**ரமலான் இறுதி 10 நாளில் இந்த சூரா ஓதுங்க வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும்  — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/10-transcript/

Answers

## Questions about this video

ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் எந்த சூராவை ஓத வேண்டும்?

ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் சூரத்துல் கத்ர் ஓத வேண்டும். இந்த சூராவை ஓதுவதன் மூலம் ஆசைகள், விருப்பங்கள், தேவைகள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

சூரத்துல் கத்ர் ஓதுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

சூரத்துல் கத்ர் ஓதுவதன் மூலம் வருடம் முழுவதும் பிரச்சனைகள் தடுக்கப்படும், 70,000 வானவர்கள் நமக்காக துஆ செய்வார்கள். மேலும், இந்த சூராவை ஓதுவதன் மூலம் நம்முடைய தேவைகள் நிறைவேறும்.

சூரத்துல் கத்ர் எத்தனை முறை ஓத வேண்டும்?

ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஏழு தடவை சூரத்துல் கத்ர் ஓத வேண்டும். மற்ற மாதங்களில் ஓதுவதாக இருந்தாலும் ஏழு தடவை ஓதலாம்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ்.

00:07

Speaker A

நாம் அனைவருமே ஒரு பரக்கத் வாய்ந்த புனிதமான ரமலான் மாதத்தினுடைய இறுதி 10 நாளைக்கு வந்தாச்சு.

00:16

Speaker A

இந்த 10 நாள்ல செய்யக்கூடிய மிக முக்கியமான அமல்களை நம்ம தொடர்ந்து பார்த்துட்டு வரோம் அதுல வரக்கூடிய 10 நாளும் நம்ம எல்லோருமே அவசியம் ஓதிக்கொள்ள வேண்டிய மிகச் சிறப்பான ஒரு சூராவை தான் நம்ம பார்க்க போறோம்.

00:29

Speaker A

இந்த சூராவை பொறுத்தவரைக்கும் லைலத்துல் கத்ருடைய இரவுல ஓதுறதுக்கு மிக பொருத்தமான ஒரு சூரா அதுமட்டுமல்ல உங்களுடைய ஆசைகள், விருப்பங்கள், தேவைகளை நீங்க நிய்யத் வச்சுக்கிட்டு இந்த இறுதி 10 நாள்ல தினமும் நீங்க தவறாம இரவு தூங்குறதுக்கு முன்னாடி ஏழு தடவை ஓதிட்டு உங்களோட ஹாஜத்தை அல்லாஹ்விடத்தில கேட்டுட்டு வந்தீங்க அப்படின்னா இன்ஷா அல்லாஹ் இந்த ரமலான் முடியறதுக்கு முன்னாடி அல்லாஹ் உங்களுக்கு அந்த விருப்பத்தை நசீபாக்கி தந்துருவான்.

00:51

Speaker A

ஏன்னா இந்த சூராவுக்கு ஏராளமான சிறப்பு இருக்கு இதை ரமலான் அல்லாத மாதங்கள்ல ஓதுனாலே இரவுல தூங்குறதுக்கு முன்னாடி ஏழு தடவை ஓதுனாலே நம்மளுடைய நாட்டை அல்லாஹ் நிறைவேற்றி தருவான்.

01:03

Speaker A

இதைப்பற்றி நம்ம ஏற்கனவே நிறைய வீடியோக்கள் போட்டுருக்கோம்.

01:10

Speaker A

அதுல கூட நிறைய சகோதரிகள் இதை ஓதி எங்களுக்கு பலன் கிடைச்சுச்சு ஓதிய அடுத்த நாள் காலையிலேயே எங்களுக்கு பலன் கிடைத்தது பணம் எங்களுக்கு கிடைத்தது தேவையான விஷயங்கள் நடந்தது அப்படின்னு சொல்லி சொல்லி இருந்தாங்க.

01:57

Speaker A

ஏன்னா இது என்னுடைய வளமையான ஒரு சூராவும் கூட அதுவும் கட்டாயம் இந்த ரமலான் மாதத்தில் இருக்கக்கூடிய இறுதி 10 நாளை நம்ம எல்லோருமே அவசியம் ஓதி ஆகணும்.

02:08

Speaker A

இந்த சூராவை ஓதுங்க இந்த வருஷத்துக்கு தேவையானது அல்லாஹ்விடத்தில கேளுங்க உங்களுக்கு என்ன கஷ்டம் இருந்தாலும் அல்லாஹ் லேசாக்குவான்.

02:21

Speaker A

என்ன பிரச்சனை இருந்தாலும் அல்லாஹ் லேசாக்குவான்.

02:27

Speaker A

எவ்வளவு தேவைகள் இருந்தாலும் லேசாக்குவான்.

02:32

Speaker A

எவ்வளவு கோடிகள் கடன் இருந்தாலும் அல்லாஹ் லேசாக்குவான்.

02:40

Speaker A

நீங்க பெருசா ஏதாவது நிய்யத் வச்சுக்கிட்டு இந்த சூராவை ஓதுங்க.

02:47

Speaker A

அந்த சூரா என்ன அப்படின்னா.

02:50

Speaker A

அதுதான் சூரத்துல் கத்ர்.

02:53

Speaker A

இந்த சூராவை இந்த லைலத்துல் கத்ருடைய இரவுகள்ல யார் ஏழு தடவை ஓதுறாங்களோ அவங்களுக்கு வருடம் முழுவதும் பிரச்சனைகள் தடுக்கப்படுமாம் வானவர்கள் மூலமாக நமக்கு வரக்கூடிய சோதனைகள் தடுக்கப்படுது.

