**தனுசு 👉 அசுர வளர்ச்சி அடைய போகிறீர்கள் | Dhanusu | New Year Rasi Palan 2026 | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/dhanusu-asura-growth-2026-rasi-palan/

தனுசு ராசிக்காரர்களுக்கான 2026 புத்தாண்டு ராசிபலன்: தொழில், குடும்பம், ஆரோக்கியம் மற்றும் நிதி முன்னேற்றம்.

## Key Takeaways

- 2026ல் தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி முன்னேற்றம் உறுதி.
- குடும்ப உறவுகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம்.
- பயணங்களில் கவனம் அவசியம், சில காலங்களில் சிக்கல்கள் இருக்கலாம்.
- நீண்டகால முயற்சிகள் வெற்றியடையும், தைரியம் முக்கியம்.
- பித்ருக்களுக்கு தர்ப்பணம் மற்றும் ஆன்மீக செயல்கள் பலன் தரும்.

## What the video covers

- 2026 மார்ச் மாதம் முதல் தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் இடமாற்றத்தில் நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
- கடன்கள் தீர்ந்து சொந்த வீடு, பெரிய கார் வாங்கும் சுப பலன்கள் உண்டு.
- உடல் ஆரோக்கியம், மனநிம்மதி மற்றும் பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகள் தீரும்.
- பயணங்களில் கவனம் தேவை, குறிப்பாக சனியும் சூரியனும் சேரும் காலங்களில்.
- குடும்ப உறவுகள் மற்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும்.
- 2026ல் தனுசு ராசிக்காரர்கள் பல திறமைகள் கொண்டவர்களாக மாறி, பல வேலை வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி காண்பார்கள்.
- மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நிதி நிலை மேம்படும், பணப்புழக்கம் அதிகரிக்கும்.
- குடும்பத்தில் அண்டர்ஸ்டாண்டிங் மற்றும் ஒத்துழைப்பு முக்கியம், பிரச்சனைகள் சரியாகும்.
- அக்டோபர் மாதம் முதல் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் மற்றும் பரிசீலனைகள் நடக்கும்.
- 2026ல் தனுசு ராசிக்காரர்கள் தைரியமாக செயல்பட்டு, நீண்டகால முயற்சிகளுக்கு வெற்றி பெறுவார்கள்.

Answers

## Questions about this video

தனுசு ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் என்னென்ன மாற்றங்கள் எதிர்பார்க்கலாம்?

தனுசு ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் இடமாற்றம், தொழில் மாற்றம், வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களுக்குச் செல்லும் யோகங்கள் அமையும். கடன்கள் தீரும், சொந்த வீடு வாங்குதல், பெரிய கார் வாங்குதல் போன்ற சுப பலன்கள் உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்கள் சுய தொழில் தொடங்கினால் வெற்றி பெறுவார்களா?

ஆம், தனுசு ராசிக்காரர்கள் சுய தொழில் தொடங்கினால் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்று இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு முதலீட்டையும் செய்வதற்கு முன் நன்கு ஆராய்ந்து கவனமாக செயல்பட வேண்டும்.

தனுசு ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் எதில் கவனமாக இருக்க வேண்டும்?

தனுசு ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் பயணத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். மேலும், யாரையும் நம்பி ஏமாறாமல், சுய பகுப்பாய்வு செய்து, எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:06

Speaker A

இடமாற்றம், தொழில் மாற்றம், செய்யிற தொழில்ல வெளிநாடோ, வெளி மாநிலமோ, வெளிநாட்டுக்கு போகக்கூடிய யோகங்கள் அமையும்.

00:13

Speaker A

கடன்கள் தீரும்.

00:14

Speaker B

மார்ச் 2026-ல இருந்து சில விஷயங்கள் உங்களுக்கு மாற ஆரம்பிக்கும், என்னென்ன எஃபர்ட் போட்டீங்களோ அது குரோத் நோக்கி போகக்கூடிய ஒரு அமைப்பு.

00:21

Speaker C

உங்களை நீங்க செல்ப் அனலைஸ் பண்ணிக்கோங்க, யாரையும் நம்பி ஏமாறாதீங்க, கவனமா ஒன்னுக்கு ரெண்டு தடவை சார்ட் போட்டு, மேப் எல்லாம் போட்டு பிசினஸ் பண்ணா கரெக்டா வருமான்னு தெரிஞ்சுகிட்டு தயவு செஞ்சு இறங்குங்க, கொஞ்சம் கவனமாக இருக்கணும், மேக்கு அப்புறம் அதுக்கு முன்னாடி எல்லாம் சூப்பரா இருக்கு.

