார் வாங்க போறேன்.

05:27

Speaker B

ஏற்கனவே என்கிட்ட பணம் இல்லை.

05:30

Speaker B

பழைய கடனை நான் தீக்கணும்.

05:32

Speaker B

அப்படின்னா பழைய கடனை தீர்த்துட்டு இப்ப இருக்கிற கடனை வாங்கி வீடு வாங்குறதோ வாகனங்கள் வாங்குறதோ சுப பலன் கிடைக்கும்.

05:38

Speaker B

இது எல்லாத்தை விட நான் கீசர்ல குளிச்சிட்டு வந்து நானே ஹீட்டர் ஆஃப் பண்ணேன் சார்ன்னு சொல்லாதீங்க.

05:44

Speaker B

நெருப்பினால் எலக்ட்ரிசிட்டியினால் பிரச்சனைகள் வரும்.

05:49

Speaker B

தாய்மார்கள் குறிப்பா இந்த குழந்தைங்க கை குழந்தை வச்சுக்கிட்டு இருக்கிறவங்க கிச்சன்ல வேலை செய்யும்போது ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும்.

05:55

Speaker B

டக்குன்னு அந்த எண்ணெய் வச்சிருக்கிற அடுப்புல வந்து கையை பிடிச்சு இழுத்துருவாங்க.

06:01

Speaker B

அதனால பிரச்சனைகள் வரும்.

06:04

Speaker B

அன்பா இருங்க அடிமையா இருக்காதீங்க.

06:07

Speaker B

உங்களுக்கு கடந்த ஐந்து வருடம் ஏற்பட்ட அனுபவத்தை வச்சுக்கங்க.

06:12

Speaker B

சுபமான பலன்.

06:15

Speaker B

சூப்பரா வர்றதுக்கு ஒரு பலன் சொல்லி தரேன்.

06:19

Speaker B

பரிகாரம் சொல்லி தரேன்.

06:21

Speaker B

அது என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா.

06:23

Speaker B

ஆலங்குடி அவர் பேரே ஆபத் சகாயேஸ்வரர்.

06:29

Speaker B

அவர் ஆபத்துல வந்து உதவக்கூடியவர்.

06:32

Speaker B

அவர் யாருக்கு உதவினார்?

06:34

Speaker B

ஆலங்குடியில போய் ஆபத் சகாயேஸ்வரர் கிட்ட சரணடைந்தது குரு பகவானே.

06:40

Speaker B

ஆகவே நான் அங்க போனேன் சார்.

06:42

Speaker B

நான் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்துட்டேன் அப்படின்னா.

06:46

Speaker B

அஞ்சு ரூபாய்க்கு கற்பூரம் ஏத்தி 50,000 கேட்டா பிரயோஜனம் இல்லை.

06:51

Speaker B

கர்ம பரிகாரங்கள் செய்யணும்.

06:54

Speaker B

அங்க போயிட்டு என்ன பண்ணனும் மஞ்சள் ஆடை மஞ்சள் வஸ்திர தானம்.

06:59

Speaker B

அதே மாதிரி வியாழக்கிழமையில போயிட்டு சுவாமிக்கு நீங்க படைச்சு அதையெல்லாம் தானம் செய்யணும்.

07:05

Speaker B

நிறைய கோவில்கள்ல வந்து இந்த மூக்கடலையை வந்து மாலை கட்டி.

07:10

Speaker B

அதையெல்லாம் குரு பகவானுக்கு போடுறீங்க.

07:13

Speaker B

அதெல்லாம் பிரயோஜனம் இல்லை.

07:15

Speaker B

நாங்க உங்க மூக்கடலையை வந்து சுண்டல் செஞ்சு சாப்பிடுங்க அது புரோட்டீனுங்க.

07:21

Speaker B

அது உங்களுக்கு ஆரோக்கியம் தரும்.

07:24

Speaker B

குரு பலன் வரும் அதனால போடுங்கன்னு சொன்னா.

07:27

Speaker B

அதுலயே மாலை கட்டி ரொம்ப குரு பகவானுக்கு ஒரு மாலையை போட்டு.

07:32

Speaker B

தயவு செஞ்சு பரிகாரத்தை புரிஞ்சுகிட்டு செய்யுங்க.

07:36

Speaker B

அந்த பரிகாரத்தை தெரிஞ்சு செஞ்சீங்கன்னா சுப பலன் அற்புதமான பலன் கிடைக்கும்.

07:40

Speaker B

ஆலங்குடி போயிட்டு வாங்க ஆபத் சகாயேஸ்வரரை பாருங்க.

07:45

Speaker B

தெளிவான முடிவெடுங்க ஊர் விட்டு ஊர் போங்க.

07:48

Speaker B

அதிக லாபம் சந்திக்கலாம்.

07:51

Speaker B

ஆனால் தகப்பனோட உறவு ஜாக்கிரதையாக இருங்க பயணத்துல மிக கவனமாக இருங்க.

07:57

Speaker B

வேற என்னங்க?

07:59

Speaker B

நீங்க பார்க்காத அனுபவமா கடந்த ஐந்து வருடம் உங்களுக்கு கிடைக்காத அனுபவமா?

08:04

Speaker B

அந்த அனுபவத்துல மனசுல வச்சுக்கங்க.

08:07

Speaker B

கூட இருக்கிறவங்க கிட்ட எப்படி இருக்கணும்னு நிதானிச்சு முடிவெடுங்க.