03:26

Speaker A

அதுமட்டுமல்ல 70,000 வானவர்கள் நமக்காக துஆ செய்றாங்க.

03:33

Speaker A

இந்த ஒரு அரிய வாய்ப்பு யாருக்குமே கிடைக்காது.

03:40

Speaker A

இந்த சூராவை மத்த நாட்கள்ல ஓதுனாலே துஆக்கள் கபூல் ஆகும் மறுநாள் காலையிலேயே அதனுடைய பலன் கிடைக்கும்.

03:50

Speaker A

அப்படிங்கும்போது இந்த லைலத்துல் கத்ருடைய இரவுகள்ல நம்ம ஓதும்போதும் 70,000 வானவர்கள் நமக்காக துஆ செய்றாங்க.

04:00

Speaker A

அப்படிங்கும்போது நம்மளோட துஆ எவ்வளவு வேகத்துல அல்லாஹ்விடத்தில கொண்டு செல்லப்படும் எவ்வளவு வேகமாக அல்லாஹ் நமக்கு அதை கபூலாக்கி தருவான்.

04:10

Speaker A

அப்படிங்கறத நம்ம யோசிக்கணும் அதனால இந்த சூராவை யாருமே மிஸ் பண்ணிடாதீங்க.

04:16

Speaker A

இந்த பதிவை முடிஞ்ச அளவுக்கு நிறைய நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

04:20

Speaker A

கட்டாயம் இதை எல்லோருமே ஓதுங்க இரவு தூங்குறதுக்கு முன்னாடி ஏழு தடவை ஓதிடுங்க.

04:32

Speaker A

ஒற்றைப்படை இரவுகள் மட்டுமல்ல மத்த இரவுகளையும் இந்த இறுதி 10 நாளுமே நீங்க இந்த சூராவை நிய்யத் வச்சுட்டு.

04:44

Speaker A

ஏதாவது பெரிய தேவைகளுக்காக நிய்யத் வச்சுக்கிட்டு இந்த சூராவை ஓதுங்க.

04:51

Speaker A

அந்த சூராதான் நம்ம எல்லோருக்கும்மே தெரிஞ்ச சூராதான்.

04:55

Speaker A

சூரா கத்ர் இந்த கத்ர் சூராவை நாலு தடவை ஓதனும் அப்படினாலே.

05:01

Speaker A

முழு குர்ஆனை ஓதிய நன்மையும் அல்லாஹ் நமக்கு தருவான்.

05:06

Speaker A

எனவே இந்த சூரா கத்ரை இந்த ரமலான்ல இறுதி 10 நாள்ல ஓதக்கூடிய நற்பாக்கியத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா நம் அனைவருக்குமே கொடுக்கட்டும்.

05:14

Speaker A

ஆமீன் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

05:18

Speaker A

இந்த பதிவு உங்க எல்லோருக்கும்மே பிடிச்சிருக்கும் அப்படின்னு நான் நினைக்கிறேன்.

05:21

Speaker A

முடிஞ்ச அளவுக்கு ஷேர் பண்ணுங்க.

05:24

Speaker A

மேலும் நம்ம சேனலை இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்துட்டு இருந்தீங்கன்னா.

05:29

Speaker A

இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணி லைக் பண்ணிக்கோங்க.

05:32

Speaker A

இன்னும் உங்களோட ஒவ்வொரு தேவைகளுக்கும் ஒரு தீர்வு கிடைச்சா நல்லா இருக்கும் அப்படின்னு நினைச்சீங்கன்னா.

05:40

Speaker A

நம்மளோட அற்புத வஜிபாக்கள் கிதாப்ல எல்லா தேவைகளுக்குமே வஜிபாக்கள் இருக்கு.

05:46

Speaker A

இந்த கிதாப் வேணும் அப்படின்னாலும் சரி அல்லது தமிழ் குர்ஆன் வேணும் அப்படின்னாலும் சரி.

05:53

Speaker A

கேட்பது கிடைக்கும் வஜிபா மற்றும் தௌபா கிதாப் வேணும் அப்படின்னாலும் சரி.

06:00

Speaker A

இன்னும் மூலிகை சீயக்காய் தூள் இன்னும் நலங்கு மாவு ஃபேஸ் பேக் சுருமா இன்னும் ஹேர் ஆயில் மிக்ஸ்.

06:10

Speaker A

இதுபோல எந்த ப்ராடக்ட் வேணும் அப்படின்னாலும் ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே whatsapp மூலம் புக் பண்ணிக்கோங்க.

06:19

Speaker A

இன்னும் அற்புத வஜிபாக்கள் கிதாப் வராதவங்க உடனே ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்க.

06:29

Speaker A

10 நாளைக்கு மேல ஆனவங்க மட்டும் கால் பண்ணி நீங்க அதைப்பற்றி உங்களோட விஷயங்களை தெரிவிக்கலாம்.

06:37

Speaker A

மேலும் இந்த ரமலான் மாசத்துல எல்லா மக்களுக்காகவும் துஆ செய்யுங்க அதுல என்னையும் ஸ்பெஷலா சேர்த்துக்கோங்க.

06:46

Speaker A

நானும் உங்க எல்லாருக்காகவும் துஆ செஞ்சுட்டு தான் இருக்கேன்.

06:49

Speaker A

அல்லாஹ் ஹுத்தஆலா நம் அனைவருடைய துஆவையும் கபூல் ஆக்கட்டும்.

06:52

Speaker A

ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=8893)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=8893)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=8893)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/10-transcript/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
