**பஜ்ருக்கு பாங்கு சொன்ன உடனே தொழுகைக்கு முன் 100 முறை ரிஜ்க் வீடு தேடி வரும்  — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/100-transcript/

Answers

## Questions about this video

இந்த வீடியோவில் கூறப்படும் திக்ரை ஓதுவதன் மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

இந்த திக்ரை ஓதுவதன் மூலம் செல்வம் பெருகும், கடன் பிரச்சனைகள் தீரும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும், மற்றும் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் கிடைக்கும்.

இந்த திக்ரை எப்போது ஓத வேண்டும்?

ஃபஜ்ருடைய பாங்கிற்கும் இக்காமத்திற்கும் இடையில் இந்த திக்ரை 100 முறை ஓத வேண்டும். குறிப்பாக ரமலான் மாதத்தில் ஃபஜ்ருடைய பாங்கு சொன்னவுடன் ஓதலாம்.

இந்த திக்ரு என்ன?

இந்த திக்ரு 'சுபஹானல்லாஹி வபிஹம்திஹி சுபஹானல்லாஹில் அலீமி வபிஹம்திஹி அஸ்தஃபிருல்லாஹ்' என்பதாகும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் இன்றைக்கான பதிவுல செல்வத்தை பரக்கத்தாக பெற்றுத்தரக்கூடிய ஒரு அற்புதமான ஒரு திக்ரை தான் நம்ம பார்க்க போறோம்.

00:13

Speaker A

இன்றைக்கு நம்மள பலருடைய தேவை என்ன அப்படின்னா கண்டிப்பாக அது பண தேவையா தான் இருக்கும்.

00:25

Speaker A

இந்த கடனை ஒழிக்கிறதுக்கும் பணம் பரக்கத்தா இருக்கறதுக்கும் நம்மளோட தொழில்ல வியாபாரத்துல சம்பளத்துல பரக்கத் இருக்கறதுக்கும் நபியவங்க ரொம்ப இலகுவான ஒரு திக்ரை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்க.

00:40

Speaker A

அந்த திக்ரை ஓதணும் அப்படின்னு சொன்னா செல்வம் மட்டும் கிடையாது ஏராளமான பலன் உண்டு அதுல மிக முக்கியமானது சொல்லணும் அப்படின்னா குடும்பத்துக்குள்ள நிம்மதி ஏற்படும்.

00:59

Speaker A

அனைத்து விஷயத்திலுமே அல்லாஹுத்தஆலா ஒரு ஈடேற்றத்தை ஒரு முன்னேற்றத்தை கொடுக்கிறானாம் ஆனா நம்ம இந்த திக்ரினுடைய சிறப்புகளை எவ்வளவுதான் கேட்டு தெரிஞ்சுகிட்டாலும் இன்னும் எனக்கு கடன் பிரச்சனை குறையல எங்களோட வருமானம் பத்தல பரக்கத் இல்ல இன்னும் ஏதாவது அமல் இருந்தா சொல்லுங்க அப்படின்னு கேட்க கூடியவங்களா தான் நம்ம இருக்கோம்.

02:01

Speaker A

ரொம்ப ரொம்ப இலகுவானது இதை வெறும் மூணு தடவை நீங்க சொன்னீங்க அப்படின்னா மூணே தடவை கடலின் நுரை அளவு பாவங்கள் இருந்தாலும் மன்னிக்கப்படுது.

02:15

Speaker A

இன்னும் ஏராளமான சிறப்புகள் இருக்கு ஒருமுறை நபியவங்க கிட்ட ஒரு மிக மோசமான நிலையில ஒரு சஹாபி அவங்க வந்தாங்களாம் அவருடைய ஆடை எல்லாம் கிழிந்த நிலையில அவருடைய முகமெல்லாம் கருத்து போய் வறுமையின் கோரப்பிடியில மாட்டிட்டு இருக்கக்கூடிய அறிகுறி அவர்கிட்ட தெரியுது ரசூலுல்லாஹ் கிட்ட வந்து யா ரசூலுல்லாஹ் இந்த உலகமே என்னை புறக்கணிக்குது.

03:34

Speaker A

ஃபஜருடைய பாங்கிற்கும் இக்காமத்திற்கும் இடையில சுபஹானல்லாஹி வபிஹம்திஹி சுபஹானல்லாஹில் அலீமி வபிஹம்திஹி அஸ்தஃபிருல்லாஹ் அப்படின்னு 100 தடவை தஸ்பீஹ் செய்யுங்க.