08:12

Speaker B

நிதானம் இருந்தால் இந்த ஆண்டு சுப பலன் கிடைக்கும்.

08:17

Speaker B

வாழ்க வளமுடன்.

08:19

Speaker B

ஆல் தி பெஸ்ட்.

08:20

Speaker F

ஜீவிதா மேம் நீங்க சொல்லுங்க.

08:22

Speaker F

கடக ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கப்போகுது?

08:27

Speaker C

கடக ராசிக்காரங்களுக்கு வந்து நேரம் நல்லா இருக்கு அப்படிங்கறப்போ அது முயலாமை கதையா மாறிடக்கூடாது.

08:32

Speaker C

நீங்க வந்து உங்களுடைய வாழ்க்கையை வந்து இரண்டு மாதம் இரண்டு மாதத்துக்கு அப்புறம் ஒரு நாலு மாதம் அந்த நாலு மாதத்துக்கு அப்புறம் மறுபடியும் அடுத்து வரக்கூடிய மாதங்கள் அப்படின்னு.

08:40

Speaker C

நீங்க செக்ரிகேட் பண்ணி பிரிச்சு வைக்கணும் பிரிச்சு வச்சா மட்டுமே குரோத் அப்படிங்கறது இருக்கு.

08:45

Speaker C

ஏன் அப்படின்னா லைஃப் நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு கடகத்துக்கு தூங்கக்கூடிய ஒரு அமைப்பு இருக்கு.

08:52

Speaker C

விடிய விடிய வேலை பார்க்கிறது விடிய விடிய படிக்கிறது அதுக்கப்புறம் காலையில ஃபுல்லா தூங்குறது.

08:59

Speaker C

நேரத்துக்கு அந்த உங்களுக்கு அந்த பங்ச்சுவாலிட்டி அப்படிங்கறது மிஸ் ஆகறதுக்கு வாய்ப்பு நிறைய இருக்கு.

09:03

Speaker C

டிசிப்ளின் அப்படிங்கறத கொண்டு வரதுதான் இந்த மார்ச் மாசம் வரைக்கும்.

09:08

Speaker C

2026 மார்ச் மாசம் வரைக்கும் நீங்க என்ன டிசிப்ளின் எஃபர்ட் போடுறீங்க அப்படிங்கற ஒரு விஷயத்துல கவனம் செலுத்த செலுத்த தான்.

09:16

Speaker C

முயல் வேகமா ஓடும் ஆனா என்ன பண்ணும் அந்த கதை எல்லாத்துக்குமே தெரியும்.

09:20

Speaker C

ஆமை முந்திக்கும் இந்த மாதிரி சிச்சுவேஷன்ஸ் வரும்.

09:23

Speaker C

ஏன்னா.

09:24

Speaker C

ஃபார் எக்ஸாம்பிள் வேலை செய்யறவங்க எல்லாம் இருப்பீங்க.

09:28

Speaker C

ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் இருப்பீங்க.

09:30

Speaker C

ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் நினைப்பீங்க எனக்கு அட்டென்டன்ஸ் இருக்கு அப்படின்னு நினைச்சுட்டு லீவ் போடுறீங்கன்னு வச்சுக்கோங்க.

09:35

Speaker C

அதுல ஒரு ப்ராப்ளம் வரது.

09:37

Speaker C

அதே மாதிரி ஆபீஸ் போறவங்க எனக்கு தான் ப்ரமோஷன் வரப்போகுதே அப்படின்னு சொல்லிட்டு கொஞ்சம் லத்தாஜிக்கா இருக்கப்போ உங்களை சில பேர் முந்தறது.

09:43

Speaker C

இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடக்கும்.

09:46

Speaker C

அதனால இந்த மார்ச் மாசம் வரைக்கும் தீவிரமான ஒரு எஃபர்ட் டிசிப்ளின் ஹெல்த் ரொம்ப ரொம்ப முக்கியம்.

09:51

Speaker C

நிறைய கடகத்துக்கு முடி உதிரும்.

09:55

Speaker C

ஸ்கின்ல இஸ்யூஸ் வரும்.

09:57

Speaker C

ஏன் அப்படின்னா உங்களை நீங்க கவனம் செலுத்த மாட்டீங்க.

10:00

Speaker C

அதனால முதல் உங்களுடைய ஹெல்த்ல நீங்க பிரையாரிட்டி கொடுக்கணும் மார்ச் மாசம் வரைக்கும்.

10:04

Speaker C

ஏன்னா அதுக்கப்புறம் குரோத்தை நோக்கி போகக்கூடிய அடுத்த ஸ்டெப்.

10:09

Speaker C

என்ன டெசிஷன் எடுக்க போறீங்க என்ன ப்ரொபஷன் சூஸ் பண்ண போறீங்க.

10:13

Speaker C

என்ன படிக்க போறீங்க அப்படிங்கற ஒரு விஷயம் இருக்கு.

10:16

Speaker C

யார் கூட பழக போறீங்க அப்படிங்கற ஒரு விஷயம் இருக்கு.

10:18

Speaker C

ஏன்னா நெக்ஸ்ட் ஸ்டெப் குரோத் நோக்கி போகும் பொழுது எதை சூஸ் பண்றது அப்படிங்கறது தெரியாது.

10:23

Speaker C

அப்போ அந்த மார்ச் மாசத்துக்குள்ளாரியே அந்த பிளானிங் குள்ள நீங்க இருந்திருக்கணும்.