00:34

Speaker D

அசுர வளர்ச்சியை கண்டிப்பாக தனுசு ராசி நண்பர்கள் பார்ப்பீர்கள், சுய தொழில் ஆரம்பிச்சா ஜெயிக்குமா அப்படின்னா நிச்சயமாக ஜெயிக்கும்.

00:40

Speaker E

ரெட்ரோ ஆன்மீகம் வழங்கும் புத்தாண்டு பலன்கள் 2026, வாழ்க்கையில ரொம்ப கஷ்டமா இருக்கு, வருஷம் போகுது, மாசம் போகுது, நாளும் போகுது ஆனா கஷ்டம் மட்டும் போகவே இல்லை அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து பல ராசிக்காரர்கள் பேசிக்கிட்டே இருக்காங்க.

00:55

Speaker E

நீங்களும் இதெல்லாம் பண்ணுங்க, இதெல்லாம் சொன்னீங்கன்னா உங்களுடைய வாழ்க்கை சரியாயிடும் அப்படின்னு 2025-ல நிறைய சொல்லி இருந்தீங்க, அதை கேட்டு நிறைய பேரோட வாழ்க்கையில நிறைய மாற்றங்களும் இருந்துச்சு, அதேபோல இந்த 2026-லயும் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கப்போகுது?

01:53

Speaker E

தனுசு ராசி நேயர்கள் சார், அவங்களுக்கு 2026 எப்படி இருக்கப்போகுது?

01:56

Speaker A

தனுசு ராசி நேயர்களுக்கு விக்ரமாதித்தன் ஆண்டு மாதிரி ஆறு மாதம் இப்படி, ஆறு மாதம் அப்படி அப்படின்னு நம்ம கணக்கு பண்ணா கூட குடும்பம், வாக்கு, தனம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடத்த மகர ராசியை ஏழாம் பார்வையா உச்சம் பெற்ற குரு பார்க்க போறார், ஆகவே நான்காம் இடத்தில இருக்கக்கூடிய சனியும், குடும்பம், வாக்கு, தனஸ்தானத்தில இரண்டாம் இடத்தில வரக்கூடிய ராகுவும் இவங்களுக்கு சில பிரச்சனைகளை கொடுத்தாலும் உடல் ஆரோக்கியம், மன நிம்மதி, சந்தோஷம், பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் தீரும், உடன் பிறப்புகளால் தொல்லை தீரும், இது எல்லாத்தை விட நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு பிரச்சனைக்கு முடிவு வரும், உடல் ஆரோக்கியம் வரும்.

02:35

Speaker A

இடமாற்றம்.

02:36

Speaker A

தொழில் மாற்றம், செய்யிற தொழில்ல வெளிநாடோ, வெளி மாநிலமோ, வெளிநாட்டுக்கு போகக்கூடிய யோகங்கள் அமையும்.

02:43

Speaker A

எல்லாத்தை விட இன்வெஸ்ட்மென்ட் நீங்க தாராளமா பண்ணலாம்.

02:46

Speaker A

கடன்கள் தீரும்.

02:47

Speaker A

சொந்த வீடு வாங்கலாம்.

02:48

Speaker A

சின்ன வீடு இருந்ததுன்னா அது பெரிய வீடாக வாங்கலாம்.

02:53

Speaker A

ஒரு கார் வாங்கினீங்கன்னா பெரிய கார் வாங்கலாம்.

02:56

Speaker A

இப்படி சுப பலனா சொல்லிக்கிட்டே போலாம்.

03:00

Speaker A

ஆனால்.

03:02

Speaker A

பயணத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

03:05

Speaker A

நாலாவது இடத்தில் சனியும், நாலாவது இடத்தில் இவருக்கு சூரியனும் சேரும்போது.

03:12

Speaker A

பயணத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

03:16

Speaker A

அந்த ஏசி போட்டு தூங்குறேன்.

03:20

Speaker A

அந்த தூங்கும்போது அது எப்படி இருக்கு?

03:22

Speaker A

இந்த குறட்டை விடுறவங்க எல்லாம் மிக கவனமாக இருக்கணும்.

