**இன்று பத்ரு தினம் மறக்காம 7 முறை சொல்லுங்க மனதில் நினைப்பதை ரப்பு நடத்தி தருவான்  — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/7-transcript/

Answers

## Questions about this video

பத்ரு தினத்தில் ஓத வேண்டிய சிறப்பு திக்ரு என்ன?

பத்ரு தினத்தில் ஓத வேண்டிய சிறப்பு திக்ரு 'அல்லாஹும்ம அன்ஜிஸ்னி மா வ அத்தனி. அல்லாஹும்ம ஆத்தி மா வ அத்தனி' என்பதாகும். இதன் பொருள் 'இறைவா எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக இறைவா எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக' என்பதாகும்.

இந்த திக்ரை ஓதுவதன் முக்கியத்துவம் என்ன?

ரசூலுல்லாஹ் பத்ரு போரின் போது இந்த திக்ரை ஓதியவுடன், அல்லாஹ்விடமிருந்து ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உதவி செய்வதாக வாக்குறுதி கிடைத்தது. இது வாழ்க்கையில் வெற்றியைத் தரக்கூடிய ஒரு மகத்தான திக்ராகும்.

இந்த திக்ரை பத்ரு தினத்தில் மட்டும்தான் ஓத வேண்டுமா?

இல்லை, இந்த திக்ரை பத்ரு தினத்தில் மட்டுமல்லாமல் எல்லா நாட்களிலும் ஓதலாம். எந்த ஒரு தேவையை மனதில் கொண்டு ஓதினாலும் அல்லாஹ் உதவி செய்வான் என்று இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

00:05

Speaker A

இன்றைக்கு ரமலான் பிறை 17 அதாவது பத்ருடைய தினம்.

00:11

Speaker A

இந்த தினத்துல நம்ம எல்லோருமே அவசியமாக ஓதிக்கொள்ள வேண்டிய ஒரு சிறந்த திக்ரை தான் நம்ம பார்க்க போறோம்.

00:20

Speaker A

இந்த திக்ரு நம்மல பலருக்கும் தெரியாது ஆனால் ரசூலுல்லாஹ் பத்ருடைய நாள்ல சூரியன் உதயமான உடனேயே இரண்டு கைகளையும் வானத்தின் பக்கம் ஏந்தி இந்த திக்ரை தான் அவங்க ஓதி இருக்காங்க.

00:36

Speaker A

அடுத்த நொடி அல்லாஹ்விடமிருந்து அவங்களுக்கு வகி வந்தது.

00:41

Speaker A

அதாவது என்ன துஆவை அல்லாஹ்விடத்தில கேட்டாங்களோ அந்த துஆவை நான் தர்றேன் அப்படின்னு அதைவிட சிறந்ததா நான் தருவேன் அப்படின்னு அல்லாஹ் ஒரு வகியை அனுப்பி இருக்கான் அந்த அளவு இது ஒரு சிறந்த திக்ரா இருக்கு.

00:56

Speaker A

இன்ஷா அல்லாஹ் இந்த திக்ரை இன்றைய தினம் இந்த பதிவை கேட்ட உடனேயே நீங்க எப்படியாவது ஒரு முறை ஓதிடுங்க.

01:07

Speaker A

அல்லாஹுத்தஆலா நபி அவங்களுக்கு கொடுத்த வெற்றியை போல நமது வாழ்விலும் வெற்றியை கொடுப்பான்.

01:15

Speaker A

இந்த ஒரு திக்ரு இந்த பத்ருடைய தினத்துல மட்டும் தான் ஓதணும் அப்படிங்கிற அவசியமே கிடையாது.

01:23

Speaker A

எல்லா நாட்களிலும் ஓதலாம்.

01:26

Speaker A

இன்னும் இந்த ஒரு திக்ரை ஓதி நானும் பலன் அடைஞ்சிருக்கேன்.

01:34

Speaker A

ஏன்னா ஒரு ஹாஜத்தை மனசுல நிய்யத் வச்சுக்கிட்டு ரப்பு கிட்ட எந்த வார்த்தையை கொண்டு கேட்டா நம்ம ரப்பு உதவி செய்வான் அப்படின்னு யோசிச்சு இந்த திக்ரை நான் ஓதி கேட்டு இருக்கேன்.

01:45

Speaker A

அல்ஹம்துலில்லாஹ் நிமிடத்துல எனக்கு பதில் கிடைச்சது.

01:50

Speaker A

அப்படிப்பட்ட மகத்தான ஒரு திக்ரை தான் நான் இன்றைக்கு சொல்ல போறேன்.

01:58

Speaker A

அதைப்பற்றி ஹதீஸையும் நம்ம பார்க்கலாம்.

02:01

Speaker A

இப்போ அந்த திக்ரு என்ன?

02:03

Speaker A

அதற்கு பிறகு நடந்த சம்பவம் என்ன அப்படிங்கறது தான் நம்ம பார்க்க போறோம்.

02:11

Speaker A

சிறு சம்பவம் தான்.

02:12

Speaker A

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரு போர் நாளில் எதிரிகளான இணை வைப்பாளர்கள் எண்ணிக்கை ஆயிரம் பேராக இருப்பதையும் முஸ்லிம்களான தம் தோழர்கள் முன்னூற்று பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள்.