10:28

Speaker C

அதுக்கப்புறம் அடுத்த லெவல் எக்ஸிகியூஷன் போகும் பொழுது.

10:32

Speaker C

அக்டோபர் நவம்பர் மாசத்துல எல்லாம் பீக் குரோத்துக்கு போகக்கூடிய ஒரு அமைப்பு.

10:37

Speaker C

கையில பணம் செழிக்கக்கூடிய ஒரு அமைப்பு.

10:40

Speaker C

எப்படியோ பணம் வந்து சேரும்.

10:42

Speaker C

ஸ்டூடண்ட்ஸ் இருக்கீங்களா?

10:44

Speaker C

எப்படியாவது நல்ல மார்க் வாங்கிடுவீங்க.

10:46

Speaker C

ஆனா அந்த மார்ச் மாசம் முன்னாடி வரைக்கும் ஒரு எஃபர்ட் போடணும்னு சொன்னேன் இல்லையா நீங்க என்ன எஃபர்ட் போட்டீங்களோ அதுக்கான 100% ரிசல்ட் வரக்கூடிய அமைப்பு கடகத்துக்கு இருக்கு.

10:56

Speaker C

ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கடகம் குரோத்துக்குள்ள போறதா இருந்தாலும்.

11:00

Speaker C

யாரை நம்புறோம்?

11:02

Speaker C

நம்ம குவாலிட்டி டைம் எங்க ஸ்பென்ட் பண்றோம்?

11:04

Speaker C

குவாலிட்டி டைம் ஃபேமிலில ஸ்பென்ட் பண்ணனும்.

11:07

Speaker C

உங்களுடைய அன்பை குடும்பத்துக்குள்ளார காட்டினீங்க அப்படின்னா வாழ்க்கை நிம்மதியா இருக்கும்.

11:12

Speaker C

உங்களோட அன்பை வெளிய போய் காட்டுறப்போ அங்க ஸ்கேட்டர் ஆகும் உங்களை மிஸ்யூஸ் பண்ணப்படும்.

11:18

Speaker C

கண்மூடித்தனமா சுத்தி இருக்கிறவங்களை நம்பிடவே கூடாது இது கடகம் செய்யும் ஏன்னா வாழ்க்கையில ஒரு குரோத் வரப்போ.

11:25

Speaker C

ஏதாவது ஒன்னு வந்து நம்மள புல் பேக் பண்ணும் அதாவது கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகும் பொழுது.

11:30

Speaker C

கர்மா மீண்டும் புடிச்சு இழுக்க தான் பார்க்கும்.

11:33

Speaker C

அதாவது நம்ம அந்த ஒரு காமெடி பார்த்திருப்போம்ல அந்த கிட்னி எடுக்க வா வான்னு கூப்பிடுறானு.

11:38

Speaker C

அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன் கடகத்துக்கு வரும்.

11:41

Speaker C

அந்த நேரத்துல நிதானமா இருந்து விவரமா செயல்படும் பொழுது குடும்பத்தை பற்றிக்கணும்.

11:47

Speaker C

குடும்பத்தோட ஆலோசனைகளை கேட்கணும்.

11:49

Speaker C

குடும்பத்து கிட்ட யாரு ஒரு குவாலிட்டி டைம் அதாவது உங்களுடைய பேரண்ட்ஸ் ஆகட்டும் உங்க மனைவி ஆகட்டும் குழந்தைகளாகட்டும்.

11:56

Speaker C

இவங்க கிட்ட உங்களுடைய குவாலிட்டி டைம் ஸ்பென்ட் பண்ணும் பொழுது.

12:00

Speaker C

ஏன்னா உங்களுடைய எனர்ஜி ரொம்ப நல்லா இருக்கு அப்படிங்கறப்போ.

12:04

Speaker C

அந்த எனர்ஜியை குடும்பத்துல ஸ்பென்ட் பண்றப்போ அனைத்தும் சுபிக்ஷமாகவே இருக்கும்.

12:08

Speaker F

ரொம்ப சந்தோஷம் மேம் குடும்பத்து கூட டைம் ஸ்பென்ட் பண்ண சொல்லி சொல்லி இருக்கீங்க.

12:13

Speaker F

வித்யா கார்த்திக் மேம் நீங்க சொல்லுங்க கடக ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கப்போகுது?

12:18

Speaker D

கடக ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கப்போகுது அப்படின்னா.

12:23

Speaker D

ஒரு வார்த்தையில் பதில் சொல்லணும்னா காரிய வெற்றி கிடைக்கப்போகுது.

12:27

Speaker D

கவலைகள் எல்லாம் மறக்கப்போகுது.

12:29

Speaker D

இதுவரைக்கும் விட்ட கண்ணீருக்கு எல்லாம் ஒரு பதில் கிடைக்கப்போகுது.

12:33

Speaker D

ரொம்ப நாளுக்கு அப்புறம் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நிம்மதியா இருக்கக்கூடிய வாய்ப்பு இந்த தடவை இத்தனை ராசிகளில் கடக ராசிக்காரங்களுக்கு தான் இருக்கப்போகுது.

12:44

Speaker D

ஓகே.

12:47

Speaker D

ஷார்ட்டா கடக ராசிக்காரர்களுக்கு இந்த 2026 எப்படி எல்லாம் இருக்கும் அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா நிறைய பேருக்கு பிசினஸ் லோன் கிடைக்கும்.