03:26

Speaker A

அதே காலகட்டத்தில தகப்பனாருடைய உறவும் சரியாக இருக்கணும்.

03:32

Speaker A

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யணும் அப்படிங்கறதுக்காக சேத்ராடனம் போகக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

03:39

Speaker A

தர்ம காரியங்கள்ல நிறைய செய்யற மாதிரி வரும்.

03:42

Speaker A

காசி, கயா, ராமேஸ்வரம் அப்படிங்கிற புண்ணிய சேத்திரங்களுக்கும் ஜீவ நதியில நீராடக்கூடிய பாக்கியமும் கிடைக்கும்.

03:49

Speaker A

மொத்தத்தில தனுசு ராசிக்காரர்களுக்கு.

03:51

Speaker A

அற்புதமான ஆண்டு.

03:52

Speaker A

எந்த காலத்தில தான் நீங்க பயந்தீங்க?

03:55

Speaker A

எந்த கிரகங்கள் எப்படி இருந்தாலும் தனுசு ராசிக்காரர்கள் ரஜினிகாந்த் மாதிரி தெளிவான முடிவும்.

04:02

Speaker A

ஒரு வாட்டி சொன்னா 100 வாட்டி சொன்னா மாதிரி அப்படின்னு சிந்திக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

04:07

Speaker A

அற்புதமான வாழ்க்கை வரும்.

04:09

Speaker A

அதிதமான நற்பலன் கிடைக்கணும்னா திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோவிலுக்கு போயிட்டு.

04:15

Speaker A

பச்சரிசில மாவிளக்கு தீபம் போட்டு வந்தீங்கன்னா குலதெய்வ வழிபாடு பண்ணீங்கன்னா.

04:20

Speaker A

இது ரெண்டும் செஞ்சீங்கன்னா அதிக சுப பலன் கிடைக்கும்.

04:25

Speaker A

வாழ்க வளமுடன்.

04:26

Speaker A

ஆல் தி பெஸ்ட்.

04:27

Speaker E

கண்டிப்பா சார் பாத்துக்கிட்டு இருக்க நேயர்கள் நீங்க சொன்ன மாதிரி திருப்பதிக்கும் அவங்களோட குலதெய்வத்தையும் சேர்த்து வணங்குவாங்க.

04:33

Speaker E

மேம் நீங்க சொல்லுங்க தனுசு ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கு?

04:37

Speaker B

தனுசு ராசிக்காரங்க வந்து மல்டி டாஸ்கிங் பண்ணக்கூடியவங்க, ஏன்னா டேலன்ட்ஸ் ரொம்ப அதிகம் தனுசு அப்படின்னு வரப்போ.

04:44

Speaker B

எதை பிக் பண்றது, எதை செய்யறது எல்லாமே நானே செய்யறேன் ஒன் மேன் ஆர்மி மாதிரி இயங்கக்கூடியவங்க அப்படின்னு சொல்லலாம்.

04:50

Speaker B

ஏன்னா இப்போ உங்களுக்கு நிறைய ஆப்ஷன்ஸ் அப்படிங்கற ஒரு விஷயம் இருக்கும்.

04:53

Speaker B

எதை நோக்கி ஃபோகஸ் அப்படிங்கறது கொஞ்சம் சிதறும்.

04:56

Speaker B

எல்லாத்துலயுமே ஒரு பாதி தூரம் போன மாதிரி, ஒரு பாதி கிணறு தாண்டின மாதிரி.

05:00

Speaker B

ஃபினான்சியல் வைஸ் கொஞ்சம் அப்கிரேடேஷனுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கவங்க தனுசு நிறைய பேர் இருப்பீங்க.

05:05

Speaker B

ப்ரொஃபஷனல் வைஸ் சில பேத்துக்கு பயம் இருக்கும், வெளிநாட்டுல எல்லாம் இருக்கவங்களுக்கு வந்து என்னுடைய ஜாப் ஸ்டேபிளா இருக்குமா?

05:10

Speaker B

இல்ல ஸ்டாக்னன்ட் ஆயிருமா அப்படிங்கற ஒரு பயம் எல்லாமே இருக்கும்.

05:13

Speaker B

இது எல்லாமே ஒரு மார்ச் 2026-ல இருந்து சில விஷயங்கள் உங்களுக்கு மாற ஆரம்பிக்கும்.

05:18

Speaker B

என்னென்ன எஃபர்ட் போட்டீங்களோ அது குரோத் நோக்கி போகக்கூடிய ஒரு அமைப்பு.

