**நோன்பு திறக்கும் முன் 1 வார்த்தை ஒட்டுமொத்த துஆவும் கபூல்  — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/1-transcript-5/

Answers

## Questions about this video

நோன்பு திறக்கும் நேரம் ஏன் மிகவும் கிருபையான நேரம் என்று கூறப்படுகிறது?

நோன்பு திறக்கும் நேரம் மிக மிக கிருபையான நேரம், ஏனெனில் நாள் முழுவதும் அல்லாஹ்வுக்காக பசியோடும் தாகத்தோடும் காத்திருந்து, கண்களையும் நாவையும் பாதுகாத்து, தொழுகை தொழுது, குர்ஆன் ஓதி, அல்லாஹ்வை பயந்து நடந்திருப்பதால், அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்களை அல்லாஹ் கபூல் ஆக்குவான்.

நோன்பு திறக்கும்போது ஓத வேண்டிய குட்டி திக்ரு என்ன?

நோன்பு திறக்கும்போது பேரீச்சம்பழத்தை கைகளில் எடுத்துக்கொண்டு, முதலில் மூன்று முறை ஸலவாத் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு, நன்றி உணர்வுடன் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொல்ல வேண்டும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று ஏன் சொல்ல வேண்டும்?

அல்லாஹ் நமக்கு அனைத்தையும் கொடுத்திருப்பதற்கும், இந்த ரமலானை அடைய அனுமதித்ததற்கும், நோன்பு நோற்க வலிமை கொடுத்ததற்கும், நோன்பு திறக்கும் தருணத்தை கொடுத்ததற்கும் நன்றி செலுத்தும் விதமாக 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொல்ல வேண்டும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் நாம் அனைவருமே புனிதமான ரமலான் மாதத்துல இருக்கோம் இந்த மாதத்துல செய்யக்கூடிய மிகச்சிறப்பான அமல்களை நம்ம தொடர்ந்து பார்த்துட்டு வரோம்.

00:13

Speaker A

அதுல நிறைய சகோதர சகோதரிகள் என்கிட்ட கேட்டது என்ன அப்படின்னா,

00:17

Speaker A

நோன்பு திறக்கக்கூடிய வேளையில எந்த மாதிரியான திக்ருகள் ஓதணும் அப்படின்னு கேட்டிருந்தாங்க இன்றைக்கு ரொம்ப எளிமையான விதத்துல எல்லாருமே அந்த நேரத்துல துஆக்களை அதிகம் கேட்கக்கூடியவங்களா நம்ம இருப்போம்.

00:33

Speaker A

அந்த நேரத்துல எளிமையா ஓதிட்டு நம்மளோட துஆவை கேட்டா அல்லாஹ் மறுக்காம தரக்கூடிய வகையில ஒரு சிறந்த ஒரு குட்டி திக்ரை தான் நான் உங்களுக்கு சொல்லப்போறேன்.

00:43

Speaker A

முதல்ல நோன்பு திறக்கக்கூடிய ஒரு நேரம் என்பது மிக மிக கிருபையான நேரம்.

00:49

Speaker A

அந்த நேரத்துல நம்ம எந்த மாதிரியான துஆவை கேட்டாலுமே அல்லாஹுத்தஆலா நமக்கு கபூல் ஆக்குவான்.

01:00

Speaker A

ஏன்னா நாள் முழுக்க அல்லாஹ்வுக்காக பசியோடவும் தாகத்தோடவும் நம்ம காத்துக்கிட்டு இருக்கிறோம்.

01:10

Speaker A

நம்மளோட கண்களை பாதுகாத்து நம்மளோட நாவை பாதுகாத்து இன்னும் தொழுகையை தொழுது இன்னும் குர்ஆன் ஓதி,

01:20

Speaker A

இன்னும் மறைவான நேரத்துல கூட யாரும் பார்க்காத நேரத்துல கூட அல்லாஹ்வை பயந்து நம்ம நடந்திருக்கோம்.

01:30

Speaker A

இப்போ சூரியன் மறைகிற இந்த இஃப்தார் நேரம் அதாவது நோன்பு திறக்கக்கூடிய நேரத்துல நம்ம உட்கார்ந்து,

01:40

Speaker A

அல்லாஹ்விடத்தில ஒரு துஆவை நம்ம கேட்டோம் அப்படின்னா அல்லாஹுத்தஆலா நமக்கு அதை அப்படியே கபூல் ஆக்கி தருவான்.