12:54

Speaker D

அதை வச்சு பிசினஸ் டெவலப்மென்ட் பண்ணுவீங்க.

13:04

Speaker D

ஒன்னா உங்க மூலமா இல்ல உங்க ஸ்பவுஸ் மூலமா இல்ல உங்களுடைய பார்ட்னர் மூலமா வச்சு பிசினஸ்கான டெவலப்மென்ட் அப்படின்றது கண்டிப்பா இருக்கு.

13:15

Speaker D

இதுவரைக்கும் இல்லாம வெளியூர் வெளி மாநிலம் கடந்து ஒரு வேலை பார்ப்பீங்க.

13:20

Speaker D

ஏற்கனவே இருக்கிற வேலையை இழுத்து முடிட்டு புதுசா ஒன்னு ஸ்டார்ட் பண்ணலாமான்ற மாதிரியான ஒரு தாட் வரும்.

13:26

Speaker D

புதுசா ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி யார் ஆரம்பிப்பாங்கன்னா இந்த 12 ராசியில் கடக ராசிக்காரங்க தான் ஆரம்பிப்பாங்க.

13:30

Speaker D

புதுசா ஒரு பிசினஸ் பண்ணுவீங்க அதுவும் எஸ்பெஷலி உங்களுடைய மனைவியின் பெயரில் ஆரம்பிப்பீங்க.

13:35

Speaker D

உங்க மனைவிக்கு சொத்து எழுதி கொடுக்கிறது இல்ல நீங்க கணவராக இருந்தால் உங்க மனைவிக்கு ஒரு இடத்தை வாங்கி கொடுக்கிறது.

13:43

Speaker D

இல்ல நீங்க கடக ராசி பெண்கள் நீங்க இருந்தீங்கன்னா உங்க கணவரை வந்து பார்ட்னர்ஷிப்பா சேர்த்துக்கிறதுன்ற மாதிரி இந்த தடவை மிகச்சரியான ராஜயோகம்.

13:50

Speaker D

ஏங்கது ஏன்னா அங்க உட்கார்ந்து குரு பார்க்கக்கூடிய இடமே ஏழாம் இடம் தான்.

13:53

Speaker D

ஏழாம் இடம் மல்டிமேட்டா இயங்கப்போகுது கடக ராசிக்காரர்களுக்கு.

13:58

Speaker D

ஆனா எல்லாம் சூப்பர் எல்லா பிளானட்டுமே ஃபென்டாஸ்டிக்கா இருக்கு எதுல கவனமா இருக்கணும்னா இந்த இரண்டாம் இடத்தில் இருக்கக்கூடிய கேது.

14:04

Speaker D

கெட்ட பையன்.

14:06

Speaker D

இருக்கிற ஒன்பது கிரகத்துல எட்டு கிரகத்து கர்மா இருக்கு கேதுக்கு மட்டும் தான் கர்மாவே இல்லை.

14:12

Speaker D

எல்லாத்தையும் ஆட்டி படைக்கக்கூடிய தன்மை கேதுக்கு உண்டு.

14:15

Speaker D

அப்ப இரண்டாம் இடத்துல கேது வரும்போது கடக ராசிக்காரர்களுக்கு சம்டைம்ஸ் எனக்கு தெரிஞ்சு ஒரு மார்ச் ஏப்ரலுக்கு மேல எல்லாம் ஒரு மாதிரி.

14:23

Speaker D

ஒரு மாதிரியான ஒரு விரக்திக்குள்ள போவீங்க.

14:27

Speaker D

எல்லாத்தையும் யாருக்காவது கொடுத்துட்டு நம்ம நிம்மதியா இருந்துரலாமா நம்ம பேசாம உட்கார்ந்து மானிட்டர் பண்ணுவோமா.

14:33

Speaker D

நம்ம நிறைய கைட் பண்ணுவோமா அப்படின்ற மாதிரி குரு உட்கார்ந்து ஒரு கைடன்ஸ் பண்ணக்கூடிய அமைப்பு எல்லாம் உங்களுக்கு இண்டிகேட் பண்ணுவார்.

14:37

Speaker D

இதுவரைக்கும் நீ என்ன பண்ண என்ன பண்ணன்னு சொல்லி உங்களை கேவலப்படுத்துறதுக்கு முன்னாடி நீங்க செஞ்சு காட்ட போறீங்க அதன் மூலமாக செயல் வெற்றி கிடைக்கப்போகுது.

14:44

Speaker D

ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு கடக ராசிக்காரர்களுக்கு.

14:47

Speaker D

கிட்டத்தட்ட ஒன்னு ரெண்டு மூணு அப்படிலாம் இல்ல இன்ஃபினிட்டிவ் போட்டுக்கோங்க.

14:53

Speaker D

எதெல்லாம் வேணும் வேணும்னு நினைச்சீங்களோ இந்த பிரபஞ்சம் இந்தா இந்தா இந்தான்னு உங்களுக்கு கொடுத்துட்டே இருக்கப்போகுது.

14:59

Speaker D

நீங்க சரியா முறையா பயன்படுத்திக்கிட்டால் ஒழிய அது உங்களுக்கு கிடைக்கும்.

15:03

Speaker D

தயவு செஞ்சு ஒன்னே ஒன்னு கவனத்துல வச்சுக்கோங்க.