05:22

Speaker B

டிராவலிங் அப்படிங்கறது அதிகமா இருக்கும்.

05:23

Speaker B

அப்ராட் டிராவல் பண்ணனும்.

05:25

Speaker B

ஏகப்பட்ட டிராவல்.

05:26

Speaker B

ஃபினான்சியல் வைஸ் அப்படிங்கறது கொஞ்சம் அப்கிரேடேஷன் அப்படிங்கறது ஜூன் மாசத்துக்கு அப்புறம் கையில பணம் அப்படிங்கற விஷயம் புழங்க ஆரம்பிக்கும்.

05:31

Speaker B

எல்லாமே கரெக்டாதான் இருக்கும்.

05:33

Speaker B

ஆனா எங்கேயோ ஒரு இடத்துல இது குரு இல்லையா?

05:36

Speaker B

குரு எல்லாத்துக்கும் உபதேசம் பண்ணும்.

05:40

Speaker B

ஆனா தனக்குன்னு வரப்போ சில விஷயங்களை கோட்ட விட்டுறீங்க.

05:43

Speaker B

அப்படிங்கறப்போ இந்த குரு தன் குடும்பத்தையும் கொஞ்சம் பார்க்கணும்.

05:46

Speaker B

அப்படிங்கறதுதான்.

05:47

Speaker B

ஃபேமிலில ஹாப்பினஸ் இருக்கு அப்படினாலும் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கா?

05:51

Speaker B

அப்படிங்கறத வந்து தனுசு கொஞ்சம் கவனிக்கணும்.

05:55

Speaker B

அது ஆண் ஆகட்டும், பெண் ஆகட்டும் அந்த அண்டர்ஸ்டாண்டிங்க குடும்பத்துக்குள்ள கொண்டு வந்துரணும்.

05:58

Speaker B

ஏன் அப்படின்னா தனுசுல இருக்கவங்களுக்கு பெரும்பாலும்.

06:02

Speaker B

உங்களோட துணையால பிரிவுகளை சந்திக்கக்கூடிய சிச்சுவேஷன்ஸ் வந்து சரியாகக்கூடிய ஒரு அமைப்பு.

06:08

Speaker B

உங்கனால சரி செஞ்சுக்க முடியும்.

06:09

Speaker B

ஏன்னா டைம் கொஞ்சம் நல்லா இருக்கு.

06:11

Speaker B

இவ்வளவு நாள் கொஞ்சம் இஸ்யூஸ் எல்லாம் போயிட்டு இருந்தது.

06:14

Speaker B

இழுபறியாக இருந்திருந்திருக்கலாம்.

06:15

Speaker B

ஆனா ஒரு அக்டோபர் மாசம் அப்படின்னு வச்சுக்கலாம், அக்டோபர்ல இருந்து அந்த விஷயங்கள் பரிசீலனைக்கு வரும்.

06:20

Speaker B

அப்ப என்ன பண்ணனும் அப்படின்னா.

06:23

Speaker B

வார்த்தைகளில் மிக கவனம்.

06:25

Speaker B

வார்த்தைகளை சிந்திரக்கூடாது.

06:26

Speaker B

ஏன் அப்படின்னா அக்டோபரோடயே சில விஷயங்கள் சரியாகும் அப்படிங்கறப்போ.

06:30

Speaker B

திரும்பி அந்த வார்த்தைகள் அங்க வந்து நின்றக்கூடாது.

06:32

Speaker B

ஏன்னா தனுசு வந்து லாஜிக்கா பேசுறேன்னு சொல்லிட்டு போயிடுவீங்க.

06:35

Speaker B

ஆனா அது எமோஷனலா அந்த பக்கம் எவ்வளவு ஹர்ட் ஆகுது அப்படிங்கறது உங்களுக்கு புரியாது.

06:40

Speaker B

லைஃப்ல குரோத் அப்படிங்கறது ரொம்ப ரொம்ப நல்லா வரப்போகுது ஏன்னா ஒரு லாங் டெர்ம் எஃபர்ட் அப்படிங்கறது தனுசு போட்டுருக்கீங்க.

06:45

Speaker B

அந்த எஃபர்ட் கண்டிப்பா வெற்றி கிடைக்கும் அப்படிங்கறதுதான் உண்மை.