02:29

Speaker A

அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையின் பக்கம் விரைந்தார்கள்.

02:35

Speaker A

இன்னும் கிப்லாவை முன்னோக்கி தம் கரங்களை நீட்டி தம் இறைவனை உரத்த குரலில் அழைத்து பிரார்த்தித்தார்கள்.

02:44

Speaker A

எந்த வார்த்தையை கொண்டு பிரார்த்தித்தாங்க அப்படின்னு பாருங்க.

02:48

Speaker A

அல்லாஹும்ம அன்ஜிஸ்னி மா வ அத்தனி.

02:53

Speaker A

அல்லாஹும்ம ஆத்தி மா வ அத்தனி.

02:58

Speaker A

இதனுடைய பொருள் என்ன அப்படின்னா இறைவா எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக இறைவா எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக என்று தம் கரங்களை நீட்டி கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தார்கள்.

03:13

Speaker A

அதற்கு பிறகு நடந்தது என்ன அப்படின்னா

03:15

Speaker A

அல்லாஹுத்தஆலாவே திருக்குர்ஆன்லேயே அழகா சொல்றான் கேளுங்க.

03:20

Speaker A

நீங்கள் உங்கள் ரட்சகனிடம் உங்களை ரட்சிக்க தேடிய போது அணி அணியாக உங்களோடு இணைந்து அடுத்தடுத்து வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் பேர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்.

03:39

Speaker A

அல்குர்ஆன் 08:09.

03:42

Speaker A

எப்படிப்பட்ட ஒரு விஷயம் நடந்திருக்கு பாருங்க.

03:46

Speaker A

ரசூலுல்லாஹ் இந்த வார்த்தையை கொண்டு அல்லாஹ்விடத்தில உதவி கேட்டுட்டாங்க.

03:53

Speaker A

அல்லாஹ் அடுத்த நிமிஷமே ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் அவங்க மூலமாக வகியை கொடுத்து அனுப்பிட்டான்.

04:00

Speaker A

எவ்வளவு ஒரு ஆறுதல் சொல்லி இருக்கான் பாருங்க.

04:03

Speaker A

நீங்க கேட்டுட்டீங்க துஆவை.

04:06

Speaker A

நான் உங்களுக்கு ஆயிரம் மலக்குகளை கொண்டு உங்களுக்கு நான் உதவி செய்வேன் அப்படின்னு சொல்லி.

04:13

Speaker A

இந்த பக்கம் சஹாபாக்கள் 313 பேர் தான்.

04:18

Speaker A

அந்த பக்கம் ஆயிரக்கணக்கான காஃபிர்கள் இருக்காங்க.

04:23

Speaker A

இதற்கு இடையில அல்லாஹுத்தஆலா ஆயிரக்கணக்கான வானவர்களை கொண்டு உதவி செஞ்சான் அந்த போர்ல நம்முடைய ரசூலுல்லாஹ்விற்கு வெற்றி கிடைச்சது.

04:34

Speaker A

எப்படிப்பட்ட ஒரு விஷயம் நடந்திருக்கு பாருங்க.

04:37

Speaker A

இந்த பத்ரு தினம் அப்படிங்கிறது சாதாரணமான நாளே கிடையாது.

04:40

Speaker A

இதைப்பற்றிய சிறப்பு என்ன என்ன நிகழ்ந்தது இன்னும் எந்த மாதிரியான அமல்கள் செய்யலாம் அப்படிங்கறதை நம்ம தொடர்ந்து நம்ம பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.

04:48

Speaker A

இன்றைய தினம் இந்த பதிவை கேட்ட உடனேயே இந்த தினத்தை நீங்க அடைந்து கொண்டாலே இந்த வார்த்தையை சொல்லி அல்லாஹ்விடத்தில நீங்க கையேந்தி உங்களுடைய தேவைகளை குறித்து கேளுங்க.

05:00

Speaker A

நிச்சயம் அந்த ரப்பு நீங்கள் நினைக்கக்கூடிய எல்லா காரியத்திலும் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்.

05:07

Speaker A

அதுல வெற்றியும் கொடுப்பான்.

05:09

Speaker A

ஏன்னா இது வெற்றியை நமக்கு வழங்கக்கூடிய வார்த்தையா இருக்கு.

05:14

Speaker A

எனவே இன்ஷா அல்லாஹ் இந்த சிறந்த திக்ரை நம்ம எல்லோருமே ஓதக்கூடியவங்களா இருக்கணும்.

05:23

Speaker A

இது நம்மல பலரும் அறியாத ஒரு திக்ரா இருக்கு.

05:28

Speaker A

ஆனா ரசூலுல்லாஹ் ஓதிய ஒரு அற்புதமான வார்த்தை.

05:32

Speaker A

எனவே இன்ஷா அல்லாஹ் இந்த சிறந்த திக்ரை ஓதி இதனுடைய சிறப்பையும் பலனையும் அடைந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக.

05:40

Speaker A

ஆமீன் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=8467)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=8467)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=8467)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/7-transcript/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