15:07

Speaker D

மேனிபுலேட் பண்றதுக்கு ஆள் வருவாங்க.

15:10

Speaker D

ஒன்னு கொடுத்தா ரெண்டு கொடுக்கலாம் ரெண்டு கொடுத்தா பத்து கொடுக்கலாம்னு எட்டாம் இடத்து ராகு கண்டிப்பா உங்களை வந்து மேனிபுலேட் பண்ணுவாரு.

15:17

Speaker D

உழைக்காம சம்பாதிக்கணும்ன்ற எண்ணம் வந்தாலே முதல்ல பெரிய ரப்பர் வச்சு அழிச்சிடுங்க.

15:22

Speaker D

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதிரி எண்ணத்தை கற்பனையில நிறைய உண்டாக்கும்.

15:27

Speaker D

நிறைய பொருள் சேரப்போகுது.

15:30

Speaker D

திருமணம் நடக்கப்போகுது.

15:31

Speaker D

இந்த 2026 யாருக்கு நிறைய திருமணம் நடக்குறதுக்கான வாய்ப்பு இருக்குன்னா கடக ராசிக்காரர்களுக்கு ஆப்டர் ஜூனுக்கு மேல டிசம்பர் ஏழாம் தேதிக்குள்ள கண்டிப்பா ஏதாவது ஒரு பொண்ணு அமையும்.

15:38

Speaker D

வரப்போற பொண்ணும் ரொம்ப உங்க மனதிற்கு பிடித்த ஒரு பொண்ணாக அமையறதுக்கான வாய்ப்பு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.

15:43

Speaker D

சோ கடக ராசிக்காரர்களுக்கு ஃபென்டாஸ்டிக்கான டைம் பீரியட்.

15:46

Speaker D

எல்லாத்துலயும் காரிய வெற்றி.

15:49

Speaker D

நிதானமே பிரதானம்ன்றது மட்டும் கொஞ்சம் எப்பவுமே நீங்க நிதானமா இருப்பீங்க.

15:55

Speaker D

அட்வைஸ் பண்றேன்ற பேர்ல வந்து உங்களுடைய விஷயத்தை எல்லாருக்கும் சொல்லிட்டீங்கன்னா அவங்க ஜெயிச்சிடுவாங்க.

16:01

Speaker D

இந்த தடவை அதற்கான ஒரு கிளாரிட்டி குரு உங்களுக்கு கொடுப்பார்.

16:05

Speaker D

எப்பவுமே ஜென்ம குரு வனவாசம் எல்லாம் ஒன்னும் இல்ல.

16:08

Speaker D

இந்த தடவை ஜொலி ஜொலின்னு ஜொலிக்க போறீங்க.

16:11

Speaker D

சோ கடக ராசிக்காரங்க இந்த தடவை கொஞ்சம் அமுல் பேபி மாதிரி அழகா பூசுன மாதிரி ஆகப்போறீங்க.

16:15

Speaker D

நிறைய பேருக்கு ஆன்ம பலம் அதிகரிக்கப்போகுது நிறைய கோவில் இதுவரைக்கும் சாமியாவது பூதமாவதுன்னு சொல்லி.

16:21

Speaker D

சாமியை திட்டிட்டு இருந்த கடக ராசிக்காரங்க எழுதி வச்சுக்கோங்க நிறைய பேரு சாமி சாமி சாமின்னு சுத்த போறீங்க.

16:26

Speaker D

ஒன்பதாம் இடம் வலிக்கிறது கோவில் குளத்திற்கான சில அர்ப்பணிப்பு பண்ண போறீங்க.

16:30

Speaker D

நிறைய நீங்களே வந்து ஒரு நடந்து போறது மலைக்கு போறது ஐயப்பன் கோவிலுக்கு மாலை போறதுன்ற மாதிரி.

16:35

Speaker D

நிறைய கடக ராசிக்காரர்களுக்கு நல்லது எல்லாம் நடக்கப்போகுது.

16:39

Speaker D

பார்ட்னர்ஷிப் சூப்பரா இருக்கு.

16:41

Speaker D

காசு வரப்போகுது.

16:43

Speaker D

இதுவரைக்கும் காடு மட்டும் இருந்த பர்ஸ்ல இனிமே காசு தங்கும்.

16:48

Speaker D

சூப்பரா இருக்கு கடக ராசிக்காரர்களுக்கு.

16:50

Speaker D

சரியா நீங்க முறையா பயன்படுத்திக்க வேண்டிய காலகட்டம்.

16:54

Speaker D

முடிஞ்சா ஒரு பெரிய விஷயம் பண்ணி பாருங்க.

16:57

Speaker D

இது இப்ப இல்ல இனிமே வரக்கூடிய 30 வருஷத்துக்கு உங்களுக்கு சரியான டைம் பீரியட கொடுக்கும்.

17:01

Speaker D

தங்கத்தை தானம் பண்ணுங்க.

17:03

Speaker D

இப்ப விக்கிற விலைக்கு எனக்கு தங்கம் எல்லாம் தானம் பண்ண முடியாதுன்னு நீங்க உங்களால முடியற ஆட்களா இருந்தா கடக ராசிக்காரங்க.

17:08

Speaker D

யாராவது ஒரு கல்யாணம் ஆகக்கூடிய பொண்ணுக்கோ இல்ல ஏதோ ஒருக்கோ தங்கத்தை தியானம் பண்ணுங்க.