06:48

Speaker E

கண்டிப்பா மேம் லாங் டைம் எஃபர்ட் போட்டுருக்கீங்க.

06:50

Speaker E

அதுக்கான வெற்றி கண்டிப்பா வந்து சேரும் அப்படின்னு சொல்லிருக்கீங்க.

06:53

Speaker E

வித்யா கார்த்திக் மேம் நீங்க சொல்லுங்க தனுசு ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கு?

06:57

Speaker C

தனுசு ராசிக்காரங்களுக்கு 2026 கொஞ்சம் தைரியம் தேவைப்படக்கூடிய வருடமா இருக்கு.

07:02

Speaker C

ஏன்னா முதல் ஒரு அஞ்சு மாசம் அப்படியே தான் வீட்ட தானே குரு பாத்துக்கிட்டு அப்படியே நாங்க எல்லாம் கொஞ்சம் அழகான ஆட்கள், நாங்க எல்லாம் அறிவான ஆட்கள்ன்ற மாதிரி தனுசு ராசிக்காரங்க அப்படியே டிராவல் பண்ணுவாங்க.

07:11

Speaker C

திரும்ப அப்படியே இறங்கி எட்டாம் இடத்துல குரு வரும்போது கொஞ்சம் கான்பிடன்ட் பவர்ல ஒரு மாதிரி ஜர்க் ஆகும்.

07:16

Speaker C

அப்படியே ஒரு மாதிரி பயமா இருக்கும்.

07:18

Speaker C

இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு திடீர் மே மாசத்துக்கு அப்புறம் வேலையில என்ன இருக்கும், அடுத்த வருமானத்துக்கு என்ன பண்ணுவோம்ன்ற மாதிரியான ஒருவேளை உங்களுக்கு தசாபுத்தி கொஞ்சம் சரியில்லாத பேருக்கு சில பேருக்கு வேலை இழப்பதற்கான வாய்ப்பும் இருக்கு.

07:25

Speaker C

இல்ல வேலையை எப்படி நான் பெருக்கிக் கொள்ளலாம்ன்ற மாதிரியே தாட் ப்ராசஸ் ஓடிக்கிட்டே இருக்கும்.

07:30

Speaker C

நைட் தூக்கம்லாம் கூட எப்படி பண்ணலாம், என்ன பண்ணி வாழ்க்கையை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போறது, எடுத்துட்டு போறதுன்றது மட்டுமே இந்த வருஷம் ஃபுல்லான உங்களோட தாட் ப்ராசஸ்ஸா இருக்கும்.

07:35

Speaker C

ஏன்னா இரண்டாம் இடத்திற்கு குரு பார்வை அதுவே ஒரு நல்ல யோகத்தை கொடுக்கும்.

07:39

Speaker C

நிறைய பேருக்கு யாரெல்லாம் வந்து டீச்சர்ஸ் வேலை பாக்குறீங்களோ, யாரெல்லாம் வக்கீலா இருக்கீங்களோ, யாரெல்லாம் வாயால் பிழைக்கக்கூடிய தொழில் செய்றீங்களோ, மார்க்கெட்டிங் ஃபீல்ட்ல இருக்கீங்களோ அத்தனை தனுசு ராசிக்காரங்களுக்கும் சூப்பரா இருக்கப்போகுது.

07:46

Speaker C

ஃபென்டாஸ்டிக்கான டைம் போயிடும்.

07:47

Speaker C

ஆனா மத்த ஆட்களுக்கு கொஞ்சம் கவனம் தேவை.

07:51

Speaker C

நிறைய பேருக்கு நீங்க சொல்லி ஒரு உத்தரவாதம் கொடுத்து அதை பண்ண முடியாத ஒரு சூழலை உண்டாக்கலாம்.

07:57

Speaker C

ஏன்னா நான்கு குடையவன் எட்டில இருக்கிறது ஒரு வகையில பிளஸ்ஸா நிறைய விஷயம் நிறைய வீடு வாங்குறது, இடம் வாங்குறது.

08:02

Speaker C

கட்டி முடிக்காத வீட்டை கட்டி முடிக்கிறது, இதுவரைக்கும் போட்டு வச்சிருக்கேன் தலை மட்டும்தான் போட்டேன் முடிக்கலைன்னு சொல்ற தனுசு ராசிக்காரங்க எல்லாம் கண்டிப்பா.