01:48

Speaker A

இன்னும் அந்த நேரத்தை ஸ்பெஷலா மாத்தணும் அப்படின்னா இந்த ஒரு குட்டி திக்ரு போதும்.

01:54

Speaker A

இந்த ஒற்றை வார்த்தை போதும் உங்களுக்கு அல்லாஹ் அதிகம் அதிகம் கொடுப்பான்.

02:00

Speaker A

அந்த நேரத்துல நம்மளோட உள்ளம் நோன்பு திறப்பதற்கு எவ்வளவு ஆவலா இருக்குமோ அதைவிட பல மடங்கு ஆவலா அல்லாஹுத்தஆலா எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பானாம்.

02:10

Speaker A

என்னுடைய அடியான் நாள் முழுக்க எனக்காக பசியோடவும் தாகத்தோடவும் இருந்திருக்கான்.

02:17

Speaker A

இவன் இந்த நேரத்துல என்ன கேட்க போறான் அதை அனைத்தையுமே நான் கபூல் ஆக்க போறேன் அப்படின்னு சொல்லி அல்லாஹ் ரொம்ப ஆர்வத்தோடு இருப்பானாம்.

02:26

Speaker A

அதனால இந்த நேரத்தை எல்லோருமே பயன்படுத்துங்க இன்ஷா அல்லாஹ் இன்றைக்கு நான் சொல்லப்போறது ஒரு குட்டி திக்ருதான்.

02:34

Speaker A

நீங்க நோன்பு திறப்பதற்காக பேரீச்சம்பழத்தை கைகளில் எடுத்துக்கோங்க.

02:41

Speaker A

அதுல முதல்ல ஸலவாத் சொல்லுங்க மூணு தடவை ஸலவாத் சொல்லிட்டு,

02:46

Speaker A

அதற்கு பிறகு சொல்லுங்க அல்ஹம்துலில்லாஹ்.

02:50

Speaker A

நன்றி உணர்வோட இதை சொல்லணும் அல்லாஹ் நமக்கு,

02:55

Speaker A

அனைத்தையுமே கொடுத்திருக்கிறான்.

03:00

Speaker A

அல்லாஹுத்தஆலா நமக்கு கொடுத்த அனைத்திற்குமே நன்றி செலுத்துவதற்கு எப்படி நம்மளோட உள்ளத்திலிருந்து சொல்லுவோமோ,

03:08

Speaker A

அப்படி சொல்லுங்க அல்ஹம்துலில்லாஹ்.

03:11

Speaker A

இந்த ரமலானை அடைய நமக்கு அனுமதித்த அல்லாஹ்வுக்கு சொல்லுங்க அல்ஹம்துலில்லாஹ்.

03:17

Speaker A

இன்னும் நோன்பு நோற்க வலிமையை கொடுத்த ரப்பு கிட்ட சொல்லுங்க அல்ஹம்துலில்லாஹ்.

03:23

Speaker A

இன்னும் இந்த நோன்பு திறக்கக்கூடிய தருணத்தை நமக்கு கொடுத்த அல்லாஹ்விற்கு சொல்லுங்க அல்ஹம்துலில்லாஹ்.

03:30

Speaker A

மனதார சொல்லுங்க உள்ளத்திலிருந்து சொல்லுங்க.

03:34

Speaker A

இதுதான் உங்களோட இம்மை மறுமை வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் உங்களுக்கு அதிகம் அதிகம் கொடுக்கக்கூடிய ஒரு வார்த்தை.

03:43

Speaker A

ஏன்னா அல்லாஹ்வும் ரசூலும் நமக்கு சொல்றது என்ன அப்படின்னா,

03:50

Speaker A

நன்றி உணர்வோட நம்ம அல்லாஹ்வுக்கு அல்ஹம்துலில்லாஹ் சொன்னோம் அப்படின்னா,

03:57

Speaker A

அல்லாஹுத்தஆலா முன்னாடி நமக்கு கொடுத்ததை விடவும் அதிகம் அதிகம் கொடுப்பேன்னு சொல்றானாம்.