17:14

Speaker D

குரு மாதிரி இருக்கிறவங்களுக்கு இல்ல கோவில்ல போய் தங்கம் தானம் பண்ணுங்க.

17:17

Speaker D

தங்கம் எல்லாம் என்னால தானம் பண்ண முடியாதுன்னு சொன்னீங்கன்னா கனகதாரா ஸ்தோத்திரம் தினம் காலையில மத்தியானம் சாயந்திரம்.

17:22

Speaker D

மூணு வேளையும் கனகதாரா ஸ்தோத்திரம் கேட்டுக்கிட்டே இருங்க.

17:25

Speaker D

நிறைய நெய்யால் ஆன விஷயத்தை வந்து தானம் கொடுங்க.

17:27

Speaker D

இதெல்லாம் கொடுக்க கொடுக்க கடக ராசிக்காரர்களுக்கு கவலை எல்லாம் மாறிப்போகப்போகுது.

17:31

Speaker D

ரொம்ப ரொம்ப நாளுக்கு ஹெல்த் வைஸ் சூப்பரா இருப்பீங்க.

17:34

Speaker D

இந்த அப்டாமலுக்கு கீழ கொஞ்சம் வளர்ச்சி அதிகமா இருக்கும்.

17:38

Speaker D

நிறைய பேருக்கு தொப்பை போறதுக்கான வாய்ப்பு எல்லாம் இருக்கு.

17:40

Speaker D

அதனால கொஞ்சம் உடல் எடை அதிகரிக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு.

17:43

Speaker D

இன்டைஜஷன் ப்ராப்ளம் வரலாம்.

17:46

Speaker D

சம்டைம்ஸ் இந்த ஜீரண மண்டலம் சொல்லக்கூடிய இந்த பைப்ல வந்து பிரச்சனை வரும்.

17:50

Speaker D

அது மட்டும் கொஞ்சம் பார்த்துக்கிட்டீங்கன்னா போதும்.

17:52

Speaker D

மத்தபடி சூப்பரா இருக்கு கடக ராசிக்காரர்களுக்கு இந்த தடவை.

17:55

Speaker F

சரி நீங்க சொல்லுங்க கடக ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கு?

17:59

Speaker E

2026 கடக ராசி நண்பர்களுக்கு பொதுவாகவே விபரீத ராஜயோகம் அப்படின்னு ஒரு சமாச்சாரம் இருக்கு.

18:06

Speaker E

விபரீத ராஜயோகம்னா என்ன அர்த்தம்னா பயங்கரமா கொட்டோ கொட்டு கொட்டும் அப்படிங்கக்கூடிய அர்த்தமும் இருக்கு.

18:11

Speaker E

ரெண்டாவது இருக்கிற பெரிய பிரச்சனையே என்னோட லோன் தான் சார்.

18:15

Speaker E

என்னோட ஓடி அக்கவுண்ட் வந்து என்பி ஆயிடுச்சு இதுக்கு அப்புறம் வந்து என்னால தொழில் பண்ண முடியாது.

18:22

Speaker E

ரொம்ப கஷ்டமா லாக்கான நிலைமை என் நண்பனை நம்பி ஏமாந்து இருக்கக்கூடிய தருவாயில கூட.

18:27

Speaker E

உங்களுடைய நிலத்தை வித்து இல்ல வீட்டை வித்து உங்க வீட்ல பெரியவங்கன்னு சொல்லக்கூடிய அண்ணன் அல்லது அக்கா.

18:34

Speaker E

இவர்கள் மூலமா கண்டிப்பா ஒரு பெரிய ஒரு பணம் உதவி அப்படிங்கறது தேடி வரும்.

18:40

Speaker E

அப்படி இல்லைன்னா ஒரு வேற்று மொழி மனிதர் மூலமா திடீரென்று ஒரு பணம் வருவாய் வரக்கூடிய வாய்ப்புகள்.

18:45

Speaker E

அதனால உங்களுடைய பெரிய ஒரு லோன் க்ளோஸ் ஆகும்.

18:49

Speaker E

அந்த ஓடி அக்கவுண்ட்க்கான பிரச்சனைகள் முடிஞ்சு மறுபடியும் பேக் டு தி நார்மல் லைஃப்ங்கிற மாதிரி ரெடி ஆகக்கூடிய வாய்ப்புகள்.

18:54

Speaker E

கடகத்துக்கு பொதுவா 2026 அமேசிங்கா இருக்கு.

18:57

Speaker E

ஏன் அப்படின்னு கேட்டா ராசி லக்னத்துக்கு குரு வரக்கூடிய ஒரு ஸ்தானம்.

19:00

Speaker E

அதுல திரிகோணத்துல சனி இருக்கறதுனால கண்டிப்பாக வெளியூர் போறது வெளிநாடு போறது.

19:04

Speaker E

பூர்வீக சொத்துக்கள் வருவது.

19:07

Speaker E

பூர்வீகத்திலிருந்து ஏதாவது ஒரு பணம் வந்தா நம்ம தேறுவோம் அப்படிங்கிற நிலைமைகளில் அது கண்டிப்பா நடக்கக்கூடிய வாய்ப்புகள்.

19:13

Speaker E

மிக முக்கியமான பாயிண்ட் இருக்கறதுலயே கடகத்துக்கு அண்ணா சொன்ன பாயிண்ட் 200% கரெக்ட்.