08:08

Speaker C

2026 மேக்கு அப்புறம் கண்டிப்பா வீட்டை கட்டி முடிச்சு ஒரு கிரக பிரவேசம் பண்ணுவாங்க.

08:12

Speaker C

இல்ல கட்டுன வீட்டை வாங்குறதுக்கான வாய்ப்பு இதுவரைக்கும் நான் கொடுத்துட்டேன்.

08:16

Speaker C

ரொம்ப நாளா இழுத்துட்டே இருக்கேன் நான் வீடு கட்டி முடிக்கலைன்னு சொல்றவங்களுக்கு எல்லாம் வீடு கட்டுறதுக்கான வாய்ப்பு எல்லாம்.

08:20

Speaker C

கண்டிப்பா இந்த தடவை நடக்குறதுக்கான வாய்ப்பு இருக்கு.

08:22

Speaker C

சொத்து சேர்க்கை, பொருள் சேர்க்கை, ஆபரண சேர்க்கை இதெல்லாம் ஓகே.

08:27

Speaker C

எதுல கவனமா இருக்கணும்னா உங்களுடைய தாட் ப்ராசஸ்ல ரொம்ப கவனமா இருக்கணும்.

08:31

Speaker C

நிறைய பேருக்கு வேலையை விட்டுட்டு நம்ம பிசினஸ் ஆரம்பிக்கலாம்ன்ற மாதிரி ஒரு விஷயம் தோணும் உள்ளுக்குள்ள.

08:37

Speaker C

வண்டி வாகனங்கள்ல தயவு செஞ்சு வித்தை காட்டாதீங்க.

08:40

Speaker C

நைட் டிராவலை தயவு அவாய்ட் பண்ணுங்க.

08:42

Speaker C

எட்டாம் இடத்துல வந்து குரு அமரும்போது அந்த இடத்தை பால் பண்ணுவார்ன்றது ஒரு பக்கம் இருக்கட்டும்.

08:47

Speaker C

ஆனா உச்ச குருவா அமர்ந்திருக்காரு அது ராசிநாதன் போய் எட்டில அமர்தல் அப்படின்றது.

08:51

Speaker C

கொஞ்சம் உங்களை நீங்க கவனிச்சுக்க வேண்டிய ஒரு விஷயம் தான்.

08:54

Speaker C

கழிவுகள் போறக்கூடிய இடம்.

08:56

Speaker C

கான்ஸ்டிபேஷன் ப்ராப்ளம் அடிக்கடி வரும்.

08:58

Speaker C

வயிறு பிரச்சனை கண்டிப்பா வரும்.

09:00

Speaker C

வயித்துக்குள்ள அந்த குடல் சம்பந்தப்பட்ட சில விஷயத்துல மாட்டுவாங்க.

09:04

Speaker C

அதே மாதிரி குழந்தைகளா இருந்தாங்கன்னா நிறைய அந்த கொஞ்சம் புழுக்கள் விஷயத்துல கொஞ்சம் வயித்துல வந்து பிரச்சனை உண்டாக்கும்.

09:08

Speaker C

அதனால வயிறு, சாப்பிடுற விஷயம், அமர்ந்து சாப்பிடக்கூடிய இடம் தான் நான்காம் இடம்.

09:12

Speaker C

அந்த இடத்துல போய் சனி உட்கார்ந்திருக்கும்போது உட்கார்ந்து சாப்பிடறதுக்கான டைமே இல்லாம ஓடிக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கும்.

09:16

Speaker C

சோ அதனால தனுசு ராசிக்காரங்க சாப்பிடுற இடத்துல ரொம்ப கவனமா இருக்கணும்.

09:20

Speaker C

எந்த இடம் ஹைஜீனிக்கா இல்லையா இருக்கான்னு பார்த்துட்டு சாப்பிடணும்.

09:23

Speaker C

அதே மாதிரி அம்மாவோட உடல் நிலையில கொஞ்சம் ஒரு முதல் ஒரு ஐந்து மாதங்கள் கவனமா இருக்கணும்.

09:28

Speaker C

தேவையில்லாம அம்மாக்கும் உங்களுக்கும் ஒரு சின்ன சின்ன வாக்குவாதம் வர்றதுக்கான வாய்ப்புகள் இருக்கு.

09:32

Speaker C

பின்னாடி பேக் பார்த்துக்கணும்.

09:34

Speaker C

மத்தபடி தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லாமே சூப்பரா இருக்கு.

