**ரமலானில் இந்த 1 ஸூரா போதும் 660 முறை குர்ஆன் ஒதிய நன்மையுண்டு#surahtamil — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/1-660-transcript/

Answers

## Questions about this video

ரமலான் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட சூராவை ஓதுவதன் சிறப்பு என்ன?

ரமலான் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட சூராவை ஒரு முறை ஓதினால், 666 முறை குர்ஆன் ஓதிய நன்மை கிடைக்கும் என்று இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய நன்மையாகக் கருதப்படுகிறது.

இந்த சூராவை ஓதுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இந்த சூராவை ஓதுவதன் மூலம் 666 முறை குர்ஆன் ஓதிய நன்மை கிடைப்பதுடன், வாழ்க்கையில் பெரிய தேவைகள் நிறைவேறும் என்றும், அல்லாஹ் கேட்பதை நிச்சயம் கொடுப்பான் என்றும் இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூரா எவ்வளவு நேரம் ஓதக்கூடியது?

இந்த சூரா மிகவும் சிறியது அல்ல என்றாலும், சுமார் 10 நிமிடங்களில் ஓதக்கூடியது என்று இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலருக்கு இது மனப்பாடமாக இருக்க வாய்ப்புள்ளது.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.

00:10

Speaker A

நம்ம தினமும் ஒரு இபாதத்தை ரமலான்ல பார்த்துட்டு வரோம் அதுலயும் வந்து இன்னைக்கு பார்த்தீங்கன்னா ஒரு சூராவை பத்தி சொல்லப்போறோம்.

00:20

Speaker A

ஒரே ஒரு சூராதான் அது ஒரு சூரான்னு சொல்லிட்டு நிறைய சூராக்கள் எல்லாம் கிடையாது ஒரே சூரா இந்த சூராக்கள் நிறைய பேர் வந்து வளமையாக ஓதக்கூடிய சூராக்களா இருக்கு.

00:32

Speaker A

அதுவும் ஓதிட்டே இருந்தா இந்த சூரா எல்லாம் மனப்பாடம் ஆயிரும் இது ரொம்ப சின்ன சூரான்னு நான் சொல்ல மாட்டேன்.

00:39

Speaker A

ஆனா ஒரு 10 நிமிஷத்துல ஓதக்கூடிய ஒரு சூரான்னு சொல்லலாம் அதனால நிறைய பேருக்கு மனப்பாடமாக இருக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு.

00:45

Speaker A

இது வந்து நிறைய சிறப்புகள் கொண்ட சூரா பல்வேறு இடங்கள்ல பல்வேறு காலகட்டத்துக்கு நிறைய விஷயத்துக்கு இது வாஜிஃபாவாக இருந்திருக்கு.

00:56

Speaker A

அதனால அப்படிப்பட்ட இந்த சூராவுக்கு நம்ம அறியாத ஒரு சிறப்பு என்ன தெரியுங்களா இந்த ரமலான் மாதத்துல இந்த சூராவை ஒரு முறை ஓதுறதே நமக்கு வந்து பார்த்தீங்கன்னா 600 முறை குர்ஆன் ஓதிய நன்மை கிடைக்குது.

01:08

Speaker A

சுபஹானல்லாஹ் 600 முறை குர்ஆன் ஓதிய நன்மையா நினைத்து கூட நம்ம என்ன பண்ண முடியாது பார்க்க முடியாதுன்னு சொல்லலாம்.

01:18

Speaker A

600 முறைன்னு கூட சொல்லக்கூடாது 666 முறை வந்து பார்த்தீங்கன்னா குர்ஆன் ஓதிய நன்மைன்னு சொல்லலாம்.

01:25

Speaker A

அந்த அளவுக்கு வந்து மகத்தான நன்மை கொண்டதா இருக்கு இந்த ரமலான்ல எத்தனை குர்ஆன் உங்களால ஓத முடியும்.

01:32

Speaker A

ரொம்ப முயற்சி பண்ணா கூட நம்ம என்ன பண்ணுவோம் டெய்லி வந்து ஒரு ஜூஸு ஓதணும்னாவே வீட்ல மத்த வேலைகள் எல்லாம் இருக்கறதுனால நம்ம ஒரு குர்ஆன்ல இருந்து அதிகபட்சம் வந்து.

01:43

Speaker A

முடித்தவங்க என்ன பண்ணுவாங்கன்னா ரெண்டு குர்ஆன் ஓத ட்ரை பண்ணுவாங்க ஏன்னா நமக்கு பெண்களுக்கு ஒரு வாரம் பார்த்தீங்கன்னா நோன்பே இருக்காது.

01:50

Speaker A

அதனால நாம தினமும் ஒரு ஜூஸு ஓதினா ஒரு குர்ஆன் கூட முடிக்க முடியாது ஒரு ஜூஸுக்கு அதிகமா ஓதுனாதான் ஒரு மாசத்துல ஒரு குர்ஆன் முடிக்க முடியும்.