19:19

Speaker E

வீட்ல பெரியவங்களோட ஹெல்த் மெயினா மார்ச் ஏப்ரல்ல கவனமா இருக்கணும்.

19:23

Speaker E

அந்த டைம் பீரியட்ல மெயினா ஆக்சிடென்ட்ஸ் வரதுக்கு வாய்ப்புகள்.

19:26

Speaker E

மெயினா கழிவரை போகும்போது கவனமா இருக்கணும்.

19:29

Speaker E

இந்த மாதிரி விஷயங்கள்.

19:31

Speaker E

இரவு நேரத்துல பயணிக்கும்போது கொஞ்சம் கவனமா இருக்கணும்.

19:34

Speaker E

இந்த மூணு மட்டும் வந்து நீங்க பார்த்துக்கணும்.

19:37

Speaker E

ரெண்டாவது.

19:39

Speaker E

குடும்பத்தில் இருக்கக்கூடிய உங்களுடைய பையனை கொஞ்சம் டிஸ்டர்பன்ஸ் பண்ற மாதிரி இல்ல பையனை பிரியற மாதிரி ஏதாவது ஒரு நிலைமை வரக்கூடிய வாய்ப்புகள்.

19:45

Speaker E

அப்படி இல்லைங்கிற பட்சத்துல நிறைய பேருக்கு இந்த ரூட் கெனால் அப்படின்னு சொல்லுவோம்.

19:50

Speaker E

இந்த பல்லு ரெண்டும் புடுங்கி எறிஞ்சிட்டு புதுசா போடுறது இல்லைன்னா ஃபில்லிங் பண்றது.

19:55

Speaker E

இந்த மாதிரி விஷயங்கள் கண்டிப்பா பண்ணக்கூடிய வாய்ப்புகள்.

19:58

Speaker E

ஒரு சில பேருக்கு என்ன பண்ணும்னா ரைட் விஷன் வந்து டிஸ்டர்பன்ஸ் கொடுக்கும்.

20:02

Speaker E

இதெல்லாம் ஒரு விதத்துல ஆங்கிள்.

20:04

Speaker E

ரெண்டாவது பார்த்தீங்கன்னா மிக முக்கியமானது.

20:07

Speaker E

உங்க லைஃப்ல இதுவரைக்கும் பார்க்காத நல்ல விஷயங்கள் நிறைய பார்ப்பீங்க.

20:11

Speaker E

அப்படி என்னன்னு கேட்டா.

20:13

Speaker E

கல்யாணத்துக்குரிய பிராப்தம் உங்களுக்கு நடந்தாலும் சந்தோஷம்.

20:17

Speaker E

இல்ல உங்க பேரக் குழந்தைகளுக்கு நடந்தாலும் சந்தோஷம்.

20:20

Speaker E

உங்களுடைய பசங்களுக்கு குழந்தை பிறந்தாலும் சந்தோஷம்.

20:24

Speaker E

இந்த மாதிரி நிறைய விஷயங்கள் உங்களுக்கு நடக்கும்.

20:26

Speaker E

குரு எப்போ உங்க ராசி லக்னத்துக்கு வருகிறதோ அந்த டைம்ல கண்டிப்பா ஊரு மாறியே தீருவீங்க.

20:31

Speaker E

பூர்வீக இடத்துக்கு போயிடுவீங்க.

20:33

Speaker E

இப்ப இருக்கக்கூடிய இடத்திலிருந்து பூர்வீக இடத்துக்கு போகக்கூடிய வாய்ப்புகள்.

20:36

Speaker E

அங்க போய் தொழில் ஆரம்பிக்கக்கூடிய பிராப்தங்கள்.

20:39

Speaker E

நிறைய பேர் அலைந்து திரிந்து செய்யக்கூடிய வேலைகள் அப்படின்னு இருக்கும்.

20:42

Speaker E

நிறைய பேர் டிரான்ஸ்போர்ட் இண்டஸ்ட்ரில இருப்பீங்க.

20:44

Speaker E

சில பேருக்கு வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறது.

20:46

Speaker E

சில பேர் பார்த்தீங்கன்னா இந்த ஸ்விக்கி மாதிரி விஷயங்கள் எல்லாம் பண்றது.

20:51

Speaker E

இதெல்லாம் வந்து பண்ணக்கூடிய நபர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.

20:54

Speaker E

இனிமேல் நான் பண்ணக்கூடியது எனக்காக பண்றேன்.

20:57

Speaker E

இந்த மாதிரி நான் ஓனா பண்றேன் அப்படிங்கக்கூடிய தொழில் கண்டிப்பா நீங்க ஆரம்பிக்கக்கூடிய பிராப்தம்.

21:01

Speaker E

நிறைய பேருக்கு இருக்கிற வேலை கண்டிப்பா மாறும்.

21:04

Speaker E

இருக்கிற வேலையை விடுற மாதிரி சிச்சுவேஷன்.

21:07

Speaker E

அப்படின்னா என்ன அர்த்தம் கண்டிப்பா நம்ம தொழில் ஆரம்பிக்கக்கூடிய பிராப்தம் அப்படிங்கறது வந்துருது.

21:10

Speaker E

மெயினா பெண்கள்.

21:12

Speaker E

பெண்களுக்கு தான் கடகத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கு தான் அற்புதமான பலன்கள் வெயிட்டிங் அப்படின்னு சொல்லலாம்.