09:37

Speaker C

உங்களை நீங்க செல்ப் அனலைஸ் பண்ணிக்கோங்க, யாரையும் நம்பி ஏமாறாதீங்க.

09:42

Speaker C

என்னால முடியும், உங்களால முடியும்னு சொல்லி சொல்லியே உங்களை ஒரு பார்ட்னர்ஷிப்ல கொண்டு வந்து ஒரு வேலையை பண்ண வைப்பாங்க.

09:48

Speaker C

ஏன்னா ஏழுக்கு ரெண்டு தான் எட்டு அந்த இடத்துல வந்து உட்காருறாரு.

09:52

Speaker C

அதுவும் இருக்கிறது காலபுருஷனுடைய நாலாம் வீடு.

09:55

Speaker C

அடுத்தவர்களுக்காக செய்ய வேண்டிய வைக்கும்.

09:57

Speaker C

அதனால கவனமா ஒன்னுக்கு ரெண்டு தடவை சார்ட் போட்டு, மேப் எல்லாம் போட்டு பிசினஸ் பண்ணா கரெக்டா வருமான்னு தெரிஞ்சுகிட்டு தயவு செஞ்சு இறங்குங்க.

10:04

Speaker C

இல்லாட்டி அவங்களை பத்தி அவங்ககிட்டயே போய் சொல்லி தேவையில்லாம மாட்டிக்குவீங்க.

10:08

Speaker C

கொஞ்சம் கவனமாக இருக்கணும் மேக்கு அப்புறம்.

10:11

Speaker C

அதுக்கு முன்னாடி எல்லாம் சூப்பரா இருக்கு.

10:12

Speaker C

கவலைப்பட வேணாம்.

10:13

Speaker E

சூப்பரா இருக்கு ஆனாலும் கவனமா இருங்க அப்படின்னு சொல்லி சொல்லிருக்கீங்க.

10:16

Speaker E

சார் நீங்க சொல்லுங்க தனுசு ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கு?

10:20

Speaker D

தனுசு ராசி நண்பர்களுக்கு முதல் பாதி அற்புதம்.

10:23

Speaker D

ஏன்னா முதல் விஷயமே ஏழாம் இடத்துல குரு அதோட திரிகோணத்துல ராகு.

10:28

Speaker D

ராகு குரு கன்ஜங்ஷன் மாதிரி வரப்போகுது.

10:30

Speaker D

அசுர வளர்ச்சியை கண்டிப்பாக தனுசு ராசி நண்பர்கள் பார்ப்பீர்கள்.

10:35

Speaker D

மூணாம் இடத்துல ராகு இருக்கிறதுங்கறது பொதுவாகவே சாயா கிரகங்கள் போய்.

10:40

Speaker D

அந்த ராகு கேதுக்கள்னு சொல்லக்கூடிய சாயா கிரகங்கள் போய் உபஜய ஸ்தானத்துல மாட்டும் போது.

10:46

Speaker D

உங்களுக்கு தான் வலிமை.

10:47

Speaker D

ஏன் வலிமைனா மத்தவனுடைய பலம் என்னன்னு தெரிஞ்சுப்பீங்க.

10:50

Speaker D

செங்கிஸ்கான் மாதிரி மத்தவனுடைய பலத்தை அழிக்கக்கூடிய பிராப்தம் அப்படிங்கறது தனுசுக்கு ரொம்ப நல்லா தெரியும்.

10:54

Speaker D

ரெண்டாவது ஜூன் மாசம் வரைக்கும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.

10:56

Speaker D

பார்த்துக்க வேண்டியது வைஃபோட ஹெல்த்.

10:59

Speaker D

கணவனா இருந்தால் மனைவியோட ஹெல்த்.

11:01

Speaker D

மனைவியா இருந்தால் கணவருடைய ஹெல்த்.

11:03

Speaker D

கழுத்து பகுதி.

11:04

Speaker D

அதே மாதிரி ஒரு சில பேருக்கு வயித்துல சின்ன கட்டி மாதிரி ஒன்னு உருவாகிறது.

11:08

Speaker D

இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் கண்டிப்பா நடக்கும்.

11:10

Speaker D

ஆனா அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா இப்ப அதிசாரமா குரு கடகத்துல வந்து ஒரு 15 நாள் என்ன காட்டுச்சோ அதுதான் வந்து ஒரிஜினலா அடுத்த வருஷம் நடக்கும்.