03:49

Speaker A

அப்படின்னு சொல்லி சொல்லி அனுப்பிட்டாரு கொஞ்ச மாதங்களுக்கு பிறகு அவர் வராரு யா ரசூலுல்லாஹ் எனக்கு நீங்க ஒரு அழகான திக்ரை கற்று கொடுத்தீங்க இல்லையா இப்போ என்னோட செல்வத்தை எங்க வைக்கிறது அப்படின்னு எனக்கு தெரியல அந்த அளவு செல்வம் மிகுதியா இருக்கு.

04:18

Speaker A

என்னோட ஆடையை பாருங்க எவ்வளவு தூய்மையா இருக்குன்னு பாருங்க இந்த உலகத்துல இருக்கக்கூடிய எல்லாருமே என்னை மதிக்கிறாங்க மரியாதை செலுத்துறாங்க அன்பு காட்டுறாங்க அப்படின்னு சொல்லி அந்த சஹாபி அவங்க ரொம்ப சந்தோஷமா சொன்னாங்களாம்.

04:58

Speaker A

இந்த ஒரு திக்ரு செல்வத்தை ஈர்க்கக்கூடிய திக்ரு மட்டும் கிடையாது நமக்கு தேவைப்படக்கூடிய அனைத்தையுமே இழுத்து வரக்கூடியது.

05:09

Speaker A

எனவே இந்த ரமலான் மாதத்துல ஃபஜருடைய பாங்கு அப்படிங்கறது ரொம்ப இலகுவா கிடைக்கக்கூடிய நேரம் ஏன்னா மத்த நாட்கள்ல கூட ஃபஜருடைய பாங்கிற்கு பிறகுதான் நம்ம எழும்புவோம்.

05:25

Speaker A

ஆனா இந்த ரமலான் மாதத்துல ஃபஜருடைய பாங்கை எல்லோருமே கேட்கக்கூடியவங்களா நம்ம இருக்கிறோம் எனவே உடனே பாங்கு சொன்ன உடனே இந்த திக்ரை 100 முறை ஓதிட்டு அதற்கு பிறகு ஃபஜரை நீங்க தொழுங்க இன்ஷா அல்லாஹ் ரிஸ்கு மட்டுமல்ல நீங்க விரும்பக்கூடிய அனைத்தையுமே அல்லாஹுத்தஆலா உங்களுக்கு சிறப்பா தருவான்.

05:49

Speaker A

எனவே இந்த அற்புதமான திக்ரை அனைவரும் ஓதி இதனுடைய சிறப்பையும் பலனையும் அடைந்து கொள்ள.

06:00

Speaker A

எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக.

06:09

Speaker A

ஆமீன் என்று கூறி.

06:12

Speaker A

இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

06:16

Speaker A

இந்த பதிவு உங்க எல்லோருக்கும் பிடிச்சிருக்கும் மத்தவங்களுக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும் அப்படின்னு நினைச்சீங்கன்னா.

06:26

Speaker A

முடிஞ்ச அளவு ஷேர் பண்ணுங்க.

06:30

Speaker A

மேலும் நம்ம சேனலை இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்துட்டு இருந்தீங்கன்னா இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணி லைக் பண்ணிக்கோங்க.

06:43

Speaker A

மேலும் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் ஒவ்வொரு தேவைகளுக்குமே அழகான வஜிபாக்களை கொண்டதுதான் நம்ம அற்புத வஜிபாக்கள் கிதாப்.

06:59

Speaker A

இந்த கிதாப் உங்களுக்கு வேணும் அப்படின்னு நினைச்சாலும் சரி அல்லது கேட்பது கிடைக்கும் வஜிபாக்கள் தௌபா கிதாப் வேணும் அப்படின்னாலும் சரி அல்லது தமிழ்லயே 30 ஜூஸ் குர்ஆனும் எங்களுக்கு வேணும் அப்படின்னாலும் சரி ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே whatsapp மூலம் புக் பண்ணிக்கோங்க.

07:18

Speaker A

மேலும் இந்த ரமலான் மாதத்துல உங்களோட துஆவுல என்னையும் சேர்த்துக்கோங்க எல்லா மக்களையும் சேர்த்துக்கோங்க.

07:23

Speaker A

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=6774)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=6774)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=6774)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/100-transcript/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