21:18

Speaker E

சந்திரன் வந்து இவ்வளவு பலமா உட்கார்ந்து இருக்கக்கூடிய ஸ்தானத்துல.

21:21

Speaker E

உங்க லைஃப்ல இதுவரைக்கும் நீங்க கண்டிடாத ஒரு மாற்றம் உங்களுக்கு ஏற்படப்போறது.

21:26

Speaker E

அதுலயுமே வியாபாரத்துல நுணுக்கங்களை கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள்.

21:30

Speaker E

எப்படிப்பட்ட விஷயங்கள் அப்படின்னு சொன்னா.

21:32

Speaker E

மெயினா நிறைய பேர் வந்து இந்த கிளவுட் கிச்சன் மாதிரி விஷயங்கள் ஆரம்பிக்கிறது.

21:37

Speaker E

இல்லைன்னா ஒரு ஜவுளி கடை ஆரம்பிக்கிறது.

21:40

Speaker E

துணிமணி கடை ஆரம்பிக்கிறது டிஸ்ட்ரிபியூஷன் சென்டர் நெட்வொர்க் மாதிரி விஷயங்கள் ஃபார்ம் பண்றதுங்கிற மாதிரி.

21:46

Speaker E

ஓவராலா வந்து ஒரு கமர்ஷியலாவும் நல்லா இருக்கப்போறது அதே மாதிரி ஃபேமிலி லைஃப்மே கிட்டத்தட்ட நல்லா இருக்கக்கூடிய வாய்ப்புகள்.

21:51

Speaker E

கடகத்துல பிறந்த பல பேருக்கு ஆண் குழந்தை பிறக்கும்ங்கறதுல டவுட்டே கிடையாது.

21:55

Speaker E

சாக்ஷாத் உங்க தாத்தாவே வந்து பிறப்பார்.

21:58

Speaker E

அவங்க பேர் வைக்கிறது பெரிய சுபிக்ஷத்தை தரும்.

22:00

Speaker E

லைஃப்ல நிறைய மாற்றங்கள் உண்டு.

22:03

Speaker E

உங்க ஹெல்த்தும் சரி வீட்ல பெரியவங்க ஹெல்த் மட்டும் நீங்க பார்த்துண்டா போதும்.

22:07

Speaker E

இதுல மெயின் பரிகாரமா நான் சொல்லக்கூடியது குரு புஷ்ய ஸ்தானத்துக்கு வரும் பொழுது.

22:11

Speaker E

நதிகளில் குளிப்பது பெரிய ஏற்றத்தை கொடுக்கும்.

22:14

Speaker E

நதி நீர் ஆடுவது.

22:16

Speaker E

இது பேர் என்னன்னா புஷ்கரம் அப்படின்னு சொல்லுவோம்.

22:19

Speaker E

இப்ப பார்த்தீங்கன்னா இப்ப கோதாவரி புஷ்கரம்ங்கறது இந்த ஆண்டு வருது.

22:21

Speaker E

அதே மாதிரி காவிரி நதி மறுபடியும் புனருத்தாரணம் பண்ற மாதிரி.

22:25

Speaker E

இப்ப எப்படி ஒரு கோவிலுக்கு நம்ம கும்பாபிஷேகம் பண்றோமோ நதிகள் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளக்கூடிய.

22:31

Speaker E

நம்முடைய கர்மாக்களை கழிக்கக்கூடிய ஒரு ஸ்தானம்.

22:33

Speaker E

அதனால நதி நீர் ஆடுவது பெரிய மாற்றத்தை கொடுக்கும்.

22:36

Speaker E

அதனால காவிரி ஸ்நானம் பண்றது.

22:39

Speaker E

பெரிய ஒரு மாற்றத்தை கண்டிப்பா.

22:41

Speaker E

இதுதான் பரிகாரம்.

22:42

Speaker E

வேற எதுவுமே கிடையாது.

22:43

Speaker E

நீங்க போய் குளிச்சிட்டு வந்தீங்கன்னா போதும் உங்களுக்கு மாற்றங்கள் கண்டிப்பா வரும்.

22:47

Speaker E

எப்ப குளிக்கணும்?

22:49

Speaker E

அப்படின்னு பார்த்தீங்கன்னா வரக்கூடிய ஜூன் மாசத்துக்கு அப்புறம் இதை பண்ணும்போது உங்களுக்கு 100% வெற்றியை கொடுக்கும்.

22:53

Speaker E

நல்லாவே இருப்பீங்க.

22:54

Speaker E

சந்தோஷமும் சரி பொருளாதார ஏற்றமும் சரி 90% நல்லா இருக்கு.

22:59

Speaker E

ஃபென்டாஸ்டிக்கா இருக்கணும்னு சொல்லி நான் பிரார்த்தனை பண்றேன்.

23:02

Speaker F

கடக ராசிக்காரர்களுக்கு 2026ல என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகுது என்னெல்லாம் பண்ணா இன்னும் கொஞ்சம் வாழ்க்கை சிறப்பா இருக்கும் அப்படிங்கறத ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க.

Topics: கடகம் ராசிபலன் 2026 புத்தாண்டு பலன் ஆரோக்யம் நிதி முன்னேற்றம் குடும்ப உறவு பரிகாரம் கிரக பலன் Retro ஆன்மீகம் தமிழ் ஜோதிடம்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11469)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11469)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/kadagam-himalaya-victory-2026-rasi-palan/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