04:04

Speaker A

அதனால இந்த நோன்பு திறக்கக்கூடிய நேரத்தை நீங்க பயன்படுத்துங்க.

04:11

Speaker A

உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சரி எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் எவ்வளவு தேவைகள் இருந்தாலும் சொல்லுங்க.

04:17

Speaker A

அல்ஹம்துலில்லாஹ் சொல்லிக்கிட்டே இருங்க.

04:21

Speaker A

உங்களோட வாழ்க்கையில இருக்கக்கூடிய எல்லா பிரச்சனையுமே தூரமாகும்.

04:26

Speaker A

உங்களோட வாழ்க்கைக்கு தேவையான அனைத்துமே உங்களுக்கு கிடைக்கும்.

04:31

Speaker A

இன்னும் சில பேர் நினைச்சுக்கிறாங்க இந்த அல்ஹம்துலில்லாஹ்வை ரொம்ப நிம்மதியா இருக்கக்கூடிய ஒரு நேரத்துல,

04:39

Speaker A

ரொம்ப சந்தோஷமான விஷயங்களை கேட்கக்கூடிய நேரத்துல தான் சொல்லணும் அப்படின்னு கண்டிப்பா அப்படி கிடையாது.

04:47

Speaker A

நம்ம வந்து கஷ்டத்தோடவும் கவலையோடவும் இருக்கும்போது தான் அல்ஹம்துலில்லாஹ்வை அதிகமா சொல்லணும்.

04:56

Speaker A

அப்பதான் அல்லாஹுத்தஆலா நமக்கு அந்த கஷ்டத்திலிருந்து வெளியேறுவதற்கான வழியை காட்டித்தருவான்.

05:02

Speaker A

எனவே நம்பிக்கையோட சொல்லுங்க எந்த மாதிரி சோதனையில இருந்தாலும் சொல்லுங்க.

05:09

Speaker A

அல்லது உங்களோட விதியவே மாத்தணும் அப்படின்னு நினைச்சாலும் சொல்லுங்க.

05:15

Speaker A

அல்லாஹ் தான் விதியை தீர்மானிக்கிறான்.

05:20

Speaker A

கண்டிப்பா இந்த ஒரு வார்த்தை அந்த விதியை மாத்தி எழுதும்.

05:24

Speaker A

எனவே கஷ்டமா இருந்தாலும் உங்களுக்கு மனசுக்கு சந்தோஷமான ஒரு விஷயத்தை பார்த்தாலும் சொல்லுங்க.

05:30

Speaker A

அல்ஹம்துலில்லாஹ்.

05:32

Speaker A

இன்னும் நோன்பு திறக்கக்கூடிய நேரத்துல இதை மனதார சொல்லுங்க.

05:38

Speaker A

அல்லாஹுத்தஆலா அந்த நோன்பை உங்களுக்கு பல மடங்கு நன்மையா மாத்தித்தருவான்.

05:46

Speaker A

அதோட நீங்க அடுத்த நொடி கேட்கக்கூடிய அனைத்து துஆவையும் உங்களுக்கு கபூல் ஆக்கித்தருவான்.

05:52

Speaker A

எனவே ஒரே வார்த்தையில உங்களோட ஒட்டுமொத்த துஆவும் கபூல் ஆகணும் அப்படின்னா,

05:59

Speaker A

இந்த முறையை நீங்க கண்டிப்பா நீங்க ஓதிட்டு அல்லாஹ் கிட்ட நீங்க எவ்வளவு தேவையோ எடுத்து சொல்லுங்க.

06:04

Speaker A

மனதார ஒரு தடவை அல்ஹம்துலில்லாஹ் சொல்லிட்டு உங்களோட ஓராயிரம் தேவைகளை கேட்டா கூட அல்லாஹுத்தஆலா உங்களுக்கு அப்படியே கபூல் ஆக்கித்தந்துருவான்.

06:12

Speaker A

எனவே இன்றைய தினம் இதை நீங்க செஞ்சு பாருங்க இன்ஷா அல்லாஹ்.

06:17

Speaker A

ஒரே இஃப்தார்லயே உங்களுடைய துஆவை கபூல் ஆகுறதை நீங்க கண்கூடா பார்க்க முடியும்.