01:58

Speaker A

இதுல எங்க இருந்து நம்ம 600 குர்ஆன்லாம் முடிக்கிறது ஆனா அப்பத்த பெரியவங்கலாம் கேட்டீங்கன்னா 10 குர்ஆன் முடிச்சேன் 20 குர்ஆன் முடிச்சேன்னு சொல்லுவாங்க.

02:04

Speaker A

இன்னைக்கும் வேகமாக ஓதக்கூடியவர்கள் எல்லாம் தினமும் ஒரு நாளைக்கு அஞ்சு ஜூஸு ஓதக்கூடியவர்கள் எல்லாம் இருக்கிறாங்க.

02:11

Speaker A

ஆனா வேலை இருக்கக்கூடியவங்க குழந்தை இருக்கக்கூடியவங்க இவங்களால எல்லாம் வந்து செய்ய முடியாது.

02:16

Speaker A

ஆனா இந்த ஒரு அமலை செய்யுங்க அப்படி வந்து நிறைய ஓதக்கூடியவர்களே கூட நீங்க நன்மையில மிகைத்து விடலாம்.

02:23

Speaker A

அதுமட்டும் கிடையாது நன்மை மட்டும் கிடையாது ரமலான்ல இதுக்கு இவ்வளவு வந்து பிரயோஜனங்கள் இருக்கான்னு சொல்லிட்டு.

02:31

Speaker A

ஆச்சரியப்படுற அளவுக்கு உங்க வாழ்க்கையில பெரிய பெரிய தேவைகள் எல்லாம் நிறைவேறும் அதுலயும் அல்லாஹ் என்ன பண்ணிறான் தெரியுங்களா.

02:38

Speaker A

இதை நீங்க ஓதிட்டா போதும் அவ்வளவுதான் இன்னி வந்து இந்த 30 நாளும் ரமலான் முடியற வரையும் நீங்க கேட்கிறதை கொடுத்தே தீருவேன்னு சொல்லி அல்லாஹ் கொடுத்துறான்.

02:46

Speaker A

உங்களுக்கு எழுதி கொடுத்துறான்னு வச்சுக்கோங்க நீங்க கேட்கிறதெல்லாம் இன்னி உங்களுக்கு கேரண்டி.

02:52

Speaker A

உங்க துவாஸ் எல்லாமே கிராண்டட்ன்னு சொல்லிட்டு அல்லாஹ் சொல்லிறான் அந்த அளவுக்கு கேரண்டியா உங்களுக்கு.

02:58

Speaker A

துவாவை கிராண்ட் பண்ண வைக்கக்கூடிய சூரான்னு சொல்லலாம் இந்த சூரா.

03:02

Speaker A

அந்த சூராதான் சூரா யாசின் சூரா யாசினை பத்தி சொல்லும்போதே ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கு.

03:10

Speaker A

அதே மாதிரி குர்ஆனுடைய இதயமாக யாசின் சூரா இருக்குன்னு சொல்லிட்டு சொல்லப்படுது.

03:13

Speaker A

யார் ஒருவர் இந்த யாசின் சூராவை ஒரு முறை ஓதுறாங்களோ அவர்கள் 10 குர்ஆன் ஓதிய நன்மை கிடைக்குது.

03:20

Speaker A

அதே மாதிரி யார் ஒருவர் காலையில வந்து பார்த்தீங்கன்னா இந்த யாசின் சூராவை ஓதுறாங்களோ மாலை வரையும் அவர்கள் சந்தோஷமாக இருப்பாங்க.

03:28

Speaker A

பாதுகாப்பாக இருப்பாங்க அல்லாஹ்வுடைய பொறுப்புல இருப்பாங்க அவங்க கேட்பதெல்லாம் கிடைக்கும்.

03:33

Speaker A

அதே மாதிரி மாலையில ஒரு முறை ஓதினா காலை வரையும் அவங்க சந்தோஷமாக இருப்பாங்க.

03:40

Speaker A

பாதுகாப்பாக இருப்பாங்க அவங்க கேட்பதெல்லாம் கிடைக்கும் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு.

03:44

Speaker A

அப்ப ஒரு நாளைக்கு காலையில ஒரு தடவை சாயங்காலம் ஒரு தடவை நீங்க ஓதினா எத்தனை குர்ஆன் ஓதுற நன்மை கிடைக்குது.

03:50

Speaker A

20 குர்ஆன் ஓதுற நன்மை கிடைக்குது ஏன்னா ஒரு தடவைக்கு 10 குர்ஆன்.

03:54

Speaker A

அப்ப இரண்டு தடவைக்கு 20 குர்ஆன்.

03:56

Speaker A

இந்த 30 நாளும் என்ன ஆகும் 30 நாளும் இதை நீங்க செஞ்சீங்கன்னா ரமலான் மாதத்துல 660க்கு மேற்பட்ட குர்ஆன் ஓதிய நன்மை உங்களுக்கு கிடைக்குது.

04:03

Speaker A

சுபஹானல்லாஹ் நம்ம நிறைய சூரா சொல்ல வெறும் ஒரே சூராதான் அந்த சூராவையே.