11:16

Speaker D

அப்ப அஷ்டமத்துல குரு கரெக்டா வந்து மாட்டும் போது திரிகோணத்துல சனி இருக்கும் போது.

11:20

Speaker D

கண்டிப்பாக நிறைய பஞ்சாயத்துக்கள் பைசல் செய்ய வேண்டியதா வரும்.

11:24

Speaker D

வாங்கி இருந்த லோன்.

11:26

Speaker D

வாங்கி இருந்த ப்ராப்ளம்ஸ்.

11:27

Speaker D

அதே மாதிரி குரு எப்ப அஷ்டமத்துக்கு போறானோ.

11:30

Speaker D

தேவையே இல்லாத ரிலேஷன்ஷிப்லாம் பெருசாகும்.

11:34

Speaker D

ஐயயோ நான் இவ்வளவு பெருசா நினைக்கவே இல்லையே.

11:37

Speaker D

ஆல்ரெடி ஒரு டிராக் ஓடிட்டு இருக்கு திடீர்னு இப்ப குழந்தைங்கிறாங்களே நான் என்ன பண்றது.

11:40

Speaker D

அப்படிங்கற மாதிரி ஒரு பயம் எல்லாம் கிரியேட் ஆகும்.

11:42

Speaker D

சோ பொதுவாகவே இந்த டைம்ல ரொம்ப கவனமா இருக்கக்கூடிய காலகட்டம் ஆப்டர் ஜூன்.

11:46

Speaker D

ஜூனுக்கு அப்புறம் தான் நீங்க ரொம்ப கவனமா இருக்கணும்.

11:48

Speaker D

ஜூன் முன்னாடி வரைக்கும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.

11:51

Speaker D

அதுக்கப்புறம் ராகு டிசம்பர்ல கன்ஜங் ஆகும்போது.

11:54

Speaker D

நிறைய பிரச்சனைகள் இன்னும் கூடும்.

11:56

Speaker D

சோ தனுசு ராசி நண்பர்களுக்கு இப்ப டைம்க்கு நீங்க பார்த்துக்க வேண்டியது சுய தொழில் ஆரம்பிக்கக்கூடிய பாக்கியம் கண்டிப்பாக உருவாகும்.

12:01

Speaker D

அப்ப சுய தொழில் ஆரம்பிச்சா ஜெயிக்குமா அப்படின்னா நிச்சயமாக ஜெயிக்கும்.

12:04

Speaker D

யார் கூட கூட்டணி அமைக்கிறோம்.

12:07

Speaker D

யார் உங்களுடைய பார்ட்னர் அப்படின்னு செக் பண்ணிட்டு பண்றது கண்டிப்பா நடக்கும்.

12:10

Speaker D

உங்க வைஃப்க்கு கண்டிப்பா வேலை கிடைக்கும்.

12:12

Speaker D

உங்க ஹஸ்பண்டுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடிய பிராப்தம் ஏற்படும்.

12:15

Speaker D

இடம் கண்டிப்பாக மாறும்.

12:16

Speaker D

குழந்தைகளுடைய ஆரோக்கியத்துல மட்டும் கொஞ்சம் நீங்க கவனமா இருந்தா போதும்.

12:20

Speaker D

தனுசு ராசி நண்பர்களுக்கு பெரிய பாக்கியம், பெரிய பிரச்சனை அப்படிங்கறது கிடையாது.

12:24

Speaker D

கோதண்ட ராமன் வழிபாடு.

12:26

Speaker D

அதை பண்ண பண்ண நல்ல மாற்றங்கள் கொடுக்கும், சந்தோஷமும் சரி, பொருளாதார ஏற்றமும் சரி.

12:30

Speaker D

ஆவரேஜா ஒரு 75% 2026 நல்லாவே இருக்கும்.

12:33

Speaker E

கண்டிப்பா சார்.

12:35

Speaker E

நீங்களும் நல்லதெல்லாம் நடக்கும் ஆனாலும் கொஞ்சம் கவனமா இருங்க அப்படின்னு சொல்லி சொல்லிருக்கீங்க.

Topics: தனுசு ராசி 2026 ராசிபலன் புத்தாண்டு பலன் தொழில் மாற்றம் நிதி முன்னேற்றம் ஆரோக்கியம் குடும்ப உறவு பயணம் கவனம் ஆன்மீகம் தீபம்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11463)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11463)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/dhanusu-asura-growth-2026-rasi-palan/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