06:24

Speaker A

நாளை முதல் நீங்க இந்த வார்த்தையை மனதார சொல்றதுக்கு பழக்கப்படுத்திக்கிவீங்க.

06:30

Speaker A

அந்த அளவுக்கு நிறைய நளவுகள் ஏற்படும்.

06:33

Speaker A

எனவே ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்கக்கூடிய நேரத்துல அல்லாஹ் கொடுத்த அனைத்திற்குமே நன்றி செலுத்தக்கூடிய அடியாராக நம் அனைவருமே இருக்கிறதுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக.

06:43

Speaker A

ஆமீன் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

06:47

Speaker A

இந்த பதிவு உங்க எல்லோருக்கும்மே பிடிச்சிருந்தது அப்படின்னா கண்டிப்பா ஷேர் பண்ணுங்க.

06:52

Speaker A

மேலும் நம்ம சேனலை இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்துட்டு இருந்தீங்கன்னா இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணி லைக் பண்ணிக்கோங்க.

06:59

Speaker A

மேலும் இதுபோல துஆக்கள் கபூல் ஆகக்கூடிய நேரத்துல அல்லது நம்மளோட சோதனைக்கான காலங்கள்ல இன்னும் நமக்கு தேவைப்படக்கூடிய துஆக்கள் கபூல் ஆகக்கூடிய காலகட்டத்துல எந்த மாதிரியான திக்ருகள் எந்த மாதிரியான அமல்கள் செய்யலாம்.

07:11

Speaker A

அப்படிங்கிறதுதான் நம்ம ஒரு தொகுப்பாக போட்டுருக்கோம்.

07:17

Speaker A

அதுதான் நம்மளோட தயாரிப்புல அற்புத வஜீபாக்கள் என்ற தலைப்புல.

07:22

Speaker A

இந்த கிதாப் ஒவ்வொரு வீட்டிலுமே இருக்க வேண்டிய ஒரு பொக்கிஷம்.

07:28

Speaker A

இன்ஷா அல்லாஹ் வாங்கினீங்க அப்படின்னா உங்களுக்கே நல்லா தெரியும்.

07:31

Speaker A

ஒரு முறை நீங்க இதை வாங்கி கையில பார்த்தாலே தெரியும் அவ்வளவு ஒரு மகிழ்ச்சியா இருக்கும்.

07:37

Speaker A

ஏன்னா எல்லா தேவைகளுக்குமே இதுல வஜீபா இருக்கு.

07:40

Speaker A

எனவே இந்த கிதாப் வேணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணிக்கோங்க.

07:47

Speaker A

மேலும் 30 ஜூஸ் குர்ஆனும் தமிழ்ல கிடைச்சா நல்லா இருக்கும் அப்படின்னு நினைச்சீங்கன்னா தமிழ் குர்ஆன் ரெடியா இருக்கு.

07:53

Speaker A

ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணிக்கோங்க.

07:59

Speaker A

அதுமட்டுமில்ல கேட்பது கிடைக்கும் வஜீபா மற்றும் தௌபா கிதாப்.

08:04

Speaker A

ரெண்டு கிதாபும் வேணும் அவசியம் வேணும் அப்படின்னா உடனே ஆர்டர் போட்டுக்கோங்க.

08:11

Speaker A

ஏன்னா இந்த ரெண்டு கிதாபுமே நம்மகிட்ட ரொம்ப ரொம்ப குறைவாதான் இருக்கு.

08:15

Speaker A

இனி இந்த கிதாப் எங்ககிட்ட நீங்க கேட்டாலும் நாங்க கொடுக்க முடியாது.

08:20

Speaker A

அதனால இப்பவே புக் பண்ணிக்கோங்க.

08:22

Speaker A

மேலும் துஆக்கள் கேட்பதற்காக எப்போ கையேந்தினாலும் அந்த துஆவுல என்னையும் சேர்த்துக்கோங்க எல்லா மக்களையும் சேர்த்துக்கோங்க.

08:30

Speaker A

நானும் உங்களுக்காக துஆ செஞ்சுகிட்டு தான் இருப்பேன்.

08:33

Speaker A

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=5632)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=5632)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=5632)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/1-transcript-5/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