04:09

Speaker A

காலையில ஒரு தடவை சாயங்காலம் ஒரு தடவை ஓதினாவே 660 தடவை வந்து குர்ஆன் ஓதிய நன்மை கிடைக்குதுன்னா.

04:16

Speaker A

எத்தனை பேத்துக்கு யாசின் சூரா மனப்பாடமா இருக்கு வருவாங்க உட்காருவாங்க மூணு நிமிஷத்துல ஒரு யாசின் சூராவை ஓதி முடிச்சிருவாங்க.

04:22

Speaker A

சல்லு சல்லுன்னு ஓதுவாங்க.

04:25

Speaker A

அந்த அளவுக்கு வந்து இலகுவான சூராவாக யாசின் சூரா இருக்கு.

04:30

Speaker A

நான் உங்களுக்கு அதனுடைய லிங்கே தரேன் கிராத்தோட தரேன்.

04:35

Speaker A

தமிழோ இருக்கும் ஓதியும் போட்டுருப்பாங்க ஓத தெரியாதவங்க பார்த்து ஓதலாம்.

04:41

Speaker A

இல்லாட்டினா நீங்க இந்த ஸ்கிரீன்ல வர தமிழை மட்டும் பார்த்துக்கோங்க காதுல ஓதுறதை கேட்டுக்கோங்க.

04:48

Speaker A

ஏன்னா நம்மனால வந்து ஓதி பழக்கம் இல்லாதவங்களுக்கு நிறைய பேருக்கு ஓத தெரியாதவங்களுக்கு ஓத முடியாது.

04:53

Speaker A

ஆனா குர்ஆனை ஓதுறதும் ஒரே நன்மைதான் ஓதுறதை கேட்கிறதும் ஒரே நன்மைதான்.

04:58

Speaker A

அதனால இந்த ரமலான் மாதத்துல அந்த எழுத்தை பார்த்துக்கிட்டே ஓதுற கிராத்தை கேட்டீங்கன்னாவே யாசின் சூரா ஓதுற நன்மை உங்களுக்கு கிடைச்சிரும்.

05:04

Speaker A

அதோட சேர்ந்து இதுக்கு வேற என்னென்ன சிறப்புகள் எல்லாம் இருக்குன்னு சொல்லிட்டு நீங்க பார்த்தீங்கன்னா இந்த சூராவை வானம் பூமி படைப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னாடி.

05:13

Speaker A

அல்லாஹ் வந்து இந்த சூராவை ஓதி காட்டுகிறான் அப்போது மலக்குகள் சொன்னாங்களாம்மா யாருக்கு இந்த சூரா ஓதப்படுதோ.

05:20

Speaker A

அந்த சமுதாயம் ரொம்ப பாக்கியமானவங்க.

05:24

Speaker A

எந்த ஒரு சமுதாயம் இதை நாவால ஓதுறாங்களோ அவர்களுக்கு சுபச்செய்தி உண்டாகட்டும்.

05:30

Speaker A

எந்த ஒரு சமுதாயம் இதை மனதால சுமக்குறாங்களோ அவர்களுக்கு சுபச்செய்தி உண்டாகட்டும்.

05:36

Speaker A

இதை தொடர்ச்சியாக ஓதி வராங்களோ அவர்களுக்கு சுபச்செய்தி உண்டாகட்டும்.

05:42

Speaker A

இன்னும் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் எல்லா நல்லதும் கிடைக்கட்டும்னு சொல்லிட்டு.

05:48

Speaker A

மலக்குமார்களே இதை ஓதுனவங்களுக்கு வந்து வாழ்த்துக்கள் தெரிவிச்சிருக்காங்க சுபச்செய்திகள் சொல்லிருக்காங்க.

05:55

Speaker A

அப்ப இந்த சூராவை வந்து காலையில ஒரு முறை சாயங்காலம் ஒரு முறை ஓதினால் ரொம்ப சிறப்பாக இருக்கும்.

06:00

Speaker A

காலையிலன்னு சொல்றோம் ஆனா இந்த குறிப்பிட்ட நேரத்துலதான் ஓதணும்னுலாம் கிடையாது.

06:05

Speaker A

அதனாலதான் பொதுவா நம்ம காலையில மாலையிலன்னு சொல்லிறோம்.

06:08

Speaker A

இன்னும் இந்த சூராவை ஓதுறதுனால உங்களுடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படுது.

06:12

Speaker A

இந்த ரமலான் மாதம் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டிய மாதம் அந்த மாதத்துல நமக்கு பாவங்களும் மன்னிக்கப்படுறதுக்கு இந்த சூராவே காரணமாக இருக்கு.

06:18

Speaker A

அப்ப இன்ஷா அல்லாஹ் இதை தினமும் நம்ம ஓதி வருவோமா.

06:21

Speaker A

அல்லாஹ்வே போதுமானவன்.

06:23

Speaker A

நீங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க பலன் தரக்கூடிய அமல்களை நம்ம நினைவுபடுத்திட்டு இருக்கோம்.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=6069)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=6069)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=6069)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/1-660-transcript/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
